பிலதெல்பியா சபையின் காலம் Jeffersonville, Indiana, USA 60-1210 1சகோதரன் போய் எனக்காக ஒரு பெரிய சூடான செர்ரிபை (Cherry pie) வாங்கிக் கொண்டு வந்தார். (செர்ரி பை என்பது செர்ரி பழமும் இறைச்சியும் மாவும் முறையாக கலந்து சேர்த்து ரொட்டி சுடுவது போல் சுட்டு அதன் மேல்பாகத்தில் முறுகலாக இருக்கும் ஒருவகை சுவையான தின்பண்டம் - மொழி பெயர்ப் பாளர்) எனக்கு செர்ரி பை பிடிக்கும் என்று ஜாடையாக சொல்வது பயனை அளிக்கிறது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், சகோதரன் நெவில் அவர்களே? அதோ அவர், பாருங்கள்? அது ஒரு விருப்ப முள்ள தின்பண்டம் போல் காணப்படுகிறது. அது உண்மை யிலேயே அருமையாக இருக்கிறது. செர்ரி பை சாப்பிடுவதைப் பற்றி நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவதுண்டு. அதாவது, செர்ரி பை சாப்பிடும்பொழுது, உங்கள் வாயில் அதன் கொட்டை அகப்பட்டுவிடுகிறது. அப்பொழுது நான் செர்ரி பை-ஐ தூக்கி எறிந்து விடுவதில்லை. அங்கே வாயில் அகப்படுகிற அதன் கொட்டையைத் தான் நான் தூக்கியெறிந்துவிட்டு, செர்ரி பையை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பேன். அவ்விதமாகத்தான் நீங்கள் இந்த செய்தியைக் குறித்தும் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். செய்தியை என்னோடு நீங்கள் புசித்துக்கொண்டே போகையில், உங்களால் ஜீரணிக்க முடியாத (கிரகிக்க முடியாத) ஏதாவதொரு விஷயம் வரும்போது, அதற்காக, முழு விஷயத்தையுமே வீசியெறிந்துவிடாதீர்கள். எது உங்களுக்குப் புரியவில்லையோ, அதை (அந்த விதைப்பாகத்தை) மட்டும் அகற்றி வைத்துவிட்டு, தொடர்ந்து செய்தியாகிய அந்த பை (Pie)-ஐ சாப்பிட்டுக் கொண்டேயிருங்கள். அவ்விதமாகத் தான் அதைச் செய்ய வேண்டும். பாருங்கள். நீங்கள் பொறித்த கோழியை விரும்புகிறீர்களா? ஏறத்தாழ யாவருமே அதை விரும்பத்தான் செய்கிறார்கள். நீங்கள் கோழிக் கறி சாப்பிடும்போது, உங்கள் வாயில் எலும்பு கடிபடுகிறது. அப்பொழுது நீங்கள் கோழி வறுவலையே தூக்கியெறிந்து விடுவ தில்லை, வாயிலகப்பட்ட எலும்பை மட்டுமே தூக்கியெறிகிறீர்கள். அது சரிதானே, பேட் அவர்களே? எலும்பை வீசியெறிந்துவிட்டு, தொடர்ந்து கோழிக் கறியை புசித்துக்கொண்டேயிருக்கிறீர்கள். 2நல்லது, நமக்கு எலும்போ , அல்லது கொட்டையோ அகப்படாத ஒரு மகத்தான உணவு நாம் உண்பதற்கு இருக்கிறது என்பதற்காக நாம் சந்தோஷமாய் இருக்கிறோம். ''மன்னா'' என்றழைக்கப்படும், முழுவதும் பரலோகத்தின் இனிமையினால் நிறைந்திருக்கும் அப்பங்கள் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தது. தாவீது ஒரு தடவை, “கன்மலையின் தேனைப்போல் மதுர முள்ளது'' என்று கூறியிருக்கிறான் என்று நம்புகிறேன். ஒரு கவியும், ''அது கன்மலையின் தேனாக இருக்கிறது'' என்று பாடியிருக்கிறார் என்று நம்புகிறேன். ஓ, என் சகோதரனே, கன்மலையின் தேனைப்போல் மதுரமுள்ள அதை நீங்கள் ருசி பார்த்ததுண்டா ? ''என் சகோதரனே, அது கன்மலையின் தேனாக இருக்கிறது''. அவ்விதமாகத்தான் அது உள்ளது. 3ஒரு சமயம், கன்மலையின் தேன் என்றால் எப்படிப்பட்டதா யிருக்கும் என்று நான் அறிய விழைந்ததுண்டு. ''நல்லது, ஒருவேளை அவர்கள் ஒரு கன்மலையில் எங்காவது ஒரு தேன் கூட்டைக் கண்டு பிடித்திருப்பார்களாய் இருக்கும்'' என்று எண்ணினேன். அதைப்பற்றி தியானித்துக்கொண்டேயிருக்கையில், அதைப்பற்றி எனக்கு ஆவியினால் ஏவப்பட்டுக் கிடைத்த ஒரு சிறு சிந்தனை உண்டாயிற்று. நான் அதைப்பற்றி அறிய அவாக்கொண்டு தேடியபோது அது உண்டாகவில்லை. ஆனால் பின்னால் ஒரு சமயத்தில் நான் அது என்னவென்று அறிந்து கொள்ள லாயிற்று. அதாவது ஆட்டு மந்தையை மேய்க்கும் மேய்ப்பர்கள் ஒவ்வொருவரும்...... அதைப்பற்றி ஒரு காரியம் உண்டு என்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நமது சரீரங்கள் பூமியின் மண்ணி னால் உண்டாக்கப்பட்டவையாகும். உயிருள்ள ஒவ்வொன்றும் மண்ணிலிருந்து தோன்றினவையாகும். மேய்ப்பர்கள், தங்கள் மந்தையின் ஆடுகள் வியாதிப்பட்டால், அல்லது ஏதாவது உடல் நிலைப் பழுது உண்டானால், சுண்ணாம்பு அவைகளுக்கு உதவி செய்கிறது என்று நம்பினார்கள். வியாதிப்படும் அவ்வாடுகள் பாறையை நாக்கால் நக்கிடவேண்டும் என்று விரும்பிடும். அவ்வாறு ஆடுகள் பாறையில் போய் நாக்கால் நக்குவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவ்வாறு ஆடுகள் பாறையில் தங்கள் நாக்கால் நக்கும்படி செய்வதற்காக அவர்கள் கொஞ்சம் தேனை அப்பாறையில் ஊற்றிவிடுவார்கள். அப்பொழுது தேன் தடவப் பட்ட அப்பாறையை ஆடுகளானது போய் நாக்கால் நக்கும், தேனை நக்குகையில், பாருங்கள், அவைகள் அப்பாறையையும் நக்கி விடும். 4நம்மிடம், சிறிய பை நிறைய தேன் உள்ளது. நாம் அதை பாறையாகிய கிறிஸ்து இயேசுவிலே ஊற்றிடுவோம். ஒரு சபையின் மேலல்ல. ஆடுகளாகிய நீங்கள் போய் அக்கன்மலையில் வடிந்தோடும் அத்தேனை நக்குங்கள்; அப்பொழுது நிச்சயமாக நீங்கள் குணமடைவீர்கள், நலமடைவீர்கள். அக்கன்மலையை நீங்கள் நக்கும் பொழுது, பாவத்தொல்லைகள் யாவும் உங்களை விட்டு அகன்று போய்விடும். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். 5சுகமளித்தலைக் கொடுக்கக்கூடிய ஒரு பாறையைப் பற்றி ஒரு விஷயம் உண்டு. முன் காலங்களில் நாய்கடிக்கான ஊசிமருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், “மேட் ஸ்டோன்'' (mad stone) என்ற ஒரு பாறையை வைத்திருப்பார்கள். ஒரு நபர் வெறி நாய் ஒன்றினால் கடிக்கப்பட்டால், அவனை அந்த 'மேட் ஸ்டோன்'' என்ற கல்லின்மேல் அமரவைப்பார்கள். இப்பொழுது அக்கல்லானது... அந்நபர் அந்த பைத்தியம் பிடித்தவர்களைக் குணமாக்கும் கல்லோடு ஒட்டிக்கொண்டு விட்டால், அவன் குணமடைந்தான். அவனோடு அந்தக் கல் ஒட்டிக்கொள்ளாவிடில், அந்நோயாளி வியாதி முற்றிப்போன நிலையில் ஆகிவிட்டான் என்பதாக அர்த்தம், அந்நபர் மரித்துப்போய்விடுவான். எனவே, இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், மிக மோசமான கடி, வெறி நாய்க்கடி இல்லை. பிசாசினால் ஏற்படுவதுதான் மிக மோசமாக இருக்கிறது. அதி லிருந்து குணமடைய நமக்கு ஒரு கல் உண்டு. அதுதான் நித்திய கன்மலையாகும். அதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அதை நீங்கள் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிற வரையிலும் நீங்கள் நலமுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பிடியைத் தளர்த்தி விடாதீர்கள். அதனோடு பற்றிக்கொண்டவாறு இருங்கள். நீங்கள் நலமடைவீர்கள். நாம் இன்றிரவுக்குரிய பாடத்திற்கு போகுமுன்னர், முடிந் தால் ஜெபத்திற்காக சற்று நேரம் எழுந்து நிற்க விரும்புகிறோம். நீங்கள் ராபர்ட் டார்ட்டியின் சகோதரி தானே? அவள் நேற்று என்னை தொலைபேசியில் அழைத்து, தனக்கு ஜெபம் தேவைப்படுவ தாகச் சொல்லிக்கொண்டிருந்தாள் என்று நான் நம்புகிறேன். எனக்குத் தெரியவில்லை... நீ சற்று அவளைப்போலக் காணப்பட்ட தால், நீ அவள்தானோ அல்லது இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. நான் நேற்று மாலையில் உன்னை இங்கே கண்டேன். இப்பொழுது எத்தனைபேர் தேவனுக்கு முன்பாக நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள், அல்லது எத்தனை பேர் தேவன் தங்களை நினைத்தருள வேண்டும் என்று விரும்பு கிறீர்கள்? 6எங்கள் பரம பிதாவே, சிக்காகோவிலுள்ள எங்களுடைய அந்த பாடல் நடத்துபவர் வழக்கமாக பாடும், ''கண்ணீர் வழிந் தோடுகையில் என்னை நினைத்தருளும்'' என்ற பாடலின்படி, கர்த்தாவே, என்னை இப்பொழுது நினைத்தருளும். மரண நேரம் சூழ்கையிலும், வாழ்க்கை முழுவதிலும், நீர் எங்களை நினைத்தருள வேண்டுமென நாங்கள் நிரும்புகிறோம். கர்த்தாவே, நாங்கள் பாவிகளாக இருக்கிறோமே, அவ்வண்ணமாக எங்களைக் குறித்து நினைத்தருளாமல், எங்கள் பாவங்களை அறிக்கை செய்துவிட்ட கிறிஸ்தவர்களாகவும், உம்முடைய குமாரனும் எங்கள் இரட்சகரு மான இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாகவும் எங்களைக் குறித்து நீர் நினைத்தருள வேண்டுகிறோம். அவரே எங்களின் பாவங்களுக்காக, பாவ பிராயச்சித்தமாயிருக்கிறாரே. எங்களுக்கு இருக்கிற இரட்சிப்புக்கான ஒரே வாய்ப்பும், ஒரே வழியும், ஒரே சாதனமும் அது ஒன்றே தான் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அது எந்தவொரு சபையின் மூலமாகவும் அல்ல, அல்லது வேறு எந்த இயந்திர சாதனத்தின் மூலமாயும் அல்ல, அல்லது ஒரு சங்கத்தின் மூலமாயும் அல்ல, ஆனால் இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, அவர் மூலமாக மட்டுமேதான். எனவே நாங்கள் இன்றிரவில் அவரது நாமத்தில் அணுகு கிறோம். நாங்கள் உம்முடைய வேதத்தை படித்து, இன்றிரவில் எங்களுக்காக என்ன வைத்திருக்கிறீர் என்பதை அறிவதற்காக கூடி வந்திருக்கையில், எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக் கிறோம். ஜீவனுள்ள சபையாக எங்களுடைய ஆவிக்குரிய சரீரங்களை கட்டுவதற்கு உதவி செய்யும். நீர் வாசம் பண்ணுவதற்கு ஏற்றதாகவும், நீர் தாராளமாக எங்கள் மத்தியில் உலாவவும், தங்குதடையின்றி சௌகரியமாக உமது ஜனங்கள் மத்தியில் நடந்து நீர் திரியவும், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நீர் எமக்கு எடுத்தியம்ப உமக்கு இயலவும், நீர் கூறியதை அப்படியே நாங்கள் செய்பவர்கள் என்பதை நீர் அறிந்திருக்கவும் கூடியதான ஒரு சபையாக நாங்கள் ஆகட்டும். 7பிதாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னும் நீர் விரும்புகிறபடி எங்கள் மூலம் பேசத்தக்கதான நிலையில் நாங்கள் இருக்கவில்லை என்பதை அறிவோம். எனவே இன்றிரவில் நீர் எங்களில் இருக்கிற தேவைக்கு மேலதிகமாக காணப்படும் மாம்சமாகிய மதியீனத்தை விருத்தசேதனம் செய்து அகற்றிப்போடும் என்று வேண்டிக்கொள்கிறோம். அதினால் நீர் எங்களை எந்த வேளையிலும் உபயோகிக்கும்படி, நாங்கள் எங்களை உமக்கென முழுவதுமாக தத்தம் செய்திட உதவி செய்தருளும். இன்றிரவில் அவ்வேளையில், வேதாகமத்திலிருந்து பொற்பாளங் களை நாங்கள் தோண்டியெடுக்கச் செய்து, அதை பாலீஷ் செய்து, அதிலிருந்து கிறிஸ்து மகத்தான இச்சபைக்காலத்தில் பிரதிபலிப் பதை மக்கள் காணும்படி செய்ய நீர் எங்களை உபயோகித்தருளும். பிதாவே. இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம், ஆமென். நாம் இதுவரை சபைக்காலங்களைப்பற்றி பார்த்து வந்தோம். இன்றிரவில் ஆறாவதான சபைக்காலத்தைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். இவ்வாறு ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு சபைக்காலத்தைப் பற்றி நாம் பார்த்து வந்துள்ளதில் நாளை இரவில் சபைக்காலங்களைப் பற்றி படித்து முடித்திருப்போம். நாம் இவைகளை திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்றிரவில் நாம் பார்க்கப்போவது பிலதெல்பியா சபைக் காலமாகும். இந்த சபைக்காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்கியவர், அல்லது தூதர் செய்தியாளராக விளங்கியது ஜான் வெஸ்லி தான் என்று நாம் பயபக்தியுடனும் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறோம். இந்த சபைக்காலம் கி.பி.1750ல் ஆரம்பித்தது. அப்பொழுதுதான் லூத்தரன் சபைக்காலமானது முடிவுற்றது. இந்த ஆறாவது சபைக்காலமானது கி.பி. 1906-ம் ஆண்டு வரை நீடித்தது. இது வெஸ்லியின் சபைக்காலம் ஆகும். அது முடிந்தபிறகு லவோதிக் கேயாவின் காலம் பிறந்தது. இந்த சபைக்காலமானது 'சகோதர சிநேகத்தின்'' கால மாகும். மகத்தான “மிஷனரி'' யுகமும், ”திறந்த வாசல்'' யுகமும் இதுவே. 'இச்சபைக்காலத்தில் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படும் பலனானது, தேவாலயத்தில் தூணாக ஆக்கப்படுத லேயாகும். மற்றும், மூன்று நாமங்கள் வெளிப்படுதலும் கிடைக் கிறது. அவையாவன: தேவனுடைய நாமம், தேவனுடைய நகரத் தின் நாமம், தேவனுடைய புதிய நாமம் இவற்றின் வெளிப்படுத்து தல் இந்த சபைக்காலத்திற்கு அளிக்கப்படுகிறது. இப்பொழுது, சபையானது.... இந்த சபைக்காலம் வெளிப்படுத்தின விசேஷம் 3:7ல் துவங்கி 13ம் வசனத்தில் முடிவடைகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 3:7 முதல் 13. 8நாம், இச்சபைக்காலங்களைப் பற்றி ஒவ்வொரு இரவிலும் சிறிது பின்னோக்கிப்போய் திரும்பிப் படிக்கிறோம். முதலாவதான சபைக்காலம் எபேசு சபைக்காலமாகும். அந்த சபைக்காலத்திற் குரிய தூதன் அல்லது ஒளி (ஊழியக்காரன்) யார் என்பதை யாராவது கூறமுடியுமா? பவுல். எபேசு சபைக்காலமானது கி.பி. 55 முதல் 170 முடிய நீடித்தது கி.பி. 55-ஐ இச்சபைக்காலத்தின் துவக்கமாக நான் எடுத்துக்கொண்டதற்குக் காரணம், அவ்வாண் டில்தான், பவுல், தனது மிஷனரி பிரயாணத்தை துவக்கினான். அப்பொழுதுதான் அவன் எபேசு என்ற அந்த பட்டணத்தில் சபையை நிறுவினான். மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் ஏனைய சபைகளையும் அவன் நிறுவினான். இரண்டாவது சபைக்காலமானது சிமிர்னா சபைக்கால மாகும். வகுப்பில் யாருக்காவது இந்த சபையின் தூதன் யார் என்பதைக் கூறமுடியுமா? ஆம் அது ஐரேனியஸ் தான் என்பது சரி. இச்சபைக்காலமானது கி.பி.170 முதல் கி.பி.312 முடிய நீடித்தது. மூன்றாம் சபைக்காலமானது பெர்கமு சபைக் காலம் ஆகும். இச்சபைக் காலத்தின் பரிசுத்தவான் யார் என்பதை வகுப்பில் கலந்துகொண்ட யாராவது நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா? பரிசுத்த மார்ட்டின் என்பது சரிதான். கி.பி. 312 முதல் கி.பி. 606 முடிய இச்சபைக்காலம் நீடித்தது. 9அதற்கடுத்த சபைக்காலம், தியத்தீரா சபைக்காலம் ஆகும். இச்சபைக் காலத்தின் பரிசுத்தவான், செய்தியாளன், தூதன் யார் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? அது கொலம்பா என்ப வர் ஆகும். கி.பி. 606 முதல் 515 முடிய. அதற்கடுத்த சபைக்காலம் சர்தை சபைக்காலமாகும். அதை நாம் நேற்றிரவில் பார்த்தோம். மேலும், யாராவது.... அச்சபைக் காலத்திற்குரிய தூதன் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஞாபகத்திலுள்ளதா? மார்டின் லூத்தர்தான் அத்தூதன் ஆகும். இவருடைய சபைக்காலம் கி.பி.1520 முதல் கி.பி.1750 முடிய நீடித்தது. இன்றிரவில் நாம் பிலதெல்பியா சபைக்காலத்தைப் பற்றிப் படிக்கப்போகிறோம். அச்சபைக்காலத்திற்குரிய தூதன் ஜான் வெஸ்லியாவார். கி.பி.1750 முதல் கி.பி.1906 முடிய இச்சபைக் காலம் நீடித்தது. அது ''சகோதர சிநேகத்தின்'' காலமாக விளங்கியது. 10இவ்வேழு பட்டினங்களிலும் காணப்பட்ட இந்த சபைகள் ஒவ்வொன்றும், வரப்போகும் ஒவ்வொரு சபைக்காலங்களில் இருக்கும் சபைகளுடைய குணாதிசயத்தை பிரதிபலிப்பவையாக இருந்து வந்திருக்கின்றன. நேற்றிரவில் நாம் மார்ட்டின் லூத்தரைப் பற்றி பார்த்தோம். இவைகளில் நான்... இதை நான் பிரசங்கிப்பதற்கும், அவைகள் ஒலி நாடாக்களில் வாலிபப் பிள்ளைகளால் பதியப் பெறுவதற்கு மான காரணம் என்னவெனில்.... நான் இதைக் குறித்து நாள் முழுவதும் படித்துக்கொண்டிருக்கிறேன். “நாள் முழுவதும் படித்துவிட்டு, வரலாற்றிலிருந்து ஒரு சிறிதளவே இங்கு வந்து கூறுகிறீர்களே'' என்று நீங்கள் கேட்கக்கூடும். இல்லை வரலாற்றுக் குறிப்புகள் நாம் தயாரித்தளிக்கப்போகும் புத்தகத்தில் இடம் பெறும், பாருங்கள். இங்கே கூடி வந்திருக்கிற நாம், இச்செய்தியின் தேவ ஆவியின் ஏவுதலினால் அளிக்கப்படும் விஷயங்களை பெற்றுக்கொள்வதற்காக, இவைகளை இங்கு பிரசங்கிக்கிறேன். வரலாற்று விஷயங்களை நான் உரிய புத்தகத்திலிருந்து வாசித்தளிக்க முடியும். ஆனால் தெய்வீக ஏவுதலினால் கிடைக்கும் ஆவிக்குரிய விஷயங்களைப் பெறுவதற் குத்தான் நான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவைகளை பிரசங்கித்து ஒலிநாடா வில் பதிந்து கொண்டால், நாம் அதிலிருந்து அவற்றை வேண்டும் போது பெற்றுக்கொள்ள முடியும். அதன் பிறகு, நாம் சபைக்காலங் களைப் பற்றிய வரலாற்று தகவல்களையும், இங்கே இப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவோடு உன்னதங் களிலே வீற்றிருக்கையில் நமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் தெய்வீக ஆவியின் வெளிப் பாடுகளையும் ஒருங்கிணைத்திடுவோம். அப்படிப் பட்டதான ஒன்று, இந்த சபைக்காலங்களைப் பற்றிய ஒரு சிறிய ஆனால் மிகச்சிறந்த வியாக்கியானப் புத்தகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கர்த்தர் தாமே அதற்கு ஆசீர்வாதங்களை அளிப்பாராக. 11நேற்றிரவில் நாம் சர்தை சபைக்காலத்தைப் பற்றிப் பார்த்தோம். கிரேக்க மொழியில் 'சர்தை'' என்ற சொல்லுக்கு உண்மையிலேயே “தப்பித்துக் கொண்டவன்'' என்று பொருள். ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பின்படி ”மரித்தவன்'' என்று பொருளாகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அது 'மரித்த'' நிலையில் உள்ளதாகவும், அதே சமயத்தில் ''தப்பித்துக்கொண்ட வன்'' என்ற நிலையையும் உடையதான சபையாகவும் இருக்கிறது. ஏனெனில் அந்த சபையானது கி.பி.1500 வரையிலும், அல்லது 1520 வரையிலும் போப்பு மார்க்க ஆட்சியின் கீழ், இருண்ட காலங் கள் என்றழைக்கப்பட்ட அக்காலத்தில், மரித்துப்போன நிலையில் இருந்தது. அக்காலத்தில் தான் கிறிஸ்தவம் தனது மிகக் கேடான சரிவுற்ற நிலையில் காணப்பட்டது. அதுபோல் ஒரு காலத்திலும், ஏன் இந்த லவோதிக்கேயா சபைக்காலத்தில்கூட இல்லாத அளவுக்கு, மிக மோசமான நிலையில் இருந்தது. 12குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றை நீங்கள் அங்கே காணலாம். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளல் வேண்டும். அது என்னவெனில்: ஒவ்வொரு சபைக்காலமும் ஆரம்பித்த போது, அச்சபைக் காலத்தில் என்ன நிலைமை காணப்பட்டதோ, அடுத்தடுத்து வரும் சபைக்காலங்களிலும் அதே போன்ற நிலைமை காணப்பட்டது. அந்த சபைக்காலங்கள் ஒவ்வொன்றும், அடுத்து வரும் சபைக்காலத்தின்மேல் கொஞ்சம் நீண்டு தொடுத்துக் கொண்டு இருந்தது (lap over). வரலாற்றை நீங்கள் கருத்தாய் ஆராய்ந்தால், நீங்கள் அதைக் கண்டு கொள்ளுவீர்கள். அது, ஒன்றின் முடிவுப்பாகம் அடுத்ததின் துவக்கப் பாகத்தில் மேல் வரைக்கிலும் நீண்டிருப்பதாக இருந்தன. ஒரு சபைக்காலம் முடிந்துபோகிறபோது, அதன் மத்திய காலத்தில் வருகிற அச் சபையின் தூதன், அது இழந்துபோன விசுவாசத்திற்கு அதை திரும்ப அழைக்கிறான். அவ்வாறே எக்காலமும் இருந்து வந்துள்ளது. 13வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்கு வருவதற்கு முன்னால் வேதத்தில் இருக்கிற கடைசிப் புத்தகமான யூதாவின் நிருபத்தைப் பாருங்கள். ''பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாக போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது'' வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் வருவதற்கு முன்னரும், அப்போஸ்தல நிருபங்களின் முடிவின் இடையிலும் தொக்கிக் கொண்டிருக்கிற ஒன்றாக இந்நிருபம் இருக்கிறது. ஏனெனில் அப்போஸ்தலர்களில் அநேகர் அப்போது மரித்து விட்டிருந்தனர். அவர்கள் கடந்து போய் விட்டனர். அச்சமயத்தில் ஜீவித்து வந்தவன், திவ்யவாசகனாகிய பரிசுத்த யோவான்தான். அவன் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எழுதுவதற்காக, கர்த்தருடைய தூதனிடத்திலிருந்து வெளிப்படுத் தலைப் பெற்று, அதை எழுதினான். இவ்வாறு ஒன்றைத் தொக்கிக் கொண்டு ஒன்று அடுத்தடுத்து வந்தன. நான் அதை விளக்கிக் கூறிக் கொண்டு வருகையில், நீங்கள் அதை கவனித்து, அதை புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சர்தை சபைக்காலத்திலும்கூட, விவாககாலமாக இருந்த அக்காலத்தில் எவ்வாறு இருந்தது... உண்மையில், தியத்தீரா வரையிலும் சபையானது தன் முழு நிலைநிற்றலில் உண்மையாக வரவில்லை. ஆனால் அது சர்த்தையில் வந்தபோது, விவாகம் செய்துகொண்டதாக சபை ஆனது. சர்தை என்றால் விவாகம் என்று அர்த்தம். 14இங்கே இச்சபையின் காலத்தில் அது விவாகம் செய்து கொள்ளுகிறது அதன்பின்பு அது அதற்கடுத்து வந்த சபைக்குள்ளும் நீண்டுபோய் முடிவடைகிறது. கடந்த இரவில், லூத்தர் “மரித்துப் போன' என்ற நாமத்தோடு வெளியே வருகிறார். செத்துப்போன தான அர்த்தம் கொள்ளும் ஒரு பெயரோடு புறப்பட்டு, பிறகு, ”தப்பித்துக் கொண்டவன்'' என்று அர்த்தம்கொள்ளும் பெயரைப் பெறுகிறார். அது அங்கே மரித்தவன் என்ற நிலையில் இருந்து வந்திருக்கையில், அக்காலத்தில் அந்த சிறு கூட்டமான மீதியாயிருக்கிறவர்கள் தப்பித்துக்கொண்டு, அதற்கடுத்த சபைக் காலத்திற்குள் வந்து சேருகிறார்கள். இன்றிரவில் நாம் பிலதெல்பியா சபைக்காலத்தை பார்த்து முடித்திருக்கையில், லவோதிக்கேயாவின் சபைக்காலத்தின் துவக்கத்தில் வந்துவிடுவோம். 15அதன்பிறகு, நாளை இரவில், ஏழாம் சபைக்காலமானது முடிவடையும் தருணத்தில், அதின் இறுதிக்கட்டத்தில், சரியாக கடைசிக் காலத்தில் தூதன் தோன்றுவதை கவனியுங்கள். அவன் வந்து சபையை, அது ஆதி அன்பை இழந்ததற்காகவும், காலங்கள் தோறும் மக்கள் செய்தது போலவே இவர்களும் தேவனைவிட்டு விலகிவிட்டதற்காகவும் கடிந்துகொள்ளுவான். அந்த நேரத்தில், செய்தியின் அந்த வேளையில், சபையானது தனது வாசஸ்தலத் திற்கு, மகிமையான எடுத்துக்கொள்ளப்படுதலில் எடுத்துக்கொள் ளப்பட்டுவிடும். எனவே நாம் இப்பொழுது அந்த காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அதை நீங்கள் பெற்றுக்கொண் டீர்களா? நல்லது, பாருங்கள். சரியான நேரத்தில் அந்த சபையின் தூதன் (அக்காலத்தின் செய்தியாளன்), சபையானது தங்களிலிருந்து ஆதி அன்பை இழந்துவிட்டதற்காக அதை கடிந்துகொள்ளுவான், அதை திரும்பக் கொண்டுவர முயலுவான். 16இன்றிரவில் நாம் பார்க்கப்போகும் சபைக்குரிய செய்தி யாளனும், தூதன்-செய்தியாளன்... திரும்பி வந்து அவர்கள் செய்த வற்றிற்காக அவர்களை கடிந்துகொள்ளுவான். (ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு சபைக் காலங்களிலும் மாடிப்படியில் ஏறிச்செல்லும் போது, ஒரு படியில் கால் இருக்கும்பொழுதே அடுத்ததின் மேலும் கால் நீண்டு அதை மிதித்து விடுவதைப்போல், ஒரு சபைக் காலம் அடுத்த சபைக் காலத்திற்குள்ளும் நீண்டு இருந்ததாக இருந்தது). இன்றிரவில் ஜான் வெஸ்லியாகிய தூதனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்று என்னிடம் உள்ளது. ஜான் வெஸ்லி தான் இச்சபைக் காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்குகிறார். அவர் 1703ம் ஆண்டில் ஜூன் மாதம் 17ம் தேதி இங்கிலாந்தில் உள்ள எப்வொர்த் என்னும் இடத்தில் ஒரு மதகுருவின் வீட்டில் பிறந்தார். அவரது பெற்றோருக்கிருந்த பத்தொன்பது பிள்ளைகளில் இவர் பதினைந்தாவது மகனாக திகழ்ந்தார். ஜான் மற்றும் சூசன்னா வெஸ்லி ஆகியோர் அவருடைய தாய் தந்தையராவார். தந்தையார் ஒரு பிரசங்கியாவார். அவரது தாய் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிற ஒரு பரிசுத்தவாட்டியாக விளங்கினாள். பத்தொன்பது பிள்ளைகளை அத்தாய் கவனிக்க வேண்டியதிருந்தாலும், தன் னுடைய மிகுந்த அலுவல்கள் மத்தியிலும் பிள்ளைகளுக்கு வேதாகமப் பாடங்களையும், வேதாகமக் கதைகளையும், சொல்லிக் கொடுத்து, அவர்களுக்காக ஜெபிப்பதற்கு அத்தாய்க்கு நாள் தோறும் அதிக நேரம் கிடைத்தது. அதுதான் அச்சிறுவர்களை தேவபக்தியுள்ளவர்களாக உருவாக்கியது. ஜான் வெஸ்லியின் அண்ணன் சார்லஸ் என்பவர் பிரசித்தி பெற்ற பாடலாசிரியராவார். அவர் உலகுக்கு மிகவும் தெய்வீக எழுப்புதலையளிக்கும் பாடல்கள் சிலவற்றை கொடுத்தவராவார். 17ஜார்ஜ் வொயிட்ஃபீல்ட் என்பாரின் ஒரு கூட்டாளியாக ஜான் வெஸ்லி விளங்கினார். ஜான் வெஸ்லி, ஜார்ஜ் வொயிட்ஃபீல்ட் ஆகிய இருவர் தான் மெதோடிஸ்ட் சபை உருவாகக் காரண மானவர்கள். பரிசுத்தமாகுதல் செய்தி அதிலிருந்து வந்தது. ஜான் வெஸ்லியிடம் அதிகாலையில் எழும்பும் பழக்கம் இருந்தது. அவரது ஆயுட்காலத்தில் அறுபது ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கு மணிக்கே அவர் எழும்பி விடுவார். அந்த ஒரு காரியத்தில் சபையானது தவறியிருக்கிறது. ஐம்பது ஆண்டுக்காலம் தொடர்ந்து ஒவ்வொரு நாளிலும் அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி, ஐந்து மணிக்கு பிரசங்கிப்பார். சில வேளைகளில் அவர் ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு தடவைகள் பிரசங்கிப்பார். 'அவர் ஒரு ஆண்டிற்கு நாலாயிரத்து ஐந்நூறு மைல்கள் குதிரையின் மேல் பயணம் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார்'' என்று அவரைக் குறித்து இங்கிலாந்து தேச மக்கள் கூறுகிறார்கள். நாலாயிரத்து ஐந்நூறு மைல்கள் ஒரு ஆண்டிற்கு... அது ஆங்கிலேய மைல்களாகும். அவை நம்முடை யதைவிட நீளமானதாகும். இவ்வளவு தூரம் பயணம் செய்து பிரசங்கித்திருக்கிறார். 18அவரது நாட்களில் அவரைப் பரிகசித்தும் தூஷித்தும் அநேக புத்தகங்கள் எழுதப்பட்டன. ஆனால் அப்புத்தகங்களும், அவை களது ஆக்கியோன்களும் வெகுகாலமாக மறக்கப்பட்டே போய் விட்டார்கள். ஒரு தேவ பிள்ளைக்கெதிராக எதுவும் உங்களால் செய்ய முடியாது. அப்படி எதுவும் செய்துவிட்டு, தப்பித்துக் கொள்ளவும் முடியாது. அச்செய்கை வெறும் ஆகாயத்துடன் சண்டை போடுவதுபோல் தான் இருக்கும். தேவன் தனது பிள்ளையை எப்படியாகிலும் விடுவித்துக் காப்பார். அவரை “மெதோடிஸ்ட்'' என்று அழைத்தனர்; ஏனெனில் அவர் காரியங்களைச் செய்வதற்காக 'ஒழுங்குகளைக்' கொண்டவராக (Methods) இருந்தார். ''அவரது ஆயுட்காலத்தில் அவர் நாற்ப தாயிரத்திற்கு மேலதிகமாகவே பிரசங்கங்கள் பிரசங்கித்துள்ளார்'' என்று அவரைப் பற்றி கூறப்படுகிறது. நாற்பதாயிரம் பிரசங்கங்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அவர் இவ்வுலகத்தை விட்டு 1791-ல் கடந்து சென்றபிறகு, உலகத்தில் மெதோடிஸ்ட் ஸ்தாபன மானது தனது வேர்களை பரவவிட்டு மெதோடிஸ்ட் சபை அதிலிருந்து ஆரம்பித்தது. அப்பொழுது ஆஸ்பரி மற்றும் ஏனை யோர்களும் இருக்கத்தான் செய்தார்கள். நாம் இப்பொழுது 7ம் வசனத்திலிருந்து துவங்கும்பொழுது, பிலதெல்பியா சபைக் காலத்திற்குரிய செய்தியாளனுக்கும், சபைக்கும் கொடுக்கப்படும் வாழ்த்துதலை கவனிக்கிறோம். உண்மையான சபையானது... உண்மையான சபையானது நல்ல அறிக்கைபண்ணுகிறது. நல்ல அறிக்கை பண்ணிய உண்மையான சபையாக அது இருக்கிறது. “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்.” ஒவ்வொரு சபைக்காலமும் அடுத்துவரும் சபைக் காலத் திற்குள் நீண்டு இருக்கும் காரியத்தைப்பற்றி உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். இப்பொழுது நீங்கள் அந்த தூதனைக் குறித்து தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். மெதோடிஸ்ட் காலத்தை அவர் எவ்வாறு கொண்டுவந்தார் என்பதை நீங்கள் கவனிப்பீர் களானால்... மெதோடிஸ்ட் காலமானது பெந்தெகொஸ்தே காலமாகிய லவோதிக்கேயாவின் சபைக் காலத்திற்குள்ளும் சிறிது நீண்டு இருந்தது. பின்பு நாளையிரவில், பெந்தெகொஸ்தே காலத்திற்குரிய செய்தியாளன் திரும்பி வந்து இச்சபைக்காலத்து மக்களை விழுந்து போனதற்காக கடிந்துகொள்ளு வான். எப்படி இந்த ஆறாவது சபைக்காலத்து தூதன் தனக்கு முந்தின சபைக் காலமாகிய சர்தையின் காலத்தில் (லூத்தரின் காலம்) உள்ள மக்களை வழுவிப்போனதற்காக கடிந்துகொள்ளு கிறானோ அதைப் போலவே தான் அதுவும். ஒன்று அடுத்துவரும் காலத்திற்குள்ளும் சற்று நீடித்து இருப்பதான காரியம் இது. 19இச்சபைக்காலம் சகோதர சிநேகத்தின் காலம். மகத்தான மிஷனரிகளையும், மிஷனரி ஊழியங்களையும் கொண்டதான மகத்தான காலமாக இது இருந்தது. உலகமானது இந்த அளவுக்கு அது வரையிலும் இவ்வளவு அதிகமான மிஷனரி ஊழியங்களைப் பார்த்ததேயில்லை. அது நமது காலத்திற்குள்ளும்கூட நீடித்திருக் கிறது. உலகின் எப்பகுதியிலும் மிஷனரிகள் இருப்பதான வேளை யாக, உலகம் இதுவரை காணாத அளவுக்கு இருந்துகொண்டிருக் கிறது. உலக வரலாற்றின் மிகக் குறிப்பிடத்தக்க காலங்களில் ஒன்றான இக்காலத்தில், கடந்த 150 ஆண்டுக்காலமாக, உலகின் சகல பாகங்களிலுமே சுவிசேஷத்துடன் மிஷனரிமார்கள் பரவி யிருக்கின்றனர். 20எழுத்துத் துறையில் எடுத்துக் கொண்டால், சுவிசேஷ செய்தியானது துண்டுப்பிரதிகள், புத்தகங்கள் ஆகியவற்றின் வாயிலாக வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு தேசத்தையும் நீண்ட காலமாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. எனவே, இயேசு வானவர் கூறினது இதைப்பற்றியல்ல என்பது ருசுவாகியது. “உலகம் முழுவதிலும் போய் பைபிள் ஸ்கூல்களை உண்டாக்குங்கள்'' என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. ”நீங்கள் உலகம் முழுவதிலும் போய் பத்திரிக்கைகளை விநியோகியுங்கள்'' என்றும் அவர் கூறவேயில்லை. அவைகள் யாவும் நல்லது தான். ஆனால் அவரது கட்டளை சபைக்கு எவ்வாறு உள்ளதென்றால், 'உலகம் முழுவதும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்பதாகத்தான் இருக்கிறது. சுவிசேஷமானது முற்றும் வெறும் வார்த்தையாக இருக்கவில்லை, ஆனால் அது வார்த்தையை ஜீவிக்கச் செய்கிறதாக இருக்கிறது. ஏனெனில் இயேசு அத்துடன் இதையும் கூறியிருக்கிறார்: “விசுவாசிக்கிறவர்களை தொடரும் அடையாளங்களாவன'' என்று. சபைக்கான அவரது கடைசிக் கட்டளையைக் கொண்ட மாற்கு 16ம் அதிகாரம் உங்களுக்குத் தெரியும்: ''விசுவாசிக்கிறவர்களைத் தொடரும் அடையாளங்களாவன'. மத்தேயு 10ம் அதிகாரத்தில் சபைக்கு அவர் கொடுத்த கட்டளையென்னவெனில், ”வியாதியஸ் தர்களை சொஸ்தமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள். பிசாசு களைத் துரத்துங்கள், இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்'' என்பதாகும். சபைக்குரிய அவரது கடைசிக் கட்டளையானது என்னவெனில், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாச முள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான், ”விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும்'. 21அனேகர் இங்கே இப்பகுதியை துண்டித்துவிடுகிறார்கள் அல்லவா? “ஆகவே'' என்பது வாக்கியத்தை ஒன்று சேர்க்கின்ற தாயுள்ளது. பாருங்கள்? இப்பொழுது அவர், (”நீங்கள் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கி யுங்கள்'', என்று மட்டும் அனேக பிரசங்கிகள் கூறுவார்கள்.) இப்பொழுது விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான், என்னுடைய நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும், அது அவர்களைச் சேதப் படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார். ஜீவனுள்ள தேவனின் அடையாளங்கள் ஜனங்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு தூரம்? உலகம் முழுவதிலும். நீங்கள் அதை அறிந்து கொண்டீர்களா? உலகம் பூராவிலுமே. ஆகவே, நான் பெந்தெகொஸ்தே செய்தியானது என்று கூறும் பொழுது... இப்பொழுதிருக்கிற பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. பெந்தெகொஸ்தே செய்திதான் தேவனிடத்திலிருந்து வந்துள்ள ஒரே உண்மையான செய்தியாக இருக்கிறது. இப்பொழுது மாற்கு 16ம் அதிகாரத்தைப் பாருங்கள். இங்கே இயேசு தனது சபைக்கு கட்டளையிடுகிறார்: 'உலகெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். இவ் வடையாளங்கள்: அந்நிய பாஷைகளில் பேசுதல், பிணியாளிகளைச் சொஸ்தப்படுத்துதல் அற்புதங்களை நடப்பித்தல்....'' எந்தப் பிரதேசம் வரைக்கிலும்? முழு உலகத்திலுமே. யாருக்கெல்லாம் பிரசங்கிக்க வேண்டும்? ''சர்வ சிருஷ்டிக்கும்'' இங்கேயுள்ள உலகத்தின் முடிவு பரியந்தமும் அது பிரசங்கிக்கப்படவேண்டும். “முடிவு பரியந்தம்'' இந்த சபைக்கு மட்டும்தானா இவ்வடை யாளங்கள் பின் தொடரும்? முழு உலகிலும் விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின்தொடரும். முழு உலகத்திற்கும், சர்வ சிருஷ்டிக்குமே இவ்வடையாளங்கள் பின் தொடரும். இது மட்டு மல்ல, விசுவாசிக்கிறவர்களையெல்லாம். எனவே அது பெந்தெ கொஸ்தே சபையாக இருக்கிறது. பாருங்கள்? 22நாம் இன்றிரவில், இந்த பிலதெல்பியா சபையின் காலத் தைப் பற்றி படிக்க எடுத்துக்கொண்டுள்ளோம். அந்த சபைக்கா லத்தில் மிஷனரிமார்களைக் கொண்டு சுவிசேஷம் பிரசங்கித்தலும், முழு உலகத்திற்கும் பத்திரிக்கைகள், துண்டுப்பிரதிகள் வாயிலாக சுவிசேஷம் பரம்பியது. இயேசு சொன்னார்: “இந்த சுவிசேஷமானது எனக்கு சாட்சியாக உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்'' என்று. அவர் பத்திரிக்கைகளை எங்கும் பரவச் செய்தலும், நன்கு படிக்கவும், எழுதவும், கணக்குப் போடவும் உள்ள உயர்கல்வியுள்ள மிஷனரிகளை அனுப்பவும், துண்டுப் பிரதிகளை விநியோகித்தலும், ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக்கொண்டு, தேவன் ஒருவர் உண்டு என்று விசுவாசித்தலும் ஆகிய இவைகளைப் பற்றித்தான் உரைத்திருக்கிறார் என்றால், அதுதான் எல்லாம் என்றால், அப்பொழுது இயேசுவானவர் திரும்பி வரும் நேரம் அதிகம் தாமதித்துவிட்டது என்றாகிவிடுமே. எனவே இது காண்பிக்கிறதாவது, சுவிசேஷம்... பவுல் கூறினான். ''சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும் முழு நிச்சயத்தோடும் வந்தது''. 23இயேசுவானவர், 'உலகம் முழுவதிலும் போய் சுவிசேஷத் தைப் பிரசங்கியுங்கள்'' என்று கட்டளையிட்டதோடு, ''உலகம் முழுவதிலும் போய் சுவிசேஷத்தின் வல்லமையை யாவருக்கும் பிரத்தியட்சப்படுத்துங்கள்'' என்றும் கூறியிருக்கிறார். ஓ, நான் அதை விரும்புகிறேன். வார்த்தையை எடுத்து, அது என்ன கூறுகிறதோ, அதன்படி வல்லமையான கிரியைகளை செய்துகாட்டி, அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரத்தியட்சமாக்கிக் காட்ட வேண்டும். அது அந்தவிதமாகத்தான் செய்யப்படவேண்டும். அது வார்த்தையை நிருபிக்கிறதாக இருக்கிறது. உலகிலேயே பெரிய மிஷனரி ஸ்தாபனமாக சூடான் மிஷன் களின் தலைவர் மோரிஸ் ரீட்ஹெட் என்பவர் அன்றொரு நாளில் எனது அறையில் நின்றுகொண்டு, “சகோ. பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் ஒரு பாப்டிஸ்டாக இருக்கிறபடியினால், சத்திய மானது என்னவென்று உங்களுக்குத் தெரிந்தேயிருக்க வேண்டும்'' என்று கூறினார். ''வேதாகமமே சத்தியமாயிருக்கிறது'' என்று நான் கூறினேன். அதற்கு அவர், “நல்லது, இந்த பெந்தெகொஸ்தேயினர் பெற்றிருப்பதுதான் என்ன?' என்று கேட்டார். 'பரிசுத்த ஆவியை'' என்று நான் பதிலளித்தேன். பாருங்கள்? “ஓ, அவர்கள் தட்டுமுட்டு சாமான்களை உதைத்து எறிவதை நான் கண்டிருக்கிறேன்'' என்று கூறினார். 24நான் அதற்கு, 'ஆம்! நீங்களெல்லாம் அந்த ஒரு விஷயத்தில் தான் அவர்களைவிட்டு பின்தங்கிப் போய், உங்களை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளீர்கள்'' என்று அவரிடம் கூறினேன். “அவர்கள் ஏராளமான நீராவி சக்தியைப் பெற்றிருக்கிறார்கள். அதைக்கொண்டு அவர்கள் இரயில் வண்டியின் சக்கரங்களைச் சுழலச் செய்வதற்கு பதிலாக, இரயில் என்ஜின் விசிலை ஊதி அதைப் போக்கடித்து விடுகிறார்கள். அவர்கள் மட்டும் அதை சரியான விதத்தில் உபயோகித்தால், அவர்கள் அடையாளங்களை யும் அற்புதங்களையும் பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதை கொண்டு ஏதாவதொன்றை செய்தாக வேண்டும், எனவே அவர்கள் கூக்கூரலிட்டு கத்தி முடித்து விடுகிறார்கள். அவர்கள் அதை ஊதி அணைத்துவிடுகிறார்கள்'' என்றேன். நான் நீராவியற்று ஊதாமல் இருப்பதைவிட நீராவியைப் பெற்று அதை ஊதிக் கொண்டேயிருப்பேன். நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லையா? அந்த முதியவர் ஒருவர் கூறுவதைப் போல், 'அக்கினி ஒன்றுமே இல்லாமலிருப்பதைவிட ஒரு சிறிது அளவு காட்டுத் தீயையாவது நான் உடையவனாக இருப்பதையே விரும்புவேன்'' என்பேன். 25இன்று நம்மிடையே இருக்கும் தொல்லை என்னவெனில்: ''முன் காலத்தில் பெந்தெகொஸ்தே நாள் அன்று, இவ்வாறு அவர்கள் செய்தார்கள்'' என்று கூறி அதை விளக்க அவ்வக் கினியைப் பற்றிய ஒரு சித்திரத்தை வரைந்திட நாம் முயலு கிறோம். ஆவிக்குரிய குளிர்ந்த நிலையினால் உறைந்து போன நிலையில் உள்ள, மரிப்பதற்கேதுவாக உறைந்துபோன நிலையி லுள்ள ஒரு மனிதனுக்கு, இவ்வாறு பெந்தெகொஸ்தே அக்கினி யைப் பற்றி வரையப்பட்ட சித்திரத்தைக் காண்பித்தால், அது என்ன நன்மை செய்துவிடப்போகிறது அவனுக்கு? அம்மனித னுக்கு உங்களால் ஒரு சிறிதளவுகூட உதவி செய்ய முடியாது. அவன் தன்னிலே தானே அவ்வக்கினியைப் பெற்றிருக்க வேண்டும். பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்றவர்களை கர்த்தருக்காக கிரியை செய்ய வைக்கவும், அவர்கள் செய்யும் அற்புதங்கள், அடையாளங்கள் ஆகியவற்றை செய்ய வைக்கும் படியாக தேவனுடைய வல்லமையானது ஒன்று இருக்குமானால், அப்பொழுது அவ்வனுபவத்திற்காக அக்கினியைப் பற்றிய ஒரு படம் வரைந்து காண்பிப்பதை நிறுத்தி விட்டு, அச்சித்திரத்தில் உள்ள அக்கினியை நிஜமாக அவர்களுக்குக் கிடைக்கச் செய்தால், அவர்கள் பெற்றிருப்பது போன்ற அதே அனுபவத்தையும், அதே இரட்சிப்பையும், இவர்களும் பெற்று, தங்கள் சாட்சியை அவர்கள் முத்திரையிட்டது போலவே, இவர்களும் செய்திட முடியும். பாருங்கள்? அவர்கள் அதைப்பெற்றிட நீங்கள் வழி செய்ய வேண்டும். முன்காலத்தில் இருந்த சந்ததிக்கு உரியதாக அதை நீங்கள் ஆக்கிவிடாமல், இக்காலத்துக்கும் உரியதாக அது இருப்பதால், இங்கும் அதைப் பெற்றிட கொண்டுவரவேண்டும். 26இப்பொழுது நாம், இந்த சகோதர சிநேகத்தின் காலமாகிய இது, ஒரு மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலமாக இருக்கிறது என்று கண்டோம். இயேசு சொன்னார், ''உலகம் முழுவதிலும், சர்வ சிருஷ்டிக்கும் இவ்வடையாளங்கள் பின்தொடரும்“ என்று. நாம் வரலாற்றையும், வேதாகமத்தையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகையில் நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன், ஒவ்வொரு இரவிலும்... என்ன சம்பவிக்கும் என்பதைப்பற்றி யோவானுக்கு இயேசுவானவர் கூறியதை நாம் வேதாகமத்தில் வாசித்தோம், இதே இடத்தில் நாம் வரலாற்றையும் எடுத்துக் கொண்டு, வேதத்தில் கூறியுள்ளபடியே அது நிறைவேறினது என்பதையும் நிரூபித்தோம். சரியாக அவ்வாறே நடந்துள்ளது. எனவேதான் நான் வேதத்தில் கூறியுள்ள இச்செய்தியை சுமந்து செல்லும் அத்தேவ ஊழியக்காரனான அந்த மனிதன் காலங்கள் தோறும் எங்கே இருக்கிறான் என்பதை வரலாற்றில் ஊன்றிக் கருத்தாய் ஆராய்ந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். அவன் அங்கே இருந்தான். வேதத்தில் கூறியுள்ளபடி ஆதியில் இருந்ததைப் போலவே, செய்தியை பற்றிக்கொண்டிருக்கிற அம்மனிதன் காலந் தோறும் இருக்கிறதை நான் கண்டேன். ஒருபோதும் ஏமாற்ற மடையச் செய்யாமல் அது சரியாக இருந்து வந்துள்ளது. இதன்பிறகு, அது ஏறத்தாழ ஒழிந்து போனது போன்ற நிலைமை ஏற்பட்டபோது அக்காலத்தை அவர் மரித்துப்போன காலம்'' என்றும், இருண்டது என்றும் அழைக்கிறார். அதன்பிறகு, சிறிது ஒளி வெளிவந்தது, சற்றுக் கூடுதலான பெலனும் வந்தது. அதன்பிறகு உண்மையான அனுபவமாகிய பெந்தெகொஸ்தேக் குள் இக்கடைசி காலத்தில் அது சென்றடைந்துவிட்டது. அதன் பிறகு மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டாள், அவள் போய் விட்டாள். மகா உபத்திரவக் காலமானது மீண்டும் ஏற்பட்டது, அது சர்வ லோகத்திற்கும் ஏற்படப்போகிறது. 27மகத்தான மிஷனரி ஊழியங்களின் காலமாகவும், சகோதர சிநேகத்தின் காலமாகவும் இக்காலம் திகழ்கிறது. அக்காலத்தில் வாழ்ந்த சில மகத்தான தேவ மனிதர்களின் பெயர்களை உங்க ளுக்குக் குறிப்பிட விரும்புகிறேன். அவர்களது பெயர்களை தான் இங்கு எழுதி வைத்துள்ளேன். ஜான் வெஸ்லி, வொயிட்ஃபீல்ட்... வொயிட்ஃபீல்ட், இவர் 1739 வாக்கில் ஜீவித்தவர், சார்ல்ஸ் ஜி. ஃபின்னி, ட்வைட் மூடி, வில்லியம் கேரி. வில்லியம் கேரி ஒரு மகத்தான மிஷனரியாவார். இவர் இந்தியாவுக்கு 1773ல் சென்றார்; டேவிட் லிவிங்ஸ்டன் தெற்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். பாருங்கள், மகத்தான மனிதர்களில் சிலர் இவர்கள். சகோதர சிநேகத்தின் காலத்தில் வாழ்ந்த இன்னும் அநேகரின் பெயர்களை இங்கே குறித்து வைத்துள்ளேன். கறுப்பு மனிதன், வெள்ளையன், பழுப்பு நிறத்தவன், மஞ்சள் நிறத்தவன் ஆகிய தடுப்புச் சுவர் களெல்லாம் தகர்த்தெறியப்பட்டது. இம்மனிதர்கள் போய் செய்த மிஷனரி ஊழியங்களினால் சகோதர சிநேகத்தின் கரமானது எங்குமுள்ள அனைத்து தேசங்களுக்கும் நீட்டப்பட்டது. அவர்கள் அவ்வாறு போகத்தக்கதாக எங்கும் அவர்களுக்கு வாசல் திறக்கப்பட்டிருந்தது. திறந்த வாசலின் காலமாக இது திகழ்ந்தது, ஏனெனில் அவர்களால் இயலவில்லை... இக்காலத்திற்கு முன்னால் அவர்களால் அவ்வாறு மிஷனரி ஊழியங்களுக்கு பரவித் திரிந்து செல்ல இயலாதபடி, ரோமாபுரியின் போப்பு மார்க்கமானது எங்கும் வாசலை அடைத்து வைத்திருந்தது. ஆனால் இந்த சபைக் காலத்தில் (ஆறாவது சபைக்காலத்தில்) வாசல்கள் திறக்கப்பட் டிருந்தது. ஏனெனில் இது “திறந்த வாசலின் காலம்'' என்று ஆண்டவர் கூறியுள்ளார். 28இந்தக் காலத்தில் அநேக வாசல்களை அவர்கள் திறந்தார்கள். சுவிசேஷத்திற்காக வாசல்களும், மிஷனரி ஊழியக் களத்திற்காக வாசல்களும், கிறிஸ்துவினிடம் திரும்புவதற்காக வாசலும், மற்றும் தேவையான அனைத்து வாசல்களும் திறக்கப்பட்ட காலம் இதுவே. அவர்கள் அன்று என்ன செய்தார்கள் என்பதை உங்களால் காண முடிகிறது. அக்காலத்தில் சகோதரர்கள் மகத்தான பணியை செய்தார்கள். சர்தை சபையின் காலத்திற்குப் பிறகு வந்த நட்சத்திரமான ஜான் வெஸ்லியின் காலத்திலிருந்து, அவர் வந்து சர்தை சபையின் காலத்திலிருந்தவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பியதற்குப் பிறகு, இதற்கு முன் வேறு எந்த வேளையிலும் காலத்திலும் இல்லாத அளவுக்கு, மகத்தான மிஷனரிமார்கள் கடந்த 150 ஆண்டுக்கால மாக பூமி முழுவதிலும் சுவிசேஷத்தைப் பரப்பச் செய்தார்கள். அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள். வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு தேசமும் தேவனுடைய வார்த்தையை கேட்டிருக் கிறது. அநேக ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமி முழுவதும் கூறி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுவிசேஷத்தையல்ல, வெறும் வார்த்தையை மட்டும்தான் அறிவித்தார்கள். ''எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது''. பாருங்கள்? நான் தென் ஆப்பிரிக்காவில் பிரசங்க மேடையில் அன்றொரு நான் நின்றிருந்தபோது, முகம்மதியர்கள் அங்கே பல்லாயிரக் கணக்கில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். முகம்மதியர் களுக்கு சுவிசேஷத்தைக் கூறிவரும் ஒரு மிஷனரியை நான் சந்தித்தேன். “ஓ அந்த விலையேறப்பெற்ற ஆத்துமாவினிமித்தம் தான்'' என்று அந்த முகம்மதியர்களுக்கான மிஷனரி கூறினார். அவர் அங்கே அநேகமாண்டுகளாக இருந்து வருகிறார், இருப் பினும் அவர் ஒரேயொரு முகம்மதியரை மட்டுமே கிறிஸ்து வண்டை திருப்பியிருக்கிறார். ஏனெனில் முகம்மதியர்கள் மேதிய பெரிசியரிலிருந்து தோன்றியவர்கள். அவர்களது பிரமாணமானது மாறுவதில்லை. அவர்களது சட்டங்கள் மாற்றப்படுவதோ திருத்தப் படுவதோ கிடையாது, அவர்கள் முகம்மதியர்கள் என்றால் எக்கா லத்தும் முகம்மதியராகவே இருக்கவேண்டும். 29எனவே, அவர்களுக்கு இருந்த இந்த சகோதரன் குறிப்பிட்ட அந்த ஒரே ஆத்துமாவானது, தென் ஆப்பிரிக்காவின் தலை நகரமாம் ப்ரிடோரியாவின் மைதானத்தில் நின்றுகொண்டிருந்தார். அது சுதந்திர மாகாணத்தில் உள்ளது, ஆரஞ்ச் ஃப்ரீ ஸ்டேட்டில் உள்ளது. அது ட்ரான்ஸ்வாலில் உள்ளது. அங்கிருந்து நாங்கள் கேப்டவுனுக்கும், ப்ளோம்ஃபோன் டைனுக்கும் போய், அங்கிருந்து, திரும்பி க்ரஹாம்ஸ்டவுன், கிழக்கு லண்டன் வழியாக மறுபடியும் ஜோஹென்ஸ்பெர்க் வந்து சேர்ந்து கரையோரத்தில் வந்தோம். கேப்டவுனிலிருந்து புறப்பட்ட பிறகு இங்குதான் வந்தோம்: 30சரி, கடைசியாக நாங்கள் சென்ற நகரம் டர்பன் ஆகும். அங்கே முகம்மதிய மதத்தைச் சேர்ந்த 1'/, இலட்சத்திலிருந்து 2 இலட்சம் வரை எண்ணிக்கையுள்ள பழங்குடியினரைக் கூட்டிச் சேர்ந்திருந்தோம். அவர்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். அக் கூட்டங்களுக்காக வாரக்கணக்கில் அங்குள்ள குதிரைப் பந்தய மைதானத்தை எடுக்கவேண்டியதிருந்தது. உலகத்திலேயே அது இரண்டாவது பெரிய பந்தய மைதானமாகும். சர்ச்சில் டௌன்ஸ் என்ற இடத்தில் உள்ளதைவிட பெரியது அது. லண்டனில்தான் மிகப் பெரிய மைதானம் உள்ளது. அதற்கடுத்து தென் ஆப்பிரிக்கா வில், பிறகு சர்ச்சில்டெளென்சிலும் உள்ளவைகளைச் சொல்ல லாம். அப்பொழுது அங்கே அவர்கள் வேலி போட்டிருந்தார்கள். ஏனெனில் அப்பழங்குடியினருக்குள் சண்டை நடந்துகொண்டிருந் தது. காவல்துறையினர் (இரு நூறு அல்லது முன்னூறு காவலர்கள்) ஒவ்வொரு பழங்குடிப் பிரிவினரையும் தனித்தனியே ஒதுக்கி வைத்து, அவ்வேலிகளுக்குள் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதவாறு, அனுப்பிவிட்டார்கள். அவர்களிடத்திலிருந்து ஈட்டி போன்ற ஆயுதங்களை பறித்துவிட்டார்கள். அம்மைதானத் தில் அமர்ந்திருந்து, அவ்வேலிகளின் வழியாக ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரை உற்று நோக்கிக்கொண்டு, இவ்வாறு அப்பழங் குடிகள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொள்ள காத்திருந் தனர். அவர்களுடைய தலைவர்கள் தங்கள் இராணியோடு, விசிறி யால் மனிதர்கள் தங்களுக்கு விசிறச் செய்து அமர்ந்திருந்தார்கள் கோச்சுகள் நிறைய ஆட்களோடு ரொடீஷியாவிலிருந்து, ரொடீஷியாவின் இராணியும் அக்கூட்டங்களில் கலந்து கொள்ள வந்திருந்தாள். (ரொடீஷியா இன்றைக்கு ஜிம்பாப்வே என்று அழைக்கப்படுகிறது. இது தென் ஆப்பிரிக்காவுக்கு வடக்கில் உள்ளது - மொழிபெயர்ப்பாளர்). விசேஷ இரயில் வண்டி விடப்பட்டிருந்தது. 31கர்த்தர் அக்கூட்டங்களில் மகத்தான அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். நாங்கள் ஒருநாள் அங்கே கண்ட தென்னவெனில், டர்பன் நகரத்தின் மேயராக இருக்கும் சிட்னி ஸ்மித் என்பவர் அங்கு போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தோம். ''அதென்ன அம்மனிதன் தன் கழுத்தில் ஒரு அட்டையை அணிந்திருக்கிறானே, அது என்ன?'' என்று நான் அவரைக் கேட்டேன். அட்டையை அணிந்திருந்தவன் ஒரு கருப்பு மனிதன். நாம் அவர்களை நீக்ரோ இனத்தவர் என்று இங்கே அழைக்கிறோம். அவர்களுக்குத்தான் நான் பிரசங்கிப்பதாக இருந்தேன். அவர்களில் அநேகர், ஆண், பெண் இருவருமே உடையுடுத்தியிருக்கவே யில்லை. அம்மனிதனின் கையில் ஒரு விக்கிரகம் இருந்தது. அவனது கழுத்தில் ஒரு அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. “அவர்களின் கழுத்தில் காணப்படும் அவ்வட்டைகள் எதைக் குறிக்கிறது?'' என்று நான் மேயரைக் கேட்டேன். 32'அவர்கள் கிறிஸ்தவர்கள்'' என்று கூறினார். ''கிறிஸ்தவரா, அப்படியானால் கையில் ஒரு விக்கிரகத்தை வைத்திருக்கிறார்களே?'' என்று வினவினேன். அவர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாம் அவர்களே, அம் மனிதன் ஹோங்காய் பாஷை பேசுபவன், எனக்கு அவனுடைய பாஷையைப் பேசமுடியும். நாம் அவனிடம் காரோட்டிச் சென்று, அவனிடம் நீங்கள் பேசலாம். நீங்கள் அவனை எந்தப்பெயர் வேண்டுமானாலும் சொல்லி அழையுங்கள். ஏதாவது கேள்விகளை நீங்கள் அவனை கேளுங்கள், நான் அவனிடம் எடுத்துச்சொல்லி, அவன் என்ன பதிலளிக்கிறானோ அதை உங்களுக்கு எடுத்துரைப் பேன்'' என்றார். எனவே, நாங்கள் அம்மனிதனிடம் சென்று, ''தாமஸ் எவ்வாறிருக்கிறாய்?'' என்று கேட்டேன். நான் அவனை தாமஸ் என்று அழைத்தேன். ஏனெனில் அதுவே அவனுக்குப் பொருத்த மான பெயராக இருக்கும் என்று எண்ணினேன். “எப்படியிருக்கிறாய் தாமஸ்?'' என்று கேட்டேன். அவன் என்னை உற்று நோக் கினான். ”நீ கிறிஸ்தவனா“ என்று கேட்டேன். “ஆம், அவன் கிறிஸ்தவன் தான்'' என்று மொழிபெயர்ப் பாளர் எடுத்துரைக்கிறார். நான் கூறினேன்... அவனுக்கு என்னை வாஸ்தவமாகவே யாரென்று தெரியாது. அது வரைக்கிலும் அவன் எங்களை பார்த்ததே கிடையாது. ''உன்னிடமுள்ள அவ்விக்கிரகத்தை வைத்து நீ என்ன செய்கிறாய்?'' என்று நான் அவனைக் கேட்டேன். “ஓ, அவனது தந்தை அதை தரித்திருந்தார்'' என்று கூறினார். பாருங்கள், அது அவனுக்கு ஒரு தெய்வமாக இருந்தது. 33“உன் தந்தை அதை சுமந்து திரிந்தார் என்ற காரணத்தால் நீ அதை சுமக்க வேண்டும் என்பதில்லையே. நீ கிறிஸ்தவன் என்றால், நீ அதை சுமக்கக்கூடாது'' அவர் கூறினார்: ''ஒரு நாள் சிங்கமானது அவனுடைய தந்தையை துரத்தியபொழுது, அவன் ஒரு சிறு தீயை வளர்த்து, மந்திரவாதி தனக்குச் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரத்தை இவ்விக்கிரகத்தின் பேரில் கூறியதாகவும், அப்பொழுது அவ் விக்கிரகம் அச்சிங்கத்தை துரத்திவிட்டதாகவும் இவன் கூறு கிறான்'' என்றார். அங்கெல்லாம் காட்டுமிருகங்கள் அநேகரை கொன்றுவிடுவதுண்டு. நான் கூறினேன், “பார்; அந்த மந்திரவாதி சொல்லிக் கொடுத்த மந்திரம் ஒன்றும் அச்சிங்கத்தை துரத்திவிடவில்லை. அந்நெருப்புத்தான் அதைத் துரத்திவிடக் காரணமாய் அமைந் திருந்தது. சிங்கமானது நெருப்பைக் கண்டு பயப்படக் கூடியது'' என்று. நான் மேலும் கூறினேன். ”தாமஸ்! ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில், விக்கிரகத்தையெல்லாம் நாம் சுமக்கக்கூடாது. அதற்கும் உனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது'' என்று. அதற்கு அவன், “ஓ, நல்லது, அமோயா காப்பாற்றத் தவறினால், இது கைகொடுக்குமே'' என்றான். அமோயா என்றால், ”காணப்படாத சக்தி'' அல்லது 'நாம் காணக்கூடாத தேவன்'' அதாவது, “காற்றைப்போன்ற ஒரு சக்தி' என்று பொருள்படுமாம். எனவே அவன் இரண்டையுமே நம்புகிறான், ஏனெனில் ஒன்று கைவிட்டால் இன்னொன்றாவது கைகொடுக்குமே என்ற எண்ணத்தில் போலும். அங்குள்ள கிறிஸ்தவத்தின் பெலன் இதுவாகத்தான் இருக்கிறது. உ-ஊ, ஆம், ஓ, என்னே ! 34ஆனால் அன்று மத்தியானத்தில், அந்த குதிரைப் பந்தய மைதானத்தில் நடந்த கூட்டத்தில் நான் வேதவாக்கியத்தை எடுத்துக்கொண்டு பேசினபிறகு, பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்த ஆரம்பித்த போது... எனது பிரசங்கத்திற்கு உண்மையிலேயே பதினைந்து நிமிடங்கள் தான் பிடித்தது; ஆனால் பதினைந்து வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்கள் அந்தந்த மொழியில் மொழிபெயர்த்து சொல்ல வேண்டியிருந்ததால் பிரசங்கத்தை முடிக்க ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆயிற்று. 'இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்'' என்று சொல்லுகிறேனென்றால், ஒருவர் கூறுவார், “பாபா பாபா'' என்று; இன்னொரு மொழிபெயர்ப்பாளர் 'க்ளூக்ளூ க்ளூ'' என்பார்; அதற்கடுத்த மொழிபெயர்ப்பாளர்: ”உம் உம் உம்'' என்பதுபோல ஏதோ சொல்லுவார். ஆக மொத்தத்தில் இம்மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறுவிதமான பாஷைகளில் கூறியதெல்லாம், “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்'' என்று நான் கூறியதைத்தான். அவர்கள் இத்தனை மொழிகளில் மொழிபெயர்த்து சொல்லி முடித்த பிறகு, நான் மீண்டும் பிரசங்க வாக்கியத்தை தொடர வேண்டிய எனது முறை வருகையில், நான் முதலில் என்ன சொன்னேன் என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பாளர் என்ன சொல்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் முடிக்கிற வரையிலும் காத்திருக்க வேண்டும். பிறகு, நான் பிரசங்கத்தை தொடரும்பொழுது, ''உங்களை இரட்சிக்க வருகிற இயேசு என்ற ஒருவரைப்பற்றி உங்களுக்கு மிஷனரி கூறியிருக்கிறார்'', மிஷனரி என்று கூறியபோது, பல பிரிவினரான பழங்குடிகளான அவர்கள் ஒருவரையொருவர் மேலுங்கீழுமாகப் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் அந்த மிஷனரி... “இந்தப் புத்தகத்தை வாசிக்கையில், அங்கே அவர் மகத்தான சுகமளிக்கிறவராக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர் தன் ஜனங்களுக்குள், தான் திரும்பி வருகிற வரையிலும் காலங்கள் தோறும் ஜீவித்திருப்பார் என்று கூறியுள்ளாரே, அதை அறிந்துகொண்டிருக்கிறீர்களா? 'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்' என்று கூறினாரே. கழுத்தில் அட்டைகளை, கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தொங்க விட்டுக்கொண்டிருக்கிறவர்களே, இயேசு இன்று இங்கே திரும்பிவந்து, மக்கள் மத்தியில் உலாவி, அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே காரியத்தைச் செய்வதைக் காண விரும்புகிறீர்களா?'' என்று கேட்டேன். 35ஓ அவர்கள் யாவருமே, “நிச்சயமாக'' என்றார்கள். அவர்கள் அதைக் காண விரும்பினார்கள், பாருங்கள். அவர்கள் அதை விரும்பினார்கள். 'அவர் பூமியிலிருந்தபொழுது செய்த அதே காரியத்தை, இங்கேயிருக்கிற எங்களை உபயோகித்து நாங்கள் அதைச் செய்யும் படி அவர் கிரியை செய்வாரானால், அப்பொழுது நீங்கள் அவரு டைய வார்த்தையை விசுவாசிப்பீர்களா?'' என்று கேட்டேன். “ஓ நிச்சயமாக'' என்றனர். அங்கே அமர்ந்திருந்த முகம்மதியர்கள் அதைச் சொன்னார்கள் என்பதைப் பாருங்கள். முதலாவது... இரண்டாவதாக மேடையின்மேல் வந்தது ஒரு முகம்மதிய பெண்மணியாவார். பரிசுத்த ஆவியானவர் பேசிக் கொண்டிருக்க, நான் அப்பெண்மணியிடம், “எனக்கு உன்னைத் தெரியாது என்று நீ அறிவாய், உன்னுடைய பாஷையைக் கூட என்னால் பேச இயலாது'' என்று கூறினேன். அதை அவள் ஒத்துக் கொண்டாள். அவளது கண்களுக்கு இடையில் ஒரு சிவப்பு நிற பொட்டு இருந்தது. உயர்குடியில் பிறந்த முகம்மதியர் என்பதை அப் பொட்டு குறிக்கிறதாம். நான் அவளை நோக்கி, “உன்னை சுகமாக் குவது என்றால், அதை நான் செய்ய இயலாது, இன்று மத்தியா னத்தில் நான் பிரசங்கித்த செய்தியை நீ புரிந்து கொண்டாயா?'' என்று கேட்டேன். அவள் அந்த முகம்மதிய பாஷை மொழி பெயர்ப்பாளரிடம் பதில் சொன்னாள். அவள் ஒரு இந்தியப் பெண்ணாம். அவள் கூறினாள். 'ஆம், அவள் புரிந்து கொண்டாள். அவள் புதிய ஏற்பாட்டையும் வாசித்திருக்கிறாள்'' என்று மொழி பெயர்ப்பாளர் எடுத்துக் கூறினார். ஓ, ஆம். ஊ-ஊ. 36அவர்கள் தேவனில் விசுவாசம் கொள்ளவும்கூட செய்திருக் கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்களும் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள். 'அவள் தேவனில் விசுவாசங்கொண் டிருக்கிறாள். ஆனால் முகம்மது தேவனுடைய தீர்க்கதரிசி என்று அவள் விசுவாசிக்கிறாள்'' என்று அவள் கூறியதைப்பற்றி எனக்கு எடுத்துரைக்கப்பட்டது. நாமோ இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறோம். பாருங்கள்? 'அவள் தேவனில் விசுவாசங்கொண்டிருக்கிறாள் என்று கூறுகிறாள்'' என்று எடுத் துரைத்தார் மொழிபெயர்ப்பாளர். 'உனக்கு பழைய ஏற்பாடு தெரியுமென்றால், ஆதிகாலத்தில் தேவன் மனிதனில் எவ்விதமாக செயல்பட்டார் என்பதும் உனக்கு தெரிந்திருக்கிறதென்றால், நாங்கள் 'கிறிஸ்து' என்றழைக்கும் இயேசுவானவர், அப்பொழுது, தேவன்-தீர்க்கதரிசியாகத்தான் இருக்கவேண்டும். ஆம், அவர்கள் அவரைக் கொலை செய்தார்கள். நீங்கள் அவ்வாறில்லை என்று எண்ணுகிறீர்கள். ஏனெனில், அவர் ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிப்போய்விட்டார் என்று கூறுகிறீர்கள். அவ்விதமாகத்தான் உங்களது மதகுருவினால் நீங்கள் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள். 'அவர் கொல்லப்படவில்லை, சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எங்கோ இயற்கையாக மரித்து விட்டார்' என்று போதிக்கிறார்கள் உங்களுக்கு'' என்றேன். 37“நீங்களெல்லாம் அவ்வாறு விசுவாசிக்கிறீர்கள். ஆனால் இந்த இயேசுவானவர் மரித்து உயிர்த்து எழும்பி, தனது சபையின் மேல் மீண்டும் தனது ஆவியை அனுப்பினார் என்று புதிய ஏற்பாடு உரைக்கிறது” என்று கூறினேன். இப்பொழுது இங்கேதான் நீங்கள் அவர்களை மடக்குகிறீர்கள், அதே விஷயத்தில் தான் அந்த முகம் மதியன் பில்லி கிரஹாமுக்கு சவால்விடுத்தான். அதே விஷயம், அதே கொள்கையில்தான் என்பதைப் பாருங்கள். ''இப்பொழுது, ஒருவேளை... முகம்மது உங்களுக்கெல்லாம் எந்த வாக்குத்தத்தத்தையும் கொடுக்காதபோது, இயேசு எங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார், அதாவது அவர் செய்த அதே கிரியைகளை நாங்களும் செய்வோம் என்பதாக. அவர் பரிசுத்த யோவான் எழுதிய சுவிசேஷம் 5:19இல், பிதாவானவர் எனக்குக் காண்பிக்கிற வரையிலும் தானாக எதையும் செய்வதில்லை என்று கூறப்பட்டுள்ளதை ஞாபகத்தில் கொள்வாயாக. இயேசுவானவர் வந்து உன்னுடைய கஷ்டம் என்ன என்பதையும், எதற்காக நீ இங்கிருக்கிறாய் என்பதையும், உன்னுடைய முடிவு என்னவா யிருக்கும் என்பதையும், உன்னுடைய கடந்த காலத்தையும், எதிர்காலம் என்னவாயிருக்கும் என்பதையும், அவர் உன்னுடைய எதிர்காலத்தையும் பற்றி கூறுவாரென்றால்,... உன்னுடைய கடந்த காலத்தையும் கூறக்கூடுமென்றால், அப்பொழுது நிச்சயமாக நீ எதிர்காலம் என்னவாயிருக்கும் என்று அவர் கூறுவதையும் உன்னால் விசுவாசிக்க முடியும்'' என்று கூறினேன். ''அது உண்மைதான்'' என்று அவள் மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறினாள், பாருங்கள். “நல்லது, அவர் அவ்வாறு செய்யட்டும்'' என்றேன் நான். அப்பொழுது அந்த முகம்மதியர்கள் அனைவரும் எழுந்து நின்று, கவனித்துக்கொண்டிருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் அப்பொழுது இவ்வாறு கூறினார்: ''உன் புருஷன் குட்டையான, கருத்த மீசையையுடைய கனத்த சரீரமுள்ள மனிதன். மூன்று நாட்களுக்கு முன்னர் நீ ஒரு டாக்டரிடம் போயிருந்தாய். உனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. அந்த மருத்துவர் பெண்களுக்குரிய சோதனையை உன்னில் செய்தார். உன்னுடைய கருப்பையில் ஒரு கட்டி இருக்கிறது என்று அவர் கூறினார்'' என்று. அவள் கீழ் நோக்கிப் பார்த்து, “தலைவணங்கி, ''அது உண்மை '' என்று கூறினாள். இப்பொழுது, நீ புதிய ஏற்பாடு வாசித்திருக்கிறாய் என்று கூறுகிறாயானால், கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயிடம் இயேசு கிறிஸ்து கூறியது போல் இது உள்ளதாக உனக்குத் தெரிகிறதா?'' என்று அவளிடம் கேட்டேன். ''அது உண்மை '' என்றாள் அவள். நான் அவளிடம், ''நீ ஏன் ஒரு கிறிஸ்தவனான என்னிடம் வந்திருக்கிறாய், நீ ஏன் உன்னுடைய முகம்மதிய தீர்க்கதரிசியிடம் போயிருக்கக்கூடாது?'' என்று கேட்டேன். “நீர் எனக்கு உதவி செய்ய முடியும் என்று நான் கருது வதினால்'' என்று கூறினாள். ''நான் உனக்கு உதவி செய்ய இயலாது, ஆனால் நீ இப்பொழுது இங்கே இருக்கிற இயேசுவை ஏற்றுக் கொள்வா யானால், அவர் உனக்கு உதவி செய்வார். அவர் உன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அறிந்திருக்கிறார், உன்னைப் பற்றி யாவையும் அறிந்திருக்கிறார்'' என்று நான் கூறினேன். 38“நான் இயேசுவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள் கிறேன்'' என்று கூறினாள். அதுதான் கிரியை செய்தது. அதுதான் காரியம். அன்று மத்தி யானத்தில் பத்தாயிரம் முஸ்லிம்கள் கிறிஸ்துவண்டை வந்தனர். பார்த்தீர்களா? முப்பது ஆண்டுகள் ஆகியும், அந்த மிஷனரி ஊழியக்களத்தில் துண்டுப்பிரதிகள் மூலம் ஒரேயொரு மனிதனைத் தான் கிறிஸ்துவண்டை கொண்டுவர முடிந்திருக்கிறது. ஆனால், ஐந்தே நிமிடத்தில் சுவிசேஷமானது வல்லமையோடு பிரத்தியட் சப்படுத்தப்பட்டபோது, பத்தாயிரம் ஆத்துமாக்கள் கர்த்தரிடம் வந்தனர். தேவன் ஒருபோதும் நம்மை ஆலயங்களைக் கட்டச் சொல்லவில்லை, பாடசாலைகள் உண்டாக்கவும் சொல்லவில்லை. அவைகளெல்லாம் நல்லதுதான். மருத்துவமனைகள் மற்றும் ஏனைய காரியங்கள் நமக்கு தேவைதான் என்பதை தேவன் அறிவார், அது அவருடைய திட்டமே, ஆனால் சபைக்கு தேவன் கொடுத்த கட்டளையென்னவெனில், “சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்பதே. ஆனால் நாமோ இந்த அருமையான ஸ்தலமாகிய ஆஸ்பரியிலிருந்து வந்த துண்டுப்பிரதிகள், பத்திரிக்கைகள் ஆகியவைகளை விநியோகிக்கிறோம். இங்கே கென்டக்கியில் உள்ள வில்மோர் என்ற இடத்தில் உள்ள அந்த நல்ல மெதோடிஸ்ட் வேதகல்லூரியின் மக்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இவ்வேளை யில் உலகிலுள்ள மிகச்சிறந்த ஆவிக்குரிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று என்று நான் கருதுகிறேன். அவர்கள் அருமையான மக்கள். 39நான் ரொடீஷியாவிலுள்ள ஒரு நகரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன். அதின் பெயரை மறந்துவிட்டேன். பில்லி உனக்கு ஞாபகமிருக்கிறதா? (பில்லி பால் 'சாலிஸ்பரி'' என்று கூறுகிறார் - ஆசி.) சாலிஸ்பரி - அது சரிதான். நியூ சாலிஸ்பரி (அவன்தான் எனது ஞாபகசக்தியாக இருக்கிறான்). அந்நகரத்தின் பெயர் நியூ சாலிஸ்பரி, ரொடீஷியா. நாங்கள் ரொடீஷியாவி லிருந்து புறப்படுவதற்காக விமானத்தில் ஏறுகையில், அமெரிக்க பாஸ்போர்ட்டைக் கண்டேன் அவர்கள் ஒரு இளைஞனும், மூன்று பெண்பிள்ளைகளுமாய் இருந்தனர். நான் அவர்களிடம் சென்று “ஹெல்லோ, உங்களிடம் அமெரிக்கன் பாஸ்போர்ட் இருக் கிறதைக் காண்கிறேனே'' என்றேன். அவ்விளைஞன் கூறினார்: “நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?'' நான், ”ஆம், நான் ஒரு அமெரிக்கன்'' என்று கூறினேன். அவர் அதற்கு, “நல்லது, அது அருமையானது'' என்று கூறினார். “நீங்கள் சுற்றுலா போய்க்கொண்டிருக்கிறீர்களா?'' என்று நான் கேட்டேன். “இல்லை, நாங்கள் மிஷனரிகள்'' என்று பதிலளித்தார். “ஓ, அது எத்தனை அருமையாயிருக்கிறது'' என்றேன் நான். ”நிச்சயம் உங்களைச் சந்திக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எந்த சபையைச் சேர்ந்தவர்கள்? அல்லது ஏதாவது ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது சுயாதீனரா யிருக்கிறீர்களா?'' என்று மேலும் கேட்டேன். “இல்லை, நாங்கள் மெதோடிஸ்ட்டுகள், நாங்கள் கென்டக்கி யிலுள்ள வில்மோரைச் சேர்ந்தவர்கள்'' என்று கூறினார். ''அது என் வீட்டிற்கு கொல்லைப்புறத்தில் உள்ளது போல் மிக அருகாமையில் உள்ளதாயிற்றே'' என்றேன் நான். நான் கூறினேன்.... அதற்கு அவ்விளைஞன், ''நீங்கள் அந்த சகோதரன் பிரன்ஹாம் தானே?'' என்று கேட்டான். 40'ஆம் ஐயா, அது சரிதான்'' என்றேன் நான். அப்பொழுதே அந்த க்ஷணமே அது அவனை கலக்கியது, அவன் அதற்குப்பிறகு ஒன்றுமே பேசவில்லை. அந்த வேளையில் அவன் மேற்கொண்ட அவனது மனோபாவத்தை நான் பார்த்தேன். அவன் அப்பெண்களை முழித்துப் பார்த்தான், அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவன் ஒரு இளைஞனாகத்தான் இருந்தான். அப்பெண்பிள்ளைகளும் அப்படித்தான். எனவே நான் அவனை, “மகனே, சற்று நேரம்... நான் ஒரு நிமிடம் உங்கள் யாவரோடும் கிறிஸ்தவ நெறிமுறைகளைப் பற்றி பேச விரும்புகிறேன். நாம் யாவரும் இங்கே அந்த மகத்தான நோக்கத்திற்காகவே வந்திருக் கிறோம். நீங்கள் இப்பிரதேசங்களில் கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக இருந்து வருவதாகக் கூறுகிறீர்கள். கர்த்தராகிய இயேசு வின் நாமத்தினால், நீங்கள் இப்பிரதேசத்தில் கர்த்தருக்காக ஒரு ஆத்துமாவையாவது, ஆதாயப்படுத்தினோம் என்று விரலை மடக் கிக் கூறக்கூடுமோ என, இளைஞனே, உன்னையும் மூன்று வாலிபப் பெண்களே, உங்களையும் நான் கேட்க விரும்புகிறேன்'' என்று நான் கேட்டேன். அவர்களால் முடியவில்லை. ஒரு ஆத்துமாவை கூட ஆதாயப்படுத்தவில்லை. 41நான் அவர்களிடம், “நான் உங்களுடைய உணர்வுகளை புண்படுத்த விரும்பவில்லை. நீங்கள் செய்யும் காரியத்தைப் பற்றி மெச்சுகிறேன். ஆனால் பெண் பிள்ளைகளாகிய நீங்களோ, உங்கள் வீடுகளில் இருந்து உணவுவகைகளை சமைக்க உங்கள் தாயாருக்கு உதவியாக இருக்கவேண்டும். அதுதான் சரியான காரியம். உங்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. சரியாக அப்படித்தான் நீங்கள் செய்யவேண்டும்'' என்று கூறினேன். பரிசுத்த ஆவியைப் பெறாமலும், ஆவியின் வல்லமையால் வல்லமையான செயல்கள் பிரத்தியட்சப்படுத்தப்படாமலும் பிரசங்கிக்கப் போவதற்கு ஒருவருக்கும் ஊழியக்களங்களில் அலுவல் ஒன்றும் இல்லை. ஏனெனில் அது ஒன்றுதான் அம்மக்களை அசைக்க முடியும். உண்மையான சுவிசேஷமானது அப்பிரதேச மக்களுக்கு பிரசங்கிக்கப்படாததினால், அங்கெல்லாம் மக்களின் கலகங்கள், கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு வெறும் வார்த்தை ரூபத்தில் மட்டுமே சுவிசேஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவாயிருக்கிறது என்று பாருங்கள்? அதுதான் உலகுக்கு. சுயாதீனமாக வேதமும், சுயாதீனமான அச்சகமும் கிடைக்கச் செய்த லூத்தரின் காலமாகிய ''தப்பித்துக்கொண்ட'' காலத்தின் தொடர்ச்சியாக அது இருக்கிறது. 42இந்த காலம் ஒரு பெரிய மகத்தான காலமாகும். நாம் 7ம் வசனத்தைப் பார்ப்போம். அது வாழ்த்துதலைக் கொண்டதாயிருக் கிறது. அவ்வசனத்தைத்தான் நாம் வாசிக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன். “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்குத் திறக்கிற வரும், ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிற தாவது; வெளி.3:7. 43சரியானதொரு அறிக்கை இது! அவ்வாறில்லையா? இன்னும் ஒரு நிமிடத்தில் அவ்வசனத்திற்கு நான் திரும்பி வரப்போகிறேன். ஏனெனில் அது வேதத்தில் இக்காலத்தையும் தாண்டியுள்ள காலத்திற்கு பொருந்துகிறதாயிருக்கிறது. “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல் என் வசனத்தைக் கைக் கொண்டபடியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத் திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்”. வெளி.3:8 சகோதர சிநேகமும், மகத்தான மிஷனரி ஊழியத்தின் அசைவும் கொண்ட இக்காரியம் உலகையெல்லாம் நிரப்பி, எங்கும் பரம்பியதற்குப் பிறகு வரும் வேளையை கவனியுங்கள். பத்திரிக்கைகள், துண்டுப் பிரதிகள் ஆகியவற்றை உலகின் பல பாகங்களில் விநியோகித்தலாகிய காரியத்தைப் பற்றி நான் ஒன்றும் விரோதமாகச் சொல்லவில்லை. இப்பொழுது ஸ்தாபன சபையானது கல்வியறிவு, கிரியைகள் ஆகியவற்றுக்கு திரும்பிப் போய்விட்டது. திரும்பிப்போய்விட்டது என்பதைப் பாருங்கள். மகா ஸ்தாபனமானது ஸ்தாபிக்கப்பட்டதற்குப்பிறகு, இயேசுவோ ''திறந்த வாசலை'' வைக்கிறார். வெஸ்லியின் காலம் வந்ததற்குப் பிறகு, பூமியில் மெதோடிஸ்ட் சபையானது ஸ்தாபிக் கப்பட்டது. அது வேர்கொண்டு, வளர்ந்து, இன்றைக்கு இருக் கிறபடி மகாபெரிய சபையாக உருவாகியது. ப்ராடெஸ்டெண்ட் சபைகளுக்குள் உள்ள பெரிய சபைகளுள் ஒன்றாக அது திகழ்கிறது. அச்சபை உருவான அக்காலத்தில்தான், சபையானது லவோதிக் கேயா சபைக்காலத்தினுள் பிரவேசிக்கும் முன்னர், சபைக்கு இயேசு 'திறந்த வாசலை' வைத்தார். 44ஒரு சபைக்காலம் அடுத்த சபைக்காலத்திற்குள் சற்று நீண்டு நீடித்தது என்பதைப்பற்றி நான் கூறிய காரியத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்காகத்தான் நான் இதை இவ்விதமாகக் கூறுகிறேன். பாருங்கள்? அவ்வாசலானது, மிஷனரி ஊழியத்தின் காலம் முதற்கொண்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் அவர்களுக்கு, தான் தாவீதின் திறவுகோலை உடையவராயிருக் கிறதாகக் கூறியுள்ளார் என்பதை பாருங்கள். வொயிட்ஃபீல்ட், ஃபின்னி, சேங்கி மற்றும் கடைசியாக வந்த மூடி ஆகிய மிஷனரி கள் தோன்றிய மிஷனரி ஊழியக்காலத்திற்குப் பிறகு, இப்பொழுது வந்து, சபைக்கு முன்பாக அவர் திறந்தவாசலை வைக்கிறார். ஓ, இப்பொழுது இங்குதான் நீங்கள் கவனிக்கவேண்டியதிருக்கிறது. அது பிலதெல்பியா சபையின் காலத்திற்கும், லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இடையில் உள்ளதாக இருக்கிறது. இயேசுவே வாசலாயிருக்கிறார். நீங்கள் என்னுடன் யோவான் எழுதின சுவிசேஷம் 10:17-க்கு இப்பொழுது திருப்பி, இவ்விஷயத்திற்கு அதை ஆதாரமாக ஆக்கி, விசுவாசத்தின் நிச்சயத்தை உங்களில் அநேகர் உடையவர்களாயிருப்பீர்களாக. ஏனெனில், யாராவது, 'அவர்தான் அப்படிச் சொன்னார், நான் ஒருபோதும் இல்லை...'' என்று பின்னால் சொல்லிவிடக்கூடும். யோவான் எழுதின சுவிசேஷம் 10ம் அதிகாரம் 17ம் வசனத்தை நான் வாசிக்க விரும்புகிறேன். யோவான் 10:17. நல்லது, இந்த வசனங்களை நாம் வாசிக்கிறோம். யோவான் 10:7,17 அல்ல. “...இயேசு... அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.'' யோவான் 10:7 45அது ஆசீர்வாதத்திற்குள் திரும்பவும் போக வைக்கிறது. எவ்வாறு நாம் கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிறோம்? அவர் என்னவாயிருக்கிறார்? ஆட்டுத்தொழுவத்திற்கு அவர் என்னவா யிருக்கிறார்? நான் அடிக்கடி, 'இது என்ன? அவர் ஒரு மனிதனா யிருக்க, அது எப்படி அவர் வாசலாயிருக்க முடியும்?'' என்று எனக்குள் வியந்ததுண்டு. ஒருநாள் நான் கிழக்கத்திய தேசங்களில் ஒன்றில், மேய்ப்பனானவன் ஆட்டுத் தொழுவத்திற்குள் ஒரு வாசல் வழியாக ஆடுகளையெல்லாம் இரவு நேரத்தில் ஓட்டிவிட்டு அவைகளையெல்லாம் ஒன்று சேர்த்து, எல்லா ஆடுகளும் உள்ளே வந்துவிட்டனவா என்று அவைகளை எண்ணுகிறதைக் கண்டேன். அதன்பிறகு, அவனே அத்தொழுவத்தின் வாசலுக்கு குறுக்கே வாசலாக அடைத்துக்கொண்டு படுத்துக்கொள்கிறான். அவனைத் தாண்டிப் போகாமல், யாதொன்றும் உள்ளே இருக்கும் ஆடுக ளண்டையில் போகவோ, அல்லது ஆடு ஒன்று வெளியே ஓடி விடவோ முடியாது. எனவே, பாருங்கள், இயேசுவே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசலாயிருக்கிறார். நாங்கள் ஒரு பிரிட்டிஷ் ஜீப்பில் பயணம் செய்து கொண் டிருந்தோம். அப்பொழுது என்னுடன் ஜீப்பில் வந்தவ ரிடம் நான், ''இது என்ன விஷயம்? மேய்ப்பர்கள் நகருக்குள் வந்தவுடன் ஒரு விசில் ஊதப்படுகிறது, அப்பொழுது அனைத்து வாகனங்களும் ஓடாதபடி சடன் பிரேக் போட்டு நிறுத்தி விடுகிறார்களே'' என்றேன். ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளோடு நகரின் பிரதான பகுதி வழியாக கடந்துசென்று கொண்டிருந்தான். 46இங்கேயிருப்பதைப்போல் கிழக்கில் இருக்கவில்லை. அவர்கள் அங்கே வீட்டருகில், சந்தைகளில் நற்பலன்களாகிய விளைபொருட்களை கொண்டு வந்து குவிக்கிறார்கள். அங்கே ஆப்பிள் பழங்களும், பேரிக்காய்களும், இன்னும் பலப்பலவித மான கனிவர்க்கங்களும், திராட்சையும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்குரிய ரேக்குகளில் அவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தங்களுடைய பழங்களையும் பொருட்களையும் உங்களை வாங்கச் செய்ய, அவர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உங்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பிட்ட அந்த மேய்ப்பனானவன் நகரின் பிரதான வீதியின் வழியாக அப்பொழுது வந்தபொழுது, நான் அவரிடம், “சகோதரனே, இதோ இங்கே பரபரப்பான விஷயம் வருகிறது, நான் நின்று கொண்டு அதை கவனிக்கப்போகிறேன்'' என்று கூறினேன். ''நீங்கள் ஆச்சர்யப்படப் போகிறீர்கள், கவனியுங்கள் சகோ. பிரன்ஹாம் அவர்களே'' என்று அந்த சகோதரன் கூறினார். யாவும் நின்றுவிட்டன. மேய்ப்பன் ஆடுகள் எதையும் பற்றி கவனிக்காமல் முன் நடந்து சென்றான். ஆடுகள் அப்படியே சரியாக அவன் பின் சென்றுகொண்டிருந்தன. அவனைப் பின் சென்றன! அவனுடைய ஒவ்வொரு அசைவையும், திரும்புதலையும் பொறுத்து அவைகளும் அவனைப் பின்பற்றி அவ்வாறே செய்தன. ஒவ்வொன்றும் அணி பிசகாமல் சரியாக யாவும் அவனை அப்படியே பின்பற்றின. 47அந்த விதமாகத்தான் நாமும் பரம மேய்ப்பரைப் பின்பற்று கிறோம். அது உண்மை . பிரதான வீதியின் நடுமையத்தில் அவ் வாடுகள் தங்கள் மேய்ப்பனை ஒரு நாயைப்போல் பின்பற்றிச் சென்று, மறுமுனையில் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காக சென்றன. வழியில் சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கனிவர்க்கங் களையெல்லாம் அவை ஏறெடுத்துப் பார்க்கின்றன, ஆனாலும் தங்கள் மேய்ப்பனையே அவை பின்பற்றிச் சென்றன. ஓ, அது எனக்கு மிகவும் விருப்பம். பாருங்கள்! “ஓ சகோதரனே, எனக்கு இந்த பாஷையைப் பேச முடிந்தால் நலமாயிருக்கும். அவ்வாறு என்னால் பேச முடிந்தால், இப்பொழுதே பிரசங்கிப்பேன்'' என்று கூறினேன். அவ்வாடுகள் வலது புறமோ அல்லது இடது புறமோ சாயாமல், சரியாக மேய்ப்பனின் பின்னால் அணிவகுத்துச் சென்றன. 48தான் நடந்து வந்த பாதையிலெல்லாம், இவ்வளவு காலமாக, அவருடைய சபையும், அவ்வாடுகளைப் போலவே, சரியாக, தங்களை நித்திய ஜீவனுக்குள் வழி நடத்துகிற மேய்ப்பரான பரிசுத்த ஆவியானவரை பின்பற்றி, அவர் பின்னால் நிலைத்திருக் கிறது. அவர்கள் கவனத்தை திருப்பத்தக்கதாக, இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும், கவர்ச்சிகரமான ஆடம்பரமான சபைகள் இருந்த போதிலும், இதில் பெரிய வேதபண்டிதர் இருக்கிறார். அதில் அநேக வேதபண்டிதர்கள் இருக்கிறார்கள் என்னப்பட்ட போதி லும், மேய்ப்பனின் பின்னாலேயே அவர்கள் தங்கித்தரித்து இருக்கிறார்கள். மேய்ப்பன் போகிற இடமெல்லாம், ஆடுகள் அவனை பின் செல்லுகின்றன. '...என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவைகள் அன்னியனுக்குப் பின்செல்லுவதில்லை''. அது சரிதான். ஆடுகளை கிரியை செய்யச்செய்யும் ஒலிகளை யெல்லாம் அந்த மேய்ப்பன் அறிந்திருக்கிறான். 49அதன்பிறகு நாங்கள் நகரத்தைவிட்டு வெளியே வந்த பொழுது, அங்கே ஒரு ஆச்சர்யமான காரியத்தை நான் கண்டேன். அங்கே வயல்வெளியில், சில மனிதர்கள் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்கள் வசமாக கழுதைகளும், பசுமாடுகளும், பன்றிகளும், ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன. ''அங்கேயிருக்கிற ஆட்கள் யார்?'' என்று நான் கேட்டேன். “மேய்ப்பர்கள்'' என்று சொன்னார் என்னுடன் இருந்த அந்த மனிதர். ''ஒரு மேய்ப்பன் கழுதைகளையா மேய்த்துக்கொண்டிருப்பான்?'' என்று நான் கேட்டேன். அவர் சொன்னார், “ஆம், ஐயா'' என்று. ''மேய்ப்பன் என்றால் ஆடுகளை மேய்ப்பவன் என்றுதான் பொருள் என்று நான் நினைத்திருந்தேனே'' என்றேன். அவர் அதற்கு, “இல்லை, இங்கு ஒரு மேய்ப்பன் என்னப்பட்டவன் எந்த மந்தையையும் மேய்க்கிறவன், கால்நடைகளை புல்வெளிகளில் மேயவிடுபவன் என்றுதான் பொருள். உங்களுடைய தேசத்தில் இவர்களை கௌபாய் (Cowboy) என்று கூறுகிறார்கள்'' என்று கூறினார். ''ஓ அப்படியா, ஒரு மேய்ப்பன் என்றால் இங்கே மந்தையை மேய்ப்பவன் என்றுதான் பொருளா?'' என்று நான் கூறினேன். ''ஆம்'' என்றார். “அவன் மந்தையை காத்துக்கொள்கிறான்'' என்றேன். 50'அது சரிதான்'' என்றார் அவர். அவர் மேலும், “ஆச்சரியப் படக்கூடிய வினோதமான காரியம் ஒன்றுண்டு, நீங்கள் ஒரு ஊழியக்காரராக இருக்கிறபடியினால் நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லக்கூடும். இரவு நேரம் வருகையில்... அவைகள் ஒவ்வொன்றையுமே அவன் மேய்த்து, வழிநடத்தி, பகற்காலத்தில் அவைகள் உண்பதற்கு நல்லவைகளைப் பெற்றுக் கொள்ளும்படி அவன் பார்த்துக்கொண்டு, அவ்வாறு அவை களுக்கு அவன் உதவி செய்கிறான், அது உண்மைதான்; ஆனால், இரவு நேரம் வருகையில், அம்மேய்ப்பனிடத்தில் இருக்கிற கோவேறு கழுதைகள், கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் வேறு என்னவெல்லாம் கால்நடைகள் அவன் வசமாய் இருக்கின்ற னவோ, அவைகளையெல்லாம் வயல்வெளியிலேயே விட்டு விடுகிறான், ஆனால் அவன் ஆடுகளையோ, சுற்றிவளைத்து, அழைத் துக்கொண்டு போய் தொழுவத்துக்குள் சேர்த்துவிடுகிறான்” என்று அவர் கூறினார். 51“ஓ, கர்த்தாவே, நீர் என்ன செய்தாலும் சரி, என்னை ஒரு ஆடாக ஆக்கும். இரவு நேரம் வருகையில், நான் ஆட்டுத் தொழுவத்திற்குள் போய்விட விரும்புகிறேன்'' என்று நான் கூறினேன். வாசல் வழியாக பிரவேசிக்கவேண்டும், வாசல் வழியாக வரவேண்டும். இயேசு யோவான் 17:7 இல்லை, யோவான் 10:7ல் அவர், ”நானே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல்...'' என்று கூறினார். ''எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான்'' என்றார். (யோவான் 10:7-9). “இப்பொழுது, பிலதெல்பியா சபையின் காலத்திற்கும், லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இடையில் உள்ள இந்த சபைக்கு முன்பாக நான் திறந்த வாசலை வைக்கிறேன்'' என்றார். ஓ, நீங்கள் அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? நீங்கள் இதைப்பற்றி மிகவும் கவனமாய், கருத்தாய் எண்ணிப் பார்க்கிறீர்களா? இப்பொழுது கவனியுங்கள். இது அருமையாயிருக்கிறது. அது கன்மலையின் தேனாக இருக்கிறது. அதிலிருந்து தங்கப் பாளங்களை அது வெளிக்கொணர்ந்து பிரகாசிக்க வைக்கிறது. ”நானே ஆட்டுத்தொழுவத்திற்கு வாசல்''. இப்பொழுது இங்கே வைக்கப்பட்டுள்ள அந்த வாசல் என்ன? நம்முடைய சிந்தையில் நாம் பின்னால் திரும்பிப் போவோம். பரிசுத்தமாகுதலின் செய்தியோடு உலகம் முழுவ திலும் பரவிய மெதோடிஸ்டுகளின் அந்த மகத்தான மிஷனரி காலத்திலிருந்து பார்ப்போம். லூத்தரின் காலம் நீதிமானாகுதல் என்ற செய்தியை பரம்பச் செய்தது. வெஸ்லியோ பரிசுத்தமாகுதல் என்ற செய்தியோடு வந்தார். மெதோடிஸ்டுகளின் காலத்தின் முடிவில் அது வேர் பிடிக்கும்போது, அது பெரிய ஸ்தாபனமாக ஆக ஆரம்பித்தது. எந்தவொரு சபையும் எப்பொழுதாவது... 52இப்பொழுது, இதை மிகவும் கவனமாகக் கேளுங்கள். இது கருகலானதாக இருக்கிறது. இவ்விஷயத்தைக் குறித்து யாராவது எனக்கு வரலாற்றிலிருந்து சேகரித்துக் கூறுங்கள் பார்க்கலாம். பெந்தெகொஸ்தே வழியில், ஸ்தாபனமாக அமையாமல், தேவனால் எழுப்பப்பட்ட எந்தவொரு சபையும் ஸ்தாபனமாக தன்னை ஆக்கிக்கொண்ட உடனேயே மரித்தது. அது திரும்ப எழுந் திருக்கவேயில்லை. ஓ, உறுப்பினர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஆனால் அது விழுந்து போன நிலையிலிருந்து எழும்பினதாக வரலாறு கிடையாது. லூத்தரால் ஏற்பட்ட எழுப்புதலும், மெதோ டிஸ்டுகளுக்கு ஏற்பட்ட எழுப்புதலும், மீண்டும் ஏற்படவில்லை. ஏன், பெந்தெகோஸ்தேயினருக்கு ஏற்பட்ட எழுப்புதலும்கூட திரும்ப வரப்போகிறதில்லை. இல்லை, ஐயா! ஏனெனில் அவர்கள் யாவரும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு விட்டார்கள். “அக்காரியத்தை அவர் வெறுப்பதாக'' தேவன் சபைக்காலங்களில் கூறியிருக்கிறார். அதுதான் நிக்கொலாய் மதத்தினரின் போதக மாகும். நாம் எவருக்கெதிராகவும் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய ஆடுகள் அங்கிருக்கிற அவைகள் யாவிலும்கூட இருக்கின்றன. நல்ல ஜனங்கள் சிதறியிருக்கிறார்கள். அது உண்மைதான். மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், அவர்கள் யாராயிருந்தாலும் சரி, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்திருந்தால், அவர்கள் தேவனுடைய ஜனங்கள். ஆனால் ஸ்தாபனங்கள் அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்றன. மெதோடிஸ்டி லிருந்து கடிதம் பெற்றுக்கொண்டு பாப்டிஸ்டுக்கும், அதிலிருந்து கேம்ப்பெல்லிட்டுகளிடமும் போகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு சபையாக தாவிக்கொண்டேயிருக்கிறார்கள். 53சரி, அந்த சபையின் காலத்தின் முடிவில் கர்த்தர் எவ்வாறு கூறினார்? ''ஆட்டுத்தொழுவத்திற்கு நானே வாசல்'' என்று கூறினார். இயேசுவைப் பற்றிய என்னவிதமான வாசல் இவ்விரு காலங்களுக்கும் நடுவில் திறக்கப்பட்டது? ஏறக்குறைய 1906ம் ஆண்டில், மெதோடிஸ்டுகளின் காலம் மங்கிக்கொண்டே வந்தது. அப்பொழுது ட்வைட் மூடி போன்றவர்கள் வந்துவிட்டு, அவர் களின் ஊழியமும் முடிவுறுகிற கட்டத்தில், மக்கள் பரிசுத்த ஆவி யைப் பெற்றுக்கொள்ளுதலும், அந்நியபாஷைகளில் பேசுதலும் மற்றும் இன்னபிற காரியங்கள் செய்தலும், சபைக்குள் மீண்டும் ஏற்பட்டது. ஏறக்குறைய 1906ம் ஆண்டில் அது சம்பவித்தது. 54நல்லது, அதற்குப் பிறகு என்ன சம்பவித்தது? அவர்கள் செய்த முதல் காரியம் என்னவெனில், அந்த பழைய ஜெனரல் கவுன்சிலை இப்பொழுது ''அசெம்ப்ளீ ஸ் ஆஃப் காட்'' என்று அழைக்கப்படும் சபை ஸ்தாபனமாக ஸ்தாபித்தார்கள். பாருங்கள், முந்தின காலத்திலிருந்து அடுத்த காலத்திற்குள்ளும் சற்று நீடித்து இருந்து கொண்டிருந்த சபையிலிருந்துதான் இது நடந்தது. அதன்பிறகு என்ன சம்பவித்தது? அவர் ஒரு திறந்த வாசலை'' வைத்தார். நாம் இப்பொழுது அதை வாசிப்போம். நான் வார்த்தைக்கு வார்த்தை அவர் கொண்டு வருகிறபடியே அதனுடைய வியாக் கியானத்தை பார்க்கிறேன். “அதை ஒருவனும் பூட்டமாட்டான்'' ”...திறந்த வாசலை உனக்கு முன்பாக வைக்கிறேன்...'' இதோ இது மற்ற பக்கத்தில் காணப்படுகிறது. “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அதை ஒருவனும் பூட்ட மாட்டான்.” “ஒரு திறந்த வாசல்'' அது என்னவாக இருக்கிறது- அது தானே இயேசு கிறிஸ்துவின் உன்னத தேவத்துவத்தைப் பற்றிய வெளிப்படுத்துதலாயிருக்கிறது. திரித்துவத்தின் இரண்டாவது ஆள் என்பதாக அல்ல, ஆனால், தேவன் தாமே மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதே அவ் வெளிப்பாடாக இருக்கிறது. இதையடுத்துள்ள வசனத்தை நாம் வாசிக்கையில் ஒரு நிமிடம் கவனியுங்கள். “...பூட்டி... உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்... என் நாமத்தை மறுதலியாமல்...'' 55நாமத்தை இழந்துபோன அந்த சபைக்காலத்திற்குப் பிறகு, இப்பொழுதுதான் முதன்முறையாக மீண்டும் இச்சபைக்காலத் தில், நாமத்தைக் குறித்து பேசப்பட்டிருக்கிறது. லூத்தரின் காலம் உயிருள்ளவன் என்ற நாமத்தோடு வெளிவந்தது. அது மரித்ததா யிருந்தது. (அது சரிதானே?) “பிதா குமாரன் பரிசுத்த ஆவி''. இங்கே மீண்டும் இவ்விரண்டு காலங்களுக்கிடையில், இயேசு வின் நாமம் வெளிவருகிறது. இரு காலங்களுக்கிடையில், ”திறந்த வாசல்'' வருகிறது. அவர் என்னவாயிருக்கிறார் என்பதின் வெளிப் பாடாக அது இருக்கிறது. அவருடைய தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்பாடு அது. அதைத்தான் அவர் முதலாவது சபைக்காலத்திலேயே வெளிப்படுத்தினார். இப்பொழுது கவனியுங்கள். அவர் ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருப்பதை யோவான் காண்கையில், அவர் தன்னுடைய கைகளை விரித்தவராக நின்று கொண்டு இருக்கிறார். இங்கே முதலாவது குத்துவிளக்கு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு ஆகிய இவற்றின் நடுவே இயேசு சிலுவையில் இருப்பது போல் கைகளை விரித்தவாறு நிற்கிறார். அவர் நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன்'' என்று கூறினார். அதாவது ''நான் முதலாவதில் உன்னதமானவரா யிருப்பதுபோலவே, கடைசியானதிலும் உன்னதமானவராயிருக் கிறேன்'' என்கிறார். ஒளியானது கிழக்கில் எழும்பி மேற்கில் மறைகிறது. அது இருண்ட அந்தகாரமான நாளாக இருந்திருக் கிறது. ஆனால் சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகும்.'' கிழக்கில் ஒரு கையின் பகுதியில் எழும்பிப் பிரகாசித்த அதே சுவிசேஷ வல்லமையானது இப்பொழுது மேற்கில் பிறிதொரு கையின் பகுதியில் பிரகாசித்து, “நான் அல்பாவும் ஓமெகாவு மாயிருக்கிறேன். ”A“ யும் நானே, ”Z“-ம் நானே என்கிறார். அவரது கரத்தில்! நீங்கள் புரிந்துகொண்டீர்களா? 56வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் அவர் என்ன செய்தார்? முதல் சபையாகிய எபேசுவுக்கு அவர் தன் னுடைய உன்னத தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தினார். அப்படித்தானே? நல்லது, இப்பொழுது கவனியுங்கள். அதை யடுத்து வந்த ஒவ்வொரு சபைக்கும் அவர், மகிமைப்படுத்தப் பட்ட ரூபத்தில், அவருடைய தெய்வீகத் தன்மையை வெளிப் படுத்தினார். ஆனால் இந்த கடைசி சபைக்காலத்தில், அவர் அகர வரிசையில் கடைசி எழுத்தான “Z” ஆகிறார். அது ஆதி நிலைக்குத் திரும்புகிறதாயிருக்கிறது. அவர் 'ஆதியும் அந்தமுமாயிருக் கிறதைப் பாருங்கள். முதலாவது காலம், இப்பொழுது கடைசி காலம். ஏனெனில் அவர் கூறினார், “நான் ஆதியும் அந்தமுமா யிருக்கிறேன்'' என்று. 57'அது எப்படி சம்பவித்தது?'' என்று நீங்கள் கேட்கிறீர்கள். “எந்த ஆள் அதைச் செய்தது?'' என்று கேட்கிறீர்கள். அது வெளிப் படுத்துதலாயிருக்கிறது. இங்கே உங்களில் அநேகர் அதைப் பெற் றிருக்கிறீர்கள். ஏனெனில் அவருடைய ... இப்பொழுது ஒரு காரியத்தைக் கூறப்போகிறேன். பாருங்கள்! அவருடைய முழுச் சபையும் இயேசுவின் தெய்வீத் தன்மையைப் பற்றிய வெளிப் படுத்துதலின் மேல் கட்டப்பட்டுள்ளது. அது சரிதானே? அதை நீங்கள் விசுவாசிக்காவிடில், நாம் மத்தேயு 16:18ம் வசனத்திற்குப் போவோம். அங்கே நீங்கள், முழு வெளிப்படுத்துதலுமே அவர் மேலயே கட்டப்பட்டுள்ளது என்பதை இன்னும் சிறிது நேரத்தில் காண்பீர்கள். அவரைப் பற்றிய வெளிப்பாட்டின்மேல்தான் அவரது முழுச் சபையும் கட்டப்பட்டுள்ளது. நாம் இப்பொழுது 14ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். 58“அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும்...'' இங்கு கேட்கப்பட்ட கேள்வி என்னவெனில், மத்தேயு 16:13ம் வசனத்தில் இயேசு கேட்டார். “பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லு கிறார்கள் என்று கேட்டார்.'' மத்.16:13 இப்பொழுது கவனியுங்கள். இங்கேதான் முதல் முறையாக அவர் சபை என்னும் சொல்லைக் குறிப்பிடுகிறார். அவர் கடைசி யாக வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் இந்த சொல்லை உபயோகிக்கிறார். “அதற்கு அவர்கள் : சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லு கிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் (அந்த முழு குழுவினரிடமும்). சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக : நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்த வில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப் படுத்தினார்“ மத். 16:14-17. 59ஓ, என்னே ! “நீ இதை ஒருபோதும் வேதக்கல்லூரியில் கற்று அறிந்து கொள்ளவில்லை. வேறு எந்த வழியிலும், யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ இதைப் பெற்றுக் கொள்ளவில்லை. நானே அவர் என்ற ஆவிக்குரிய வெளிப்பாடு, பரலோகத்திலிருந்து உனக்கு வெளிப்படுத்தப்பட்டதின் மூலமாகத்தான் நீ பெற்றுக் கொண்டாய்'' என்றார். ''நானே அவர் என்று நீங்கள் விசுவாசியா விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்'' என்று இயேசு கூறினார். “மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” மத். 16:18 அது என்னவாக இருக்கிறது? ஆவிக்குரியது! ஆவிக்குரியது! அது ஆவிக்குரிய சத்தியமாயிருக்கிறது! அது கர்த்தருடைய வார்த்தை ! 60தேவன் இவ்விரண்டு காலங்களுக்கு இடையில், சபைக்கு இக்கடைசி காலத்தில் அனுப்பிக் கொடுத்துள்ள வெளிப்பாடு, தேவன் தன்னைத்தானே “திறந்த வாசலாக'' வெளிப்படுத்துவதாகத் தான் இருக்கிறது. அது பிலதெல்பியாவின் காலத்தில் கொடுக்கப் படவில்லை, அல்லது அது லவோதிக்கேயா சபைக் காலத்தில் கொடுக்கப்படவில்லை. அல்லது, பிலதெல்பியா சபையின் காலத்திலும் கொடுக்கப்படவில்லை, ஆனால் இவையிரண்டுக்கும் இடை யில் உள்ள (ஒரு சபைக்காலம் முடிவடைந்த பிறகும், அதற்கடுத்த சபைக்காலத்திற்குள் சற்று நீண்டு இருக்கிற அந்தக் காலத்தில்) தான் அது ஏற்பட்டது. இன்னும் சற்று கடந்து போய், நான் உங்களுக்கு அதை நிரூபிப்பேன். அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டு காண முடியும். பாருங்கள். நீங்கள் அதைக் காண விரும்பினால், உங்களால் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு சிறப்பாக வளமையாக அதை எடுத்துக் காண்பிப்போம். பாருங்கள். சரி. அவருடைய சபையை அவர் எங்கே கட்டியிருக்கிறார் என்றால், அவரைப் பற்றிய வெளிப்படுத்துதலின் மேல் தான். இப்பொழுது, அது தான் உண்மை என்று எத்தனை பேர் அறிந்திருக் கிறீர்கள்? அவர் தம்முடைய சபையை தன்னைப்பற்றிய வெளிப் பாட்டின் மேல் கட்டியிருக்கிறார். நல்லது, இப்பொழுது அவர் என்ன கூறுகிறார்? “ஒருவனும் பூட்டக்கூடாதபடிக்கு''. “உன்னுடைய கிரியைகளை அறிந்திருக்கிறேன்.... இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்...'' வெளி.3:8 61''திறந்த வாசல்'' என்பது என்ன? இயேசுகிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்படுத்துதலாக அது இருக்கிறது. அவர் தன்னுடைய முதல் சபைக்கு, அதின் காலத்தில் என்ன கூறினார்? “இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவர் நானே! முந்தினவரும் பிந்தினவருமாகியவர் நானே! சர்வ வல்லமையுள்ளவர் நானே!'' என்று கூறினார். அதை அவர் மூன்று வெவ்வேறு சமயங்களில் கூறியிருக்கிறார். இந்த முதல் சபைக்கு இங்கே அவர் தன்னுடைய தெய்வீகத் தன்மையைப் பற்றி வெளிப்படுத்தினார். கடைசி சபைக் காலத்திற்குள் போகும் முன்னர் அவர், ''திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்'' என்று கூறினார். வெளிப்படுத்தலை நீங்கள் காண விரும்பினால் இது இங்கேதான் உள்ளது. சபையை அவர் அதின்மேல் கட்டுவார். அவர் தன்னுடைய சபையை எடுத்துக் கொள்வதற்குரிய ஒரே வழி, அதை திரும்ப, தாம் யார் என்பதைப் பற்றிய வெளிப்படுத்துதலுக்கு கொண்டு செல்லுவதே யாகும். உண்மையாக அப்படித்தான்! கவனியுங்கள்! ஆபிரகாம் தேவனோடு உடன்படிக்கை செய்தபொழுது, அல்ல, தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தபொழுது, அந்நாளில் அவன், “இக்காரியங்கள் எப்படி யாகும்? நான் வயது முதிர்ந்தவனாயிருக்கிறேனே? இதோ, இந்த என்னுடைய ஊழியக்காரனாகிய தமஸ்கு ஊரானாகிய எலியேசர் தான் என்னுடைய வாரிசாக இருக்கிறான். எனக்கு வயதாகி விட்டது. நீர் எனக்கு ஒரு குழந்தையை தருவதாக வாக்களித் துள்ளீரே, அதை நீர் எவ்வாறு செய்வீர்? அது எவ்வாறு செய்யப்படும்?'' என்று கேட்கிறான். 62அவனுக்கு ஆழ்ந்த நித்திரை ஏற்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுவதுபோல் அயர்ந்த நித்திரை அவனுக்கு உண்டாயிற்று. அது மரணம். அப்பொழுது சூளையின் புகை அங்கு உண்டானதை அவன் கவனித்தான். ஒவ்வொரு பாவியும் பாதாளத்திற்குப் போவதற்கு பாத்திரவானவனாக இருக்கிறான். அவன் ஒரு மிருகத்தை, அதாவது கிடாரியைக் கொன்றான். ஒரு பெண் வெள்ளாட்டையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக் குஞ்சையும் அவன் பலி செலுத்தியிருந்தான். அவன் காட்டுப் புறாவையும் புறாக்குஞ்சையும் வெவ்வேறாகக் பிரிக்கவில்லை. அங்கே அப்பொழுது, இந்த சிறிய வெண்ணொளி முன்னும் பின்னும், துண்டிக்கப்பட்ட மிருகங்களின் துண்டங்களின் நடுவே, ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, கடந்து சென்றது. 63ஜப்பானில் ஒரு உடன்படிக்கையை அவர்கள் செய்யும் பொழுது, எவ்வாறு அதைச் செய்வார்கள் என்பதை, ஜப்பானியர் யாராவது இங்கிருந்தால் அதை அறிந்திருப்பார். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் உப்பை எறிந்துகொள்வர். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உப்பை வைத்துக்கொண்டு, அவர்கள் ஒருவர் இன்னொருவரை நோக்கி, ''நீ இன்னின்னதைச் செய்ய ஒப்புக் கொள்கிறாயா?'' என்று கேட்க, மற்றவர் பிரதியுத்தரமாக, “ஆம், நான் இன்னின்னதைச் செய்வேன்'' என்று கூறுவார். இவ்வாறு அவர்கள் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொள்ளுவார்கள். அப்பொழுது அவர்கள் கொஞ்சம் உப்பை ஒருவர்மேல் ஒருவர் எறிந்து கொள்வார்கள். ஏனெனில் உப்பானது பத்திரப்படுத்தும் வஸ்துவாக இருக்கிறது, பாருங்கள், நல்லது, அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் பரஸ்பரம் உப்பை எறிந்து கொள்வது ஒரு உடன் படிக்கையைக் குறித்துக் காட்டுவதாக இருக்கிறது. இங்கு அமெரிக்காவில் நாம் ஒரு உடன்படிக்கையை எவ்வாறு செய்கிறோம்? நாம், “நல்லது, நீ இந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்வாயா?'' என்று கேட்க, மற்றவர் ”நான் இன்ன காரியத்தைச் செய்வேன்'' என்று கூறுகிறார். அவ்வாறு உடன் படிக்கை செய்து கொண்டதற்கு அடையாளமாக நாம் கை குலுக்கிக் கொள்ளுகிறோம். அவ்வுடன்படிக்கையின் பேரில் கைகுலுக்கிக் கொள்ளுதல். அதுவே ஒரு உடன்படிக்கையா யிருக்கிறது. 64ஆனால் கிழக்கத்திய தேசங்களில், அவர்கள் உடன்படிக்கை செய்யும் விதமானது எவ்வாறு உள்ளதென்றால்: அவர்கள் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டு மென்றால், அவ்வுடன் படிக்கையை எழுதிக்கொண்டு, ஒரு மிருகத்தைப் பலியிட்டார்கள். ஆபிரகாமின் காலத்தில் இவ்வாறு இருந்திருக்கிறது. அவர்கள் அம்மிருகத்தை வெட்டிப் பிளந்து, அதன் நடுவில் நிற்பார்கள். ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டு, அவ்வொப்பந்தம் எழுதப்பட்ட பத்திரத்தை இரு கூறாக கிழித்துவிடுவார்கள். ஒருவர் ஒரு துண்டையும், மற்றவர் மற்ற துண்டையும் எடுத்துக்கொள்வர். அதன்பிறகு அவர்கள், “இவ்வொப்பந்தத்தை சம்மந்தப்பட்ட வர்கள் முறித்துப்போட்டால், அப்பொழுது, பிளக்கப்பட்ட இந்த மரித்த மிருகத்தின் உடல்களைப்போல் அவர்கள் ஆகக்கடவர்கள்'' என்று சத்தியம் செய்து கொள்ளுவார்கள். இந்த ஒப்பந்தத்திற்கு நகல் எடுத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. இரு கூறாகக் கிழிக்கப்பட்ட இரு துண்டுகளைத்தான் மீண்டும் சரியாக ஒன்று சேர்க்கவேண்டும். அதைத்தவிர வேறு வழியில்லை. 65ஆபிரகாமுக்கு தேவன் என்ன காண்பித்தார்? அவர் என்ன செய்யப்போகிறதாகக் காண்பித்தார்? ஈசாக்கு வழியாக வந்த ஆபிரகாமின் சந்ததியான இயேசுவை அவர் எடுத்து, அவரைக் கல்வாரி சிலுவையில் வைத்து, அங்கே அவரைக் கிழித்து, அவருடைய சரீரத்திலிருந்து ஆவியை கிழித்து எடுத்துவிடப் போவதாகவும், அவருடைய சரீரத்தை உயிர்த்தெழச்செய்து உன்னதமானவருடைய வலது கரத்திற்கு அவரை உயர்த்தி அமரச் செய்து, பரிசுத்த ஆவியை சபையின்மேல் திரும்ப அனுப்பப் போவதாகவும் ஆபிரகாமுக்கு தேவன் காண்பித்தார். அதுவே, இருகூறாகக் கிழிக்கப்பட்ட தேவனுடைய உடன்படிக்கையாக இருக்கிறது. நமக்கு ஆவி கிடைத்திருக்கிறது, அவரிடத்தில் சரீரம் உள்ளது. இரண்டும் ஒன்றாக திரும்பச் சேரும்பொழுது, நம்மில் இருக்கும் ஆவியானது அவரோடு மணவாட்டியாக ஒன்று சேர்ந்துவிடும். ஆமென். எந்தவொரு ஸ்தாபனமும் அதனோடு பிணைக்கப்படவே முடியாது. இல்லை, ஐயா. அது கலப்பட மில்லாத, சுத்தமான, பரிசுத்த ஆவியின் பிறப்பினால் பிறந்ததாக இருக்கிறது. அவ்வளவுதான். அதுவே உடன்படிக்கை. 66“திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்'' என்று அவர் கூறியதை நாம் கண்டோம். எத்தனை வித விதமான, மனிதனால் உண்டாக்கப்பட்ட சங்கங்கள், அல்லது ஸ்தாபனங்கள் தோன்றினாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை, பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. நீங்களாக அதை சேர்ந்துகொள்ள முடியாது, நீங்கள் அதற்குள்ளாக பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். உண்மை! இயேசுகிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்பாட்டையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தையும் பற்றிய செய்தியை எவரும் தடுத்து நிறுத்தமுடியாது. பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. 67“அது சரியானதுதான் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்?'' என்று நீங்கள் கேட்கலாம். அது சரியாக வார்த்தையோடு பொருந் தினதாக இருக்கிறது. அதைப்பற்றி எவரும் எதுவும் பழுது சொல்ல முடியாது. மிகவும் சரியானபடி தேவனுடைய வார்த்தையாக அது இருக்கிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் எவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாக வேதத்தில் ஒரு இடத்திலும் காணப்படவில்லை. எபேசு சபைக் காலத்து தூதனாக விளங்கிய இந்த மகத்தான பரிசுத்த பவுல், ஞானஸ்நானம் எடுக்காத எந்த நபரும், அல்லது வேறு எந்தவிதமாக ஏற்கனவே எவரொருவர் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் சரி, அப்படிப்பட்ட நபருங்கூட, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்காவிடில், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மீண்டும் ஞானஸ் நானம் பெற்றுக்கொள்ளும்படி கட்டளையிட்டான். ''வானத்தி லிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறு எதையாகிலும் பிரசங் கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' என்று பவுல் கூறினான். எனவே, இக்கடைசி நாட்களில் வரும் தூதனானவன் எந்தவிதமான செய்தியைக் கொண்டு வருவான் என்பதை நீங்கள் காணமுடியும். நாம் ஒருவேளை அத்தூதனுக்கு நேராக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் அத்தூதன் வருகையில், அவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ் நானத்தைக் குறித்து பிரசங்கிப்பான் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் விசுவாசிக்காவிடில், நாளை இரவு நீங்கள் வந்தீர்களென்றால், நான் வேதவாக்கியங்களிலிருந்து அதை நிரூபித்துக் காண்பிப்பேன். அவன் நிச்சயமாக அவ்வாறே செய்வான். பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது போலவே, இப்பொழுதும், இருதயம் விருத்தசேதனம் பெறுதலும், தெய்வீக அற்புதங்களையும், வல்லமையானவைகளையும் நடப்பித்தலும் உண்டாயிருக்கும். பெந்தெகொஸ்தேயின் அதே மூல ஆசீர்வாதம் இக்காலத்தில் இருக்கிற மீதியாயிருப்பவர்களிடத்தில் திரும்பி வந்து அவர்களை மேலே கொண்டு செல்லும். முதல் வழியில் உடன்படிக்கையானது ஏற்பட்டவண்ணமாக சரியாக அதேபோல் இந்தக் காலத்திலும் இருகூறாகப் பிளந்த உடன்படிக்கையானது உண்டாயிருக்கும். ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இன்னும் வலு வாக இதை விவரிக்க என்னால் இயலவில்லை. அவர்களில் நானும் ஒருவன் என்று கூறிட மகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 68என்னுடைய சகோதரர் யாவரும் அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்புகிறேன். இந்த மகத்தான காரியத்தை உலகெங்கிலும் உள்ள என்னுடைய சகோதர, சகோதரிகள் யாவரும், என்னுடைய விலையேறப்பெற்ற சிநேகிதர் யாவரும், கண்டு கொள்ளவேண்டு மென்று நான் வாஞ்சிக்கிறேன். நான் இன்றிரவே... சித்தமாயிருக்கிறேன். தேவன் அதை அறிவார். எனக்கு சிறிய மகன் ஜோசப் இருக்கிறான். அவனை வளர்த்து ஆளாக்கவேண்டும், மகள்கள் சாராளும் ரெபெக்காளும் இருக்கிறார்கள், எனது இனிய மனைவியும் இருக்கிறாள். இவர்களையெல்லாம் விட்டுப்பிரிய நான் விரும்பவில்லை. ஆனால் உலகிலுள்ள நான் அறிந்திருக்கிற எனது சகோதரர்கள் அதை விசுவாசித்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருத்தல் முடிந்துவிட்டால், அப்பொழுது, நான் இவ்வுலகைவிட்டுப்போக ஆயத்தமாகிவிடு வேன். அது முற்றிலும் உண்மை . பாருங்கள், ஓ, எனக்கு இயலுமென்றால்.... நீங்கள் மிருதுவாகப் பேசினால், அவர்கள் மேல் நாம் எதையோ தந்திரமாய் புகுத்திவிட முயலுகிறோம் என்பதைப்போல் சிலர் எண்ணிவிடுகிறார்கள். வார்த்தையோடு சரியாக நிலைத்திருந்து, அதை ஆணித்தரமாக உறுதியான முறையில் பதியவைப்பதுதான் சரியான வழியாக உள்ளது. அதுதான் சரியாக இருக்கிறது. வார்த்தையோடு சரியாக நிலைத்திருங்கள். ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்! அவரைப்பற்றிய, அவரது உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய ஒரு வெளிப்பாடு. என்ன, அவர் அதைச் செய்தாரா? அதை விட்டுவிட என்னால் முடியவில்லை. அதை அவர் எபேசு சபையின் காலத்திலே வெளிப்படுத்தினார். அது சரிதானே? அப்பொழுது தான் ஒளியானது, அதாவது கிறிஸ்தவ ஒளியானது, முதன் முதலாக துளிர்விட்டு பிரகாசிக்கத் தொடங்கியது. அது சரிதானே? பரிசுத்த ஆவியின் யுகம், சரியாக இங்கே எபேசுவிலே துவங்கிற்று. 69'ஒரு நாளுண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல, ஆனால் சாயங்கால நேரத்திலே வெளிச்சம் மீண்டும் உண்டாகும்'' என்று தீர்க்கதரிசி கூறியிருக்கிறான். அதை நீங்கள் கண்டு கொண்டீர்களா? ஆனால், பாருங்கள், இந்த அந்தகார நாளானது அங்கிருந்து வரு கிறது, ஸ்தாபனங்கள் மற்றும் யாவும் இங்கே அந்தகாரமுள்ளதா யிருக்கிறது. ஆனால் இந்தக் கடைசி நாட்களில் இங்கே அவர் திறந்த வாசலை வைக்கிறார். இயேசு, “நானே வாசல்'' என்று கூறினார். 'நானே வாசல், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்'' என்று அவர் கூறியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? தண்ணீரே வாசலாகவும், வழி நெருக்கமுமாயிருக்கிறது'' (மத்.7:14). (தமிழ் வேதாகமத்தில் ''...வாசல் இடுக்கமும்...'' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாக மத்திலோ ''...தண்ணீரே வாசலாயிருக்கிறது...'' என்று கூறப் பட்டுள்ளது. Strait is the gate“ - மொழிபெயர்ப்பாளர்). அங்கே Strait என்ற வார்த்தை எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பார்த்தீர் களா? Strait என்றால் தண்ணீ ர் என்று பொருள். Straight என்றல்ல. தண்ணீரே வழியாயிருக்கிறது. தண்ணீரே வாசலாகவும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. எது அந்த தண்ணீ ர்? அதுதான் கதவு, அதுதான் அந்த வாசல். பாருங்கள்? அதை எப்படித் திறப்பது? ”கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் தண்ணீரின் மூலமாக'' அவ்வழியுள்ளது. தண்ணீரே வாசலாயிருக்கிறது. வழி நெருக்கமு மாயிருக்கிறது. இயேசு.... ''தண்ணீ ரே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் பிரவேசிப்பதற்கென வாசலாய் இருக்கிறது''. 70“நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது கல்வாரியை நீங்கள் நோக்கிப் பார்க்கையில், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர் கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்... உண்டாயிருக்கிறது''. சிலர் அவ்வாக்குத்தத்தம் அப்போஸ் தலருக்கு மட்டுமே உரியது என்று கூறுகிறார்கள். ”வாக்குத்தத்த மானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது''. “நம்முடைய தேவனாகிய கர்த்தர் வர வழைக்கும் யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' ஆகவே, உங்களின் பரிகாரத்திற்காக எழுதப்பட்டுள்ள அச்சீட்டின்படி அதே வழியில் நீங்கள் வந்தால், வாக்குத்தத்த மானது உங்கள் ஒவ்வொருவருக்கும் உரியதாக இருக்கும். அது சரிதான். 71“நான் வேறு ஏதாவது வழியில் உள்ளே நுழைந்து விடுவேன்'' என்று சொல்லாதீர்கள். ஒரு சமயம் வேறு வழியாக உள்ளே நுழைந்துவிட்ட ஒரு மனிதனைப்பற்றி நீங்கள் அறிவீர்கள். அதை நீங்கள் அறிவீர்களா? அதைப்பற்றி எழுதப்பட்டுள்ள உவமையை நீங்கள் எப்பொழு தாவது வாசித்திருக்கிறீர்களா? உள்ளே வேறு வழியாக நுழைந்து விட்ட மனிதனொருவன் அங்கே இருந்தான். கிழக்கத்திய தேசத்தில், அவர்கள் கலியாண விருந்துக்குப் போகும்போது... நாம் இதைப்பற்றி நாளை காலை பார்ப்போம். அக்கலியாண விருந்தில் அம்மனிதன் எவ்வாறு உள்ளே நுழைந்தான் என்பதைப் பார்ப்போம். நாளைக் காலையில் நாம் அதை எடுத்துக்கொள்வோம். நான் அதைப்பற்றி இப்பொழுது பேசலாம் என்று இருந்தேன். ஆனால் இப்பொழுது வேண்டாம். அக்கலியாண விருந்துக்கு அம்மனிதன் எவ்வாறு உள்ளே நுழைந்தான் என்பதைப் பற்றி நாளைக் காலையில் பார்ப்போம். நல்லது, “தண்ணீரே வாசலாயிருக்கிறது. வழி இடுக்கமாயிருக்கிறது''. தண்ணீரே வாசலாயிருக்கிறது, தேவனாகிய கர்த்தரிடம் பிரவேசிப்பதற்கு அதுவே நுழைவு வாசலாக இருக்கிறது. 72''நான் திறந்த வாசலை வைத்திருக்கிறேன். என்னிடத்தில் திறவு கோல்கள் உள்ளன. நான் ஒருவர்தான் அதை திறக்க முடியும். நான் தான் அதை வெளிப்படுத்திக்கொடுக்கமுடியும். என்னிடத் தில் திறவுகோல்கள் உள்ளன'' என்று இயேசு கூறுகிறார். அது சரிதானே? “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என் பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்''. எந்த சபையின் மூலமாயுமல்ல, எந்த ஸ்தாபனத்தின் மூலமாயு மல்ல; எந்த அத்தியட்சகரோ, போப்போ ஆகியோர் மூலமாயு மல்ல. இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே ஒருவன் இரட்சிப்படைய முடியும். அவரிடம் திறவுகோல்கள் உள்ளன. அவரால் மாத்திரமே இயலும். எதற்குரிய திறவுகோல் அவரிடம் உள்ளது? தாவீதின் திறவு கோல். எதிர்வரும் ஆயிர வருட அரசாட்சியில், அவர் தாவீதின் சிங்காசனத்தில் அமருவார். ''என்னிடம் தாவீதின் திறவுகோல் உள்ளது. நான் கதவைத் திறப்பேன். ஒருவனும் அதை பூட்டமுடியாது. என்னையன்றி ஒருவனும் அதைத் திறக்கமுடியாது. ஒருவனும் எனக்கு அதைப்பூட்ட முடியாது''. அது எவ்வாறு இயலும்? அவர் தாமே தன்னை ஒருவனுக்கு கிறிஸ்து என்று வெளிப்படுத்தும் வரைக்கிலும், எப்படி ஒருவன் அவரைப்பற்றி அவ்விதமாக அறிந்துகொள்ளமுடியும்? பாருங்கள், அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்துகிறார், அவரிடமே திறவுகோல் உள்ளது. அவரால் தான் அதைத் திறக்க இயலும். அல்லது திறக்காமல் விட்டு விடவும் இயலும். பாருங்கள்? “வாசலுக்குரிய திறவுகோலை நானே உடையவராயிருக்கிறேன். நானே வாசல். நானே வழி. நானே சத்தியமாயிருக்கிறேன். நானே ஒளியாயிருக்கிறேன்.'' ''ஓ! நானே அல்பாவும் ஓமெகாவுமாயிருக் கிறேன். நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நானே பிதாவும், நானே குமாரனும், நானே பரிசுத்த ஆவியுமா யிருக் கிறேன்.'' இருந்தேன் என்றல்ல, இருப்பேன் என்றும் அல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்பதாகத்தான் முழுவதும் அவர் இருக்கிறார். இருக்கிறேன் என்றால், நித்தியமாக ஜீவிக்கிறவர் என்று பொருள். இருக்கிறவராக இருக்கிறேன் என்பதைப் பாருங்கள். கடந்த காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, நிகழ் காலத்தில் இப்பொழுது இருக்கிறவராக இருக்கிறது போலவே அவர் எப்பொழுதும் இருக்கிறார். அவர் இருக்கிறேன்'' என்பதாகத்தான் இருக்கிறார். 73இராஜ்யத்திற்கான தாவீதின் திறவுகோலை அவர் உடையவ ராயிருக்கிறார். ஒருவனும் அதைப்பூட்ட முடியாது. 7ம் வசனம் அது சரியென்று நிரூபிக்கிறது. ஒருவரும் பூட்டக்கூடாதபடி அவர் தாவீதின் திறவுகோலையுடையவராயிருக்கிறார் என்பதை அது நிரூபிக்கிறது. அடுத்து என்ன உள்ளது என்பதைப் பற்றி விரைவாகப் பார்ப்போம். “...உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்...” வெளி.3:8 74ஓ, இச்சபைக் காலத்திலுள்ள அந்த சிறிய குழுவினருக்கு அவர், “உனக்கு சிறிதளவே பெலன் இப்பொழுது இருக்கிறது'' என்று கூறினார். அதன் அர்த்தம் என்ன? மரித்துப்போன மனிதன், கொஞ்சம் அசைந்து கொடுத்து, மெதுவாக உயிரடைந்து, சிறிது புத்துணர்ச்சி பெற்று, மெல்ல அசைந்தாடி, நடக்க ஆரம்பிப்பது போல் உள்ளது. ''உனக்குக் கொஞ்சம் பெலன் உள்ளது. நான் உனக்கு முன்பாக இப்பொழுது திறந்த வாசலை வைத்துள்ளேன்'' என்று கூறுகிறார். அவர்கள் போப்புமார்க்கக் கொள்கைகளையும், லூத்தரன் சபைக்கொள்கைகளையும் விட்டு, மற்றும் ஏனைய கொள்கைகளையும் மெதோடிஸ்ட்டு கொள்கைகளையும் விட்டு வெளியே வந்தபிறகு, அவர் அவர்களிடம், ”நான் உனக்கு முன்பாக திறந்தவாசலை வைத்துள்ளேன். உனக்கு சிறிதளவே பெலன் இருக்கிறது. அதைப்பற்றி நீ என்ன செய்யப்போகிறாய்? அது உனக்கு முன்பாக திறவுண்டு வைக்கப்பட்டிருக்கிறது, நீ விரும்புகிறதற்கேற்றவாறு, அதனுள்ளே அல்லது வெளியே நடந்து செல்லலாம், இவ்விரண்டில் ஏதாவதொன்றைச் செய்யலாம். வாசலானது உனக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. உனக்குக் கொஞ்சமாக பெலன்தான் உள்ளது. இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சம் ஜீவனை அடைந்து கொண்டிருக்கிறாய், நீ உள்ளே வந்துவிட்டாய்'' என்றெல்லாம் கூறுகிறார். 75எனவே, இவ்வாறாக ஆதி சபையோடு காரிய மானது இருந்தது. லவோதிக்கேயா சபையின் காலத்தின் இறுதிக் கட்டத்தை நீங்கள் கவனித்தால், அது மீண்டும் கிரியைகளைச் சார்ந்துகொள்ளுதலைக் கவனியுங்கள். லவோதிக்கேயா சபையின் காலத்திற்குள் நீங்கள் போகும் பொழுது, ''உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்'' என்று கூறுகிறார். அதை லவோதிக்கேயா சபையின் காலத்தினுடைய இறுதி கட்டத்தில் அவர் கூறுகிறார். அது என்ன? ''உன்னுடைய கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் இருக்கிறதையும்''. சாத்தா னுடைய சிங்காசனமானது என்ன? பாருங்கள், அவர்கள் மீண்டும் ஸ்தாபனமாக ஆனார்கள். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையினரே, பெந்தெகொஸ்தே ஒருத்துவக்காரர்களே, மற்றும் தேவ சபைக்காரர்களே, நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காணவில்லையா? தேவன் வெறுத்த, சகோதரத்துவத்தை உடைத்துப்போட்ட காரியத் திற்குள் நீங்கள் நேராக திரும்பிச் சென்றீர்களே. அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபைக்காரர்களைப் பாருங்கள், அதில் உலகத்திலேயே அருமையான மக்கள் உள்ளனர். யுனைடெட் பெந்தெகொஸ்தே சபையினரைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இதுவரை சந்தித் திருக்க முடியாத அருமையானவர்கள் அதிலும் இருக்கிறார்கள். தேவ சபைக்காரர்களைப் பாருங்கள். அவர்களுடைய அந்த ஸ்தாப னங்களினிமித்தமாக, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, பரஸ் பரம் பிகு பண்ணிக்கொண்டு, ஒருவருக்கொருவர் கூச்சலிட்டுக் கொண்டு, ''பருந்துக்கூடு'' என்றும், ''எலிவளை'' என்றும் ஏசிக்கொள்கிறார்கள். ஏன், இது அவமானகரமானதாக இருக்கிறது. 76சகோதரருக்கு இடையில் விரோதத்தை உண்டுபண்ணுதலை தேவன் வெறுக்கிறார். ஸ்தாபனங்கள்தான் அதைச் செய்கிறது, அது சகோதரருக்கு நடுவே விரோதத்தை உண்டு பண்ணுகிறது. நாம் இடைவெளியில் நின்று, 'நாம் சகோதரர்கள்'' என்று கூற வேண்டும். நாம் பிரிந்திருக்கவில்லை நாம் யாவரும் ஒரே சரீரம் நம்பிக்கையிலும், உபதேசத்திலும் நாம் ஒன்றாகவேயிருக்கிறோம். (வேதத்தின் உபதேசத்தில்) அன்பிலும் ஒன்றாகவேயிருக்கிறோம். “முன்செல்லுவீர் கிறிஸ்துவின் வீரரே'' என்ற பழைய பாடலை நான் விரும்புகிறேன். ஆம் ஐயா. லவோதிக்கேயர்கள் இறுதியில் கிரியைகளுக்குத் திரும்பிச் சென்றனர். அதாவது பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள், ஒரு ஸ்தாபனமாக ஆகிட திரும்பிச் சென்றனர். 15ம் வசனத்தை எடுத்துக்கொள்வோம். வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரம் 15ம் வசனம். அங்கே அது சரியாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பாருங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரம்... நான் அவ்வசனத்தை சரியாக குறித்து வைத்துள்ளேனா என்று பார்ப்போம். ஓ, இல்லை, இல்லை, நான் தவறு. வசனம் 15. அவ்வதிகாரத்தின் 15ம் வசனம்தான். அதே காரியத்தையே அது காட்டுகிறது. “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல, அனலுமல்ல,...” 77“உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்”. அவர்கள் தங்கள் பழைய நிலைக்கே திரும்பிவிட்டார்கள் என்பதைத்தான் அது காட்டுகிறது. தங்களுக்கிருந்த பெலத்தோடு, அவர்கள் பெந்தெ கொஸ்தே ஸ்தாபனத்திற்குள் போய்விட்டார்கள். அதே அதிகா ரத்தின் 15ம் வசனம். சரி. இரு சபைக்காலங்களுக்கும் இடையில் அவர்களுக்கு சிறிதளவு பெலன் இருந்தது. இரண்டு மதஸ்தாபன நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தின் காலத்திற்கு இடையில் அவ்வா றிருந்தது. இங்கே இந்த லூத்தரன்கள் உருவாகி வந்தபொழுது, அவர்கள் மீண்டும் குருக்களாட்சித் தத்துவத்தைக் கொண்டிருக்கும் நிக்கொலாய் மதத்தினரின் போதகத்திற்கே திரும்பிச் சென்றனர். அதன்பிறகு வெஸ்லி வந்தார், அவர்கள் ஸ்தாபித்து, கேண்டர் பரியிலுள்ள ஆர்ச்பிஷப் (தலைமை அத்தியட்சகர்) பதவியை உண்டாக்கிக்கொண்டு, சபைகளில் பெரிய பீடங்களையெல்லாம் ஏற்படுத்தி, அவர்களும் அவ்வாறே ஆகினர். அதற்கடுத்து வந்த பெந்தெகொஸ்தேயினர் காலத்தில், அவர்களும் அப்படியே மீண்டும், அவ்விதமான காரியத்திற்குள் திரும்பிச் சென்று, நிக்கொலாய் மதத்தினரின் போதகப்படியான அவர்களுடைய பெரிய பெரிய ஸ்தாபனங்களை உண்டாக்கிக்கொண்டார்கள். ஆனால் இவ்விரண்டு காலங்களுக்கும் இடையில், அவர் வாசலைத் திறந்து, சபைக்கு பெலன் ஈந்து, அது தலையை அசைத்துக்கொள் ளும்படி போதுமான உயிர்ப்பித்தலை அதற்குக் கொடுத்து, வெளியே எட்டிப்பார்த்து, அது, தான் எங்கேயிருக்கிறோம் என்று பார்த்துக்கொள்ளும்படி அதற்கு வெளிப்படுத்துதலைக் கொடுத்தார். ஒரு ஜந்துவை அடித்து அல்லது சுட்டு நாம் கீழே தள்ளிவிட்டால், முதலாவதாக அது செய்வதென்னவெனில், தலையை அசைத்து, நிமிர்ந்து சுற்றுமுற்றும் திரும்பிப்பார்க்கிறது. நான் கடந்த இரவில் அதைப்பற்றி ஒரு சொப்பனங் கண்டேன். சார்லி! நான் ஒரு அணிலைச் சுட்டேன் என்று நினைக் கிறேன். நான் அதை அதினுடைய காலில் சுட்டேன். அப்பொழுது அங்கே ஒரு வயதான ஸ்திரீ இருக்கிறதைப் பார்த்தேன். ஓ, அவள் என் மேல் கடுங்கோபங்கொண்டு, என்னைப்பிடிக்க வருவதற்கு இருந்தாள். இந்த சிறிய அணில் தன் கழுத்தைச் சுற்றி ஒரு வெள்ளை நிற வளையத்தை உடையதாயிருந்தது; அது அங்கே விழுந்து கிடந்து கொண்டு, தன் தலையை இரண்டு மூன்று தடவைகள் அசைத்து என்னை நோக்கிப் பார்த்துவிட்டு, இயன்ற அளவு விரைவாக காட்டுக்குள் திரும்ப ஓடிவிட்டது. அந்த வயதான ஸ்திரீ ஒருவேளை சபையைக் குறிக்கக் கூடும். அப்படி ஒருவேளை இருக்கலாம அல்லவா? அவள் என்னை மிதித்துக் கொன்றுவிடலாம் என்று முயற்சித்தாள். எப்படியோ அவளிடமிருந்து நான் தப்பித்துக்கொண்டுவிட்டேன். ஆனால் ஒரு சிறிதளவே ஒளி உண்டாயிருந்தாலும், தெருவுக்கு வழியைக் கண்டுபிடித்துக்கொண்டு போவதற்குப் போதுமானதாக இருந்தது. அவள் என்னை வெட்டி வீழ்த்திவிடலாம் என்றிருந்தாள். நான் உடனே எனது ஃபோர்ட் மோட்டார் வாகனத்தை விரைவாகத் திருப்பி ஓட்டிச் சென்றேன். எனக்குப்பின்னால் அவர்கள் பாதையை வெட்டிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியாக நான் திருப்பிக்கொண்டு, அவள் என்னைப் பிடிக்காதபடிக்கு, தப்பிச் சென்றேன். பாருங்கள், நான் பிடிபடாமல் தப்பித்துக் கொண்டேன். உன்னிடம் கொஞ்சம் பெலன் மீதியாக விடப்பட்டுள்ளது. அதைக்கொண்டு, நீ இந்த இரு ஸ்தாபனங்களுக்கு நடுவில் அவைகளுக்கெதிரான நேர் எதிர்த்திசையில் திரும்புவதற்காக அதை உபயோகிக்க நீ விரும்புகிறாய். “என் வசனத்தைக் கைக் கொண்டாய்'' என்று அவர் கூறுகிற வார்த்தையைக் கவனித் தீர்களா? அடுத்த வசனத்தை இப்பொழுது கவனிப்போம். “...உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்... என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே...” வெளி. 3:8 78“என் வசனத்தை கைக்கொண்டபடியினாலே” இப்படியாகத் தான் அவர்கள் தங்களுடைய பெலனைப் பெற்றுக்கொண்டார்கள். அவ்விதமாகத்தான் அவர்கள் தங்களுடைய வெளிப்படுத்துதலைப் பெற்றுக்கொண்டார்கள். லூத்தர் வேதாகமத்தை அச்சிட்டுக் கொடுத்தபோது, அது வெஸ்லியின் யுகத்தின் வழியாக தொடர்ந்து இக்காலத்துக்கு வந்தபோது, அவர்கள் அவருடைய வசனத்தைக் கைக்கொண்டார்கள். அதிலிருந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டை, அவர் மாம்சத்தில் நம் மத்தியில் தோன்றிய தேவன் தான் என்ற வெளிப்படுத்துதலையும், இயேசுவின் நாமத்தில் உள்ள தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றிய வெளிப்படுத்து தலையும் அவர்கள் பெற்று, அவ்வாறு அவருக்குள் சென்றார்கள். அப்பொழுதுதான் அவர்கள் அவருடைய நாமத்தைப் பெற்றுக் கொண்டார்கள். பார்த்தீர்களா? ஏன், அது செய்திப்பத்திரிக்கையில் படிப்பதைப்போல் அவ்வளவு தெளிவாக இருக்கிறது. பாருங்கள்? செய்திப் பத்திரிக்கையில் படிப்பதைவிட மிகவும் தெளிவாக அது உள்ளது. பாருங்கள்? நீங்கள் அதை மறுத்துரைக்க இயலாது, ஏனெனில் அது சரியாக இங்கே அமைந்துள்ளது. வேதத்திலும் சரியாக அது காணக்கிடக்கின்றது. அது வரலாற்றுப் பூர்வமாக அப்படியே சரியாக அமைந்துள்ளது. சரியாக அக்காலத்தில்தான் பெந்தெகொஸ்தே சபையானது ஆரம்பித்தது. 1908 அல்லது 1910 அல்லது 1912ம் ஆண்டில்தான் அது பெயர்பெற்று விளங்க ஆரம்பித்தது. இப்பொழுது, சரி. “...என் நாமத்தை மறுதலியாமல்...'' வெளி.3:8 79“என் நாமத்தை மறுதலிக்கவில்லை '' என்று கூறுகிறார். நான் அதை விரும்புகிறேன். இப்பொழுது அவரிடம் தாவீதின் திறவுகோல் உள்ளது. அவர் தனது வார்த்தையை காத்துக்கொண்டு உங்களை இராஜ்யத்தில் சேர்த்துக்கொள்ளுவார். அவருடைய நாமமும் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ”உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக் கிற'' சபையைவிட்டு வெளியேறி, ஜீவனை அளிக்கும் நாமத்தை யுடைய சபைக்குள் பிரவேசித்துவிட்டார்கள். பாருங்கள்? “பிதா குமாரன் பரிசுத்த ஆவி'' என்ற மரித்துப்போன ஒன்றைவிட்டு வெளியே வாருங்கள். 'பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத் தினால்'' என்பது அர்த்தமற்றது. பாருங்கள்? அது வெளிப்படுத்து தலினால் புரிந்து கொள்ளப்படுவதற்காக அங்கே அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய முழு வேதாகமமும் வெளிப் படுத்துதலின் பேரில் எழுதப்பட்டுள்ளது. அவ்வாறுதான் அது உள்ளது. அவர் தன்னையே வெளிப்படுத்துகிறார். மத்தேயு 28:19ல் “நீங்கள் புறப்பட்டுப்போய், ஜனங்களுக்கு பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று கூறினார். நீங்கள் அவைகளில் எதனுடைய நாமத்தை உபயோகப்படுத்தப்போகிறீர்கள்? அநேக திரித்துவக் காரர்கள், ''பிதாவினுடைய நாமத்தினாலும், குமாரனுடைய நாமத்தினாலும், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலும்'' என்று கூறி ஞானஸ்நானம் கொடுத்து வருகிறார்கள். அவ்வாறு செய்வது வேதபூர்வமானது அல்ல. ஆம், எவர் அதைச் செய்தாலும் சரியல்ல... 'நாமத்தில்' என்றுதான் கூறப்பட்டுள்ளது. ”நாமங்கள்'' அல்ல. ஒருமையில்தான் கூறப்பட்டுள்ளது. பண்மையிலல்ல. 'நாமத்தில்' என்றுதான். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால். பாருங்கள்? பிதா என்பது ஒரு நாமமல்ல. குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவியென்பதும் ஒரு நாமமல்ல. எனவே அது என்னவாகத்தான் இருக்கிறது? அவைகள் அவற்றின் நாமமல்ல, அப்பட்டங்கள் மரித்தவைதான். ஆனால் அந்த மரித்த பட்டங்களின் மூலமாக... 80கிறிஸ்துவின் ஜீவனால் அது வெளிப்படுத்தப்படுகிறது. பேதுரு திறவுகோல்களைப் பெற்றிருந்தவனாக, அங்கே அவன் பரலோக இராஜ்யத்திற்குரிய திறவுகோல்களைக் கையில் கொண்டவனாக நின்றுகொண்டிருந்தான். இராஜ்யம் என்பது பரிசுத்த ஆவி. இராஜ்யத்தின் திறவுகோல்கள் தன்னுடைய பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. திறவுகோல்கள் என்றால், இயேசு அவனுக்குச் சொன்னபடி அது வெளிப்படுத்துதலாகும். ஓ, சகோதரனே, அதை நீங்கள் காணவில்லையா? சத்தியத்தின் வெளிப்படுத்துதலினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனாக பேதுரு இருந்தான். ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத் தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று இயேசு சொன்னதை பேதுருவும் அந்த இடத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். பேதுரு அவர் பக்கமாகத் திரும்பி, “கர்த்தாவே, நிச்சய மாகவே இதற்கான திறவுகோலை நான் பெற்றிருக்கிறேன். அது எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய வெளிப்படுத்துதலை நான் பெற்றிருக்கிறேன். ஏனெனில், பிதா என்ற பதம் ஒரு நாமமல்ல, குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமமல்ல என்பதை நான் அறிவேன். அதன் நாமம் என்ன வென்பதை நான் அறிவேன்'' என்று கூறினான். ”எனவேதான் நான் கர்த்தராகிய இயேசு நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்'' என்றான். ஆமென். வ்யூ! அதுதான் சரி. 81இவ்விஷயம் ஒரு காதல் கதையைப் படிப்பது போல் உள்ளது. நீங்கள்... மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் இறுதிப்பகுதி யாகும் அது. ஸ்திரீகளாகிய உங்களில் சிலர் வாசிக்கும்படியாக ஒரு காதல் கதையைத் தெரிந்து கொண்டு இருப்பீர்களானால்... இப்பொழுது நீங்கள் நிச்சயமாக அவ்வாறு செய்கிறதில்லை. அவ்வாறு நீங்கள் இனி செய்யவும் போவதில்லை என்பதை நான் அறிவேன். இல்லை, இல்லை. ஆனால் நீங்கள் பாவியாக இருந்த காலத்தில், நீங்கள் அதைச் செய்தீர்கள். அவ்வாறு அக்காலத்தில் ஒரு காதல் கதையை தெரிந்து கொண்டு வாசிக்கையில், வாலிப மான பெண்ணாக இருக்கிற காலத்தில் அப்படிப்பட்டவைகளை யெல்லாம் வாசித்திருக்கையில், கதையின் இறுதியின் என்ன படிக்கிறீர்கள்? ''ஜானும் மேரியும் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். சுபம்'' என்று இவ்வாறு கதையின் முடிவு வருகிறது. ஹூ! யார் இந்த ஜானும், மேரியும்? கதையின் இறுதியில் ஜான், மேரி ஆகியோரைப் பற்றி படிக்கிறோமே, இவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள, நீங்கள் கதையின் ஆரம்ப பாகத்திற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து நீங்கள் படித்துக் கொண்டே வரவேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். 82நல்லது, அதைப்போலவே, இயேசுவானவர், மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் கடைசிப் பாகத்தில், “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவைவும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்'' என்று கூறினார். எனவே இப்பொழுது, பிதா என்பது ஒரு நாமமல்ல, குமாரன் என்பது ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமமல்ல என்றால், இது என்ன என்று காண இப்புத்தகத்தின் தொடக்கப் பகுதிக்குச் சென்று நீங்கள் காண வேண்டும். நாம் மத்தேயு சுவிசேஷத்தின் முதலாம் அதிகாரத் திற்குப்போனால் அங்கே அது என்னவென்று காணமுடியும். ஒருக்காலும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் இங்கு வந்திருக்கக்கூடும். அவர்கள் நிமித்தமாக நான் இந்த பின்வரும் ஒரு உவமையின் மூலமாக இதை விவரிக்க விரும்புகிறேன். இதைக் கவனியுங்கள. இதுதான் பிதா, இதுதான் குமாரன், இதுதான் பரிசுத்த ஆவி என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இதைத்தான் இயேசு மத்தேயு 28:19ல் கூறினார். அது சரிதானே? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இப்பொழுது, இது யார்? பரிசுத்த ஆவி. இது யார்? (சபையார் “பிதா'' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). இது யார்? (சபையார் ”குமாரன்'' என்கின்றனர் - ஆசி). குமாரன். சரி, இவர் யாருடைய பிதா? இயேசு கிறிஸ்துவின். அது சரிதானே? 83இப்பொழுது நாம் மத்தேயு 1ம் அதிகாரம் 28ம் வசனத்தைப் படிப்போம். நாம் இந்த காதல் கதையை எடுத்துக்கொண்டு, அது என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம். ''நீங்கள் புறப்பட்டுப் போய் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று சொல்லப்பட்ட இந்த நபர் யார் என்று நாம் பார்ப்போம் நல்லது, மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் முதலாம் அதிகாரம் வம்ச வரலாற்றுடன் துவங்குகிறது. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்.... மத்.1:1-2 இவ்வாறு வம்ச வரலாறு தொடர்ச்சியாக 18ம் வசனம் முடிய நீண்டு கொண்டே போகிறது. இப்பொழுது, நீங்கள் முன்னே சென்று 17ம் வசனத்தை எடுத்துப் படியுங்கள். இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன கால முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டி ருக்கையில்...“ மத்.1:17-18. 84என் பின்னால் நீங்கள் இதை வாசித்துக்கொண்டு வருகிறீர்களா? மிகவும் கவனமாகப் பாருங்கள். “...அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே , அவள் பிதாவாகிய தேவனால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. மத்.1:18. அங்கே இவ்விதமாகவா எழுதப்பட்டுள்ளது? யாரால் கர்ப்பவதியானாள்? (சபையார் “பரிசுத்த ஆவியினால்'' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). சிலர் முதலாவதாக உள்ள பிதாவே அவருடைய பிதா என்று கூறிவருவதாக நான் எண்ணினேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு தனி ஆள் என்றும், பிதா வேறொரு ஆள் என்றும் இருக்குமானால், அப்பொழுது அவருக்கு இரு பிதாக்கள் உள்ளதாக அர்த்தமாகிறது. அப்படியிருந்தால், அது என்ன? அது முறை தவறிப் பிறந்த பிள்ளை என்றாகிவிடுமே. நீங்கள் கூறுகிறீர்கள், 'ஓ அவர்கள் தவறுதலாக அவ்வாறு அச்சுப்பிழை யாக அடித்துவிட்டார்கள்'' என்று. சரி. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது (சபையார் “பரிசுத்த ஆவியினால் உண்டானது' என்று கூறுகின்றனர் - ஆசி.) மத்.1:19-20 85“இரண்டு அல்லது மூன்று சாட்சிகளினால் எந்தவொரு காரியமும் உறுதிப்படுத்தப்படக்கடவது''. பார்த்தீர்களா? பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிதா. நல்லது, ”தேவன்'' தனது பிதா என்று அவர் கூறினார். இப்பொழுது அவர்கள் இருவரும் இரு வெவ்வேறு ஆட்கள் என்றிருக்குமானால், இவர்கள் இருவரில் யார் இயேசுவின் பிதாவாகும்? ஹூ! இந்தக் கட்டத்தில் நீங்கள் எங்கே இருக்கிறதாக காண்கிறீர்கள்? மத்திய ஆகாயத்தின் மத்தியில் நீங்கள் தொங்கிக்கொண்டு இருக்கிறவர்களாக காண்பீர்கள். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் இங்கே பரிசுத்த ஆவியானவரே தேவனாக இருக்கிறார் என்று கூறியாக வேண்டியதாகிறது. பரிசுத்த ஆவியானவரே தேவனாய் இருக்கிறார். அப்படியானால், இப்பொழுது உங்களுக்கு மூன்றுக்குப் பதிலாக இரண்டு ஆட்கள்தான் இருக்கிறார்கள். 21ம் வசனம் “...அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது… (அவளிடத்தில் இதை ஜெநிப்பிக்கச் செய்தது யார்? பரிசுத்த ஆவியானவர்தான் அதைச் செய்தது. அது சரி.) அவள் ஒரு குமாரனைப்பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக (நாமம்); ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்.1:20-23. 86அவரது நாமம் என்ன? இப்பொழுது, ''ஜானும் மேரியும் அதற்குப்பிறகு எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்'' என்று கூறப்பட்ட அந்த ஜானும் மேரியும் யார்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமானது என்ன? இயேசு இப்புவியில் பிறந்தபொழுது, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவாக இருந்தார். அவர் விருத்தசேதனம் செய்யப்பட்ட எட்டாம் நாளில், அவரது தாயார் அவருக்கு பெயர் சூட்டினாள். அவரது தகப்பன் இயேசு'' என்று நாமத்தை அவருக்கு சூட்டினார். அப்பொழுதிலிருந்து அவர் இயேசு கிறிஸ்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானார். அவர் கர்த்தராயிருந்தார்! அவர் பிறந்தபொழுது, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவாக இருந்தார். அதன்பிறகு, அவர் தனது நாமமாகிய இயேசு' என்ற நாமத்தைப் பெற்றுக்கொண்டபோது, அவர் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து ஆனார். அதேதான் சரியாக பேதுருவுக்கும் வெளிப்படுத்தப்பட்டது. ஜானும் மேரியும் யார் என்பதை அவன் தெளிவாக அறிந்திருந்தான். “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று இயேசு கூறினது என்னவென்று பேதுரு அறிந்து இருந்தான். பேதுருவுக்கு ஆவியினால் வெளிப்படுத்துதல் பெறும் வரம் உண்டென்று இயேசு அறிந்திருந்தபடியால், அது வெளிப்படுத்தப் படும் என்று இருந்தது. அவனுக்கு உன்னதத்தின் ஆவியினால் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருந்தபடியால், அவன் அதை அறிந்திருந்தான். ஒரு மனிதனால் உன்னதத்திலிருந்து வரும் வெளிப்படுத்துதல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தேவன் காண்கையில், அவர் அவனை நம்பி, அவனோடு கிரியை செய்ய இயலும். அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது; ஏனெனில், பிதா தவிர வேறு எவரும் இதை வெளிப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். தேவன் ஒருவர் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். பேதுரு ஆவியானவ ரோடு தொடர்பு கொண்டிருப்பவன் என்பதை அவர் அறிந்திருந் தார். எனவே, அவன்... பேதுரு வெளிப்படுத்துதலை அறிந்திருந்தான். எனவேதான், அவன் எழும்பி நின்று, “நீங்கள் மனந்திரும்பி, பாவ மன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறினான். 87இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இயேசு பேதுரு விடம், “நீ பேதுருவாய் இருக்கிறாய். உனக்கு திறவுகோல்களைக் கொடுப்பேன்'' என்றார். இராஜ்யத்தின் திறவுகோல்கள் அவைகள். அந்த சமயத்தில்தான் அவர் பேதுருவிடம் அவனுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் யார் என்று கூறினார். ”இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை'' என்று கூறினார். “நீ பூலோகத்தில் கட்டுவது எதுவோ அதை நான் பரலோகத்தில் கட்டுவேன். நீ பூலோகத்தில் கட்டவிழ்ப்பது எதுவோ, அதை நானும் பரலோ கத்தில் கட்டவிழ்ப்பேன்'' என்றார். ''நீங்கள் புறப்பட்டுப்போய், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று இயேசு சொன்னதற்கு பத்து நாட்களுக்குப் பிறகு, பெந்தெ கொஸ்தே நாளிலே, சபையின் துவக்க நாளிலே, பேதுருவும் ஆவிக்குரிய வெளிப்படுத்துதலினாலே, வெறுமனே ''பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம்'' என்ற ஒன்று கிடையாது என்பதை அறிந்திருந்தான். கத்தோலிக்க காலம் வரைக்கிலும் அப்படிப்பட்டதொன்றை எவருமே சிந்தித்தது கிடையாது. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே'' என்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டுள்ள ஒவ்வொரு நபரும் வாஸ்தவமாகவே கத்தோலிக்க விசுவாசத்திற்குள்தான் ஞானஸ்நானம் பண்ணப்பட் டார்கள் என்பதுதான் சரி. அது கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்லவே அல்ல. மீதியாயிருப்பவர்களுக்குள் அக்காரியம் காணப்படவே யில்லை . 88பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்கள்; அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் நடந்து கொண்ட விதம் குடித்தவர்களைப்போல் இருந்தது. அவர்கள் குடித்திருந்தார்கள், அதாவது உன்னத கானானாகிய பரலோகத்தி லிருந்து வந்திருந்த புதிய திராட்சை இரசத்தைப் பருகியிருந் தார்கள். அதினால் அவர்கள் யாவரும் கூக்குரலிட்டு, சப்தமிட்டுக் கொண்டிருந்தபொழுது, அவ்வாறு அவர்கள் குடித்தவர்களைப் போல் நடந்து கொண்டபொழுது, பேதுரு அவர்கள் நடுவில் எழும்பி நின்று, ''நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. அவர் தம் ஆவியை ஊற்றுவேன் என்று உரைத்தபடியே நடந்ததாகும் இது'' என்று கூறுகிறான். அப்பொழுது அவர்கள், 'சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார்கள். அதுவே அவர்கள் கேட்ட கேள்வி. 'அதை நாங்கள் எவ்வாறு பெறப்போகிறோம்? யாரிடம் திறவுகோல்கள் உள்ளன?'' “சீமோனே, இங்கே வா, உன்னிடம்தான் திறவுகோல்கள் உள்ளன, உன் இடுப்பிலிருந்து அதை எடு. நீ இப்பொழுது, என்ன சொல்லப்போகிறாய்?'' என்று கேட்டிருப்பார்கள். இப்பொழுது, ”நீ பூலோகத்திலே கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், நீ பூலோகத்திலே கட்டவிழ்ப்பது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்'' என்று இயேசு கூறியதை நினைவுகூருங்கள். அவர் தேவனாயிருக்கிறபடியால், அவர் தனது வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது கத்தோலிக்க மதகுருக்களே! ''பாவங்களை மன்னித்தல்' என்ற உங்களுடைய கொள்கையை நிரூபியுங்கள். ஓர் சமயம், ஒரு கத்தோலிக்க மதகுருவானவர், என்னிடம், “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் மன்னிக்கப்படும்' என்று இயேசு கூற வில்லையா?'' என்று கேட்டார். “அவர் கூறினார்'' என்றேன் நான். “எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்' அல்லவா?'' என்றார் அவர். “ஆம்” என்றேன் நான். 89''அது எவர்களுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவர்கள் மன்னிக்கப்பட்டு இருப்பார்கள், எவர்களுக்கு நீங்கள் மன்னிக்க வில்லையோ, அவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள் என்பதாகத் தானே இருக்கிறது'' என்றார் அவர். ''அவ்வாறுதான் அது கூறப்பட்டுள்ளது'' என்று நான் பதிலுரைத்தேன். “கிறிஸ்து தனது சபைக்கு - நாமே அவருடைய சபை யாயிருக்கிறோம் - பூலோகத்தில் பாவங்களை மன்னிக்கிறதற்கான அதிகாரத்தை கொடுக்கவில்லையா?'' என்று அவர் கேட்டார். “நிச்சயமாகவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று நான் பதிலுரைத்தேன். அவர்கள் அவர்களை மன்னித்த வண்ணமாகவே நீங்களும் செய்தால், நான் உங்களுடன் கூடச் செல்லுவேன்'' என்றேன் நான். 'அவர்கள் எவ்வாறு அவர்களின் பாவங்களை மன்னித்தார்கள்? அவர்கள் அவர்களிடம், போய் 'ஒரு நோவீனா செய்யுங்கள்' அல்லது 'நீங்கள் செய்யும் வேறெந்த ஒன்றையும் செய்யுங்கள்' என்று கூறினார்களா?'' என்று நான் கேட்டேன். இல்லை, ஐயா. பேதுரு, ''மனந்திரும்புங்கள்'' என்று தான் கூறினான். ஆமென். அங்கேதான் திறவுகோல் உள்ளது. “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்று கூறினான். இதைப் பேதுரு கூறியபொழுது, திறவுகோலானது ”க்ளிக்'' என்று திறந்தது. பரலோகத்திலும் அவ்வாறு “க்ளிக்'' என்று திறந்து கொடுத்தது. 90இதனால்தான், இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்த அதே மனிதனால் ஏற்கனவே ஒரு தடவை ஞானஸ்நானம் பெற்றிருந்த சிலரை பவுல் சந்தித்தபொழுது, “நீங்கள் விசுவாசி களான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேட்டான். அவன் கூறினான், ''எதற்குள்...'' நீங்கள் உங்களுடைய கிரேக்க வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள், 'நீங்கள் எவ்வாறு ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?'' என்று கேட்டான். “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை'' என்றார்கள். “யோவான் கொடுத்ததை...'' என்றார்கள் அவர்கள். 'அது இனிமேல் கிரியை செய்யாது, அதற்குப் பரலோகம் அடைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டும்'' என்றான் பவுல். 91இதை அவர்கள் கேட்டபொழுது, அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அவர்கள் கீழ்ப்படிந்தபொழுது, பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தான். பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார். அவர்களும் அந்நியபாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத் தார்கள். ஓ, சகோதரனே, அது ஆதி நிலைக்கு திரும்பிச் செல்லுத லாகும். அதுவே சரியானதாகும். அதுதான் இங்கே வைக்கப் பட்டுள்ள ''திறந்த வாசலாகும்''. பூகோள ரீதியாக அது சரியாக சாயங்கால வெளிச்சங்களின் வேளையாக இருக்கிறது. வேதத்தில் உள்ள ஒவ்வொரு வேதவாக்கியமும், அதற்கு நேராக நடத்திச் செல்லுகிறது. இங்கே மணிக்கணக்கில் நாம் நின்றுகொண்டிருக்கமுடியும். நமக்கு இன்னமும் பதினைந்து நிமிடங்கள் உள்ளன. இன்னும் முப்பத்தைந்து வெவ்வேறு கருத்துரைகளை கொடுக்க வேண்டி யுள்ளது. இன்றிரவில் நாம் அவைகளை பார்க்க முடியாவிடில், காலையில் நாம் பார்க்கலாம். 92“...உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.'' வெளி.3:8 அங்கே அதை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். “என் நாமத்தை மறுதலிக்கவில்லை'', நாமமானது வெளிப்படுத்தப் பட்டது. முந்தைய சர்தை பழைய செத்த ஸ்தாபனத்தினின்று விடுபட்டு, ஜீவிக்கிற சபைக்குள் வந்தாகிவிட்டது. 9ம் வசனத்தை நாம் எடுத்துக்கொள்வோம். மிகவும் ஆபத்தான ஒரு விஷயத்தை நாம் இப்பொழுது கவனிக்கப் போகிறோம். இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.“ வெளி.3:9 93அது முழு இரவும் பேசக்கூடிய விஷயமாயிருக்கிறது. கவனியுங்கள்! அவர்கள் இப்பொழுது என்னவாயிருக்கிறார்கள்? அவர்களோடு அவர் பேசினார். அவர்கள் அவரது நாமத்தைக் கண்டுகொண்டுவிட்டார்கள். இத்தனை காலத்திற்குபிறகு இக்காலத்தில் தான் இயேசு கிறிஸ்துவாகிய “திறந்த வாசலானது” வருகிறது. அவர்கள் ஜீவ வார்த்தையைப் பெற்றுக்கொண்டார்கள், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தபடியினால், இப்பொழுது, அவர், ''சாத்தானுடைய ஜெப ஆலயத்தைச் சேர்ந்தவர்களாகிய சிலரை (தமிழில் ''சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை'' என்று குறிப் பிடப்பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்) உனக்குக் கொடுப் பேன்'' என்று கூறுகிறார். இப்பொழுது எனது சகோதரனே! வெளிப்படுத்தின விசேஷம் 2:13ல் பெர்கமு சபைக்கு நீங்கள் ஒரு நிமிடம் திரும்பிச்சென்றால், அது என்ன என்பதை, அது ஸ்தாபனம் என்பதை, நான் உங்களுக்கு காண்பிப்பேன். “உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்... அறிந்திருக்கிறேன்.'' வெளி.2:13 94அங்கேதான் விஷயம் உள்ளது. அந்த லவோதிக்கேயா... அல்லது அந்த நிக்கொலாய் மதஸ்தரின் சபைக்காலமான அக்காலத்தில் அவர்கள் மதஸ்தாபனத்தை உண்டாக்கிக்கொண்டு விட்டார்கள். கவனியுங்கள். அவர்கள் ஒரு சபை, ஒரு கூட்டம், அவர்கள் ஒரு மதஸ்தாபன சபை, சாத்தானின் கூட்டம் என்று காண்பிக்கப்படுவதை பார்த்திடும்படி கவனியுங்கள். ஓ, சகோ தரனே! அப்படியானால் ஸ்தாபனத்தின் கிரியைகள் பிசாசினால் உண்டாயிருக்கிறது. அவர்கள் கிறிஸ்தவர்களல்ல. இப்பொழுது அதை நினைவில் கொள்ளுங்கள்; அவர்கள் கிறிஸ்தவர்களா யிருக்கின்றனர். ஆனால் ஸ்தாபனமாக இருக்கிறார்கள். சரி. 'உன் நடுவில் தங்களை யூதரென்று கூறிக்கொள்ளுகிறவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் பொய்யரென்று கண்டறிந்தாய்'' என்று அவர் கூறியதை கவனித்தீர்களா? இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இந்த மகத்தான தூதன்... இப்பொழுது அவர் யாரிடம் இதைக் கூறுகிறார்? இந்த கடைசி சபைக்கு. கடைசி சபைக்காலத்திற்கும், அதற்கு முந்தைய சபைக்காலத்திற்கும் நடுவில் உள்ள இந்த திறந்த வாசலின் காலத்தில் உள்ளவர்களுக்கு. முதலாம் சபைக்காலமானது யாரால் போதிக்கப்பட் டிருந்தது? பவுலினால். நாம் இப்பொழுது ரோமர் 2:29க்கு போவோம். அங்கே ஒரு யூதனென்னப்பட்டவன் யார் என்பதை நாம் காணலாம். அப்பொழுது, இதைக் குறித்து நான் கூறுவது எனது சொந்தக்கருத்தல்ல என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளுவீர்கள். “உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக் குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது”. 95யூதனென்னப்பட்டவன் எவன்? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவனே யூதனாவான். பரிசுத்தமாக்குதலின் காலத்திற்குப்பிறகு உள்ள காலத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அங்கே அக்காலத்தில், அவர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்ளுகிறார்கள். ஆனால் அவரோ, “நான் அவ்வாறு கூறவில்லை'' என்கிறார். அடையாளங்களைப் பெற்றிராமல் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாக அவர்கள் கூறிக்கொள்ளுகிறார்கள். ஆனால் அவரோ, அவர்களைப் ”பொய்யர்'' என்று கூறுகிறார். “விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும் அடையாளங்களா வன'' (தமிழ் வேதாகமத்தில், ''விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்) என்று ஆண்டவர் கூறியுள்ளார். அவரைப் பொய்யராக்க முடியாது. ஓ சகோதரனே! சுற்றிலும் அது உங்களை குருடாக்கியுள்ளது, பாருங்கள்? ஓ, என்னே! “இதோ, யூதரல்லாதிருந்தும், தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் ... (அவர்கள் தாங்கள் ''ஆவியினால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவர்கள்'' என்று தங்களைக் குறித்து கூறிக் கொள்ளுகின்றனர். அவர்கள் மத ஸ்தாபன சபையைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தங்களுக்கு பரிசுத்த ஆவி உண்டு என்று கூறுகின்றனர். அவர்களோ ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு விட்டனர். அவர்களுக்கோ இன்னமும் ஆவிக்குரிய வெளிப்படுத்துதல் கிடைக்க வேயில்லை. அது சரிதான். பார்த்தீர்களா?) ...தங்களை யூதரென்று பொய் சொல்லு கிறவர்களாகிய... (அல்லது அவர்கள் தங்களை கிறிஸ்தவர்க ளென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்) ... சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன். இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.“ வெளி.3:9 96சரியாக இந்த இடத்தில் உள்ள செய்தினாது, நாளைக்காலையில் உள்ள என்னுடைய செய்தியோடு வந்து இணைகிறது. அங்கேதானே நித்திரை செய்யும் கன்னிகைகளை நமக்கு எடுத்துக் காண்பிக்கிறது. அதை உங்களால் காண முடிகிறதா? அது எப்பொழுது வருகிறது? கடைசி காலத்தில். ஓ, அவர்கள் புறப்பட்டு வெளியே சென்ற பொழுது, இங்கேயே ... பாருங்கள்? அவர்கள் விசுவாசத்தினால் நீதிமான்களாகின்றனர். லூத்தரன் செய்தியினால் அவர்கள் நீதிமான் களாக்கப்பட்டு, இங்கே இக்காலத்தில் பரிசுத்தமாக்கப்படு கின்றனர். ஆனால் “திறந்த வாசலை'' அவர்கள் கண்டுகொள்ளத் தவறிவிடுகின்றனர். அதை நீங்கள் பார்த்தீர்களா? விசுவாசத்தினால் நீதிமானாகுதல் லூத்தரின் மூலமாக பெறுகின்றனர்; வெஸ்லியின் காலத்தின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுகின்றனர். நசரேய சபைக்காரர்கள் (Nazarenes), யாத்திரைப் பரிசுத்த சபைக்காரர்கள் (Pilgrim Holiness), வெஸ்லியன் மெதோ டிஸ்ட்டுகள் (Weseleyan Methodists) ஆகியோர் அனைவரும் நல்ல, சுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட வாழ்க்கையை வாழ் கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாக எண்ணிக்கொள்ளுகின்றனர். ஆனால் ஏதாவது ஒரு நபர் அந்நிய பாஷைகளில் பேசிவிட்டதை கேட்டுவிட்டு, அதைக் குறித்து எள்ளி நகையாடுகின்றனர். அந்நபரைக் குறித்து பரிகசிக்கின்றனர். 'அது பிசாசினால் உண்டானது'' என்று கூறிவிடுகின்றனர். சகோதரனே, அதை நீங்கள் செய்கையில் உங்களுடைய அழிவை நீங்களே முத்தரித்துக்கொண்டு விடுகிறீர். நீங்கள் பரிசுத்த ஆவியைத் தூஷணம் செய்துவிட்டீர்கள். அது மன்னிக்கப்பட முடியாத பாவமாகும். நல்லது, நீங்கள் கூறுகிறீர்கள், ''நாங்கள் முதல் சபையைச் சேர்ந்தவர்கள்'' என்று. நீங்கள் எத்தனை சபைகளைச் சேர்ந்திருந் தாலும் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. கூட்டவோ குறைக்கவோ முடியாத தேவனுடைய வார்த்தைக்கும் அதற்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. ''சாத்தானுடைய கூட்டம்' என்று கூறப்பட்டதுதான் அது. அது சரிதான். 97நான் உங்களை மனம் புண்படுத்தி விடவில்லை என்று நம்புகிறேன். நான் இவ்விதமாக பேச விரும்பவில்லை. ஆனால் எனக்குள்ளாக ஒன்று இதைச் செய்திட என்னை நெருக்கி ஏவுகிறது. நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவ்வாறு பேசிட விரும்பவில்லை. நான் அவைகளைக் கூறுகையில், மிகவும் மோசமாக உணருகிறேன். ஆயினும் நான் அதை உரைக்கத்தான் வேண்டியதாக உள்ளது. என்னில் ஏதோ ஒன்று அதை கூறவைக்கிறது. ஸ்திரீகளைக் கடிந்து கொள்வது எப்பொழுதும் எனக்கு விருப்பமாக இல்லை. நான் அவ்வாறு உணருகிறேன்... ஒரு ஸ்திரீயானவள் அழுதுவிட்டால், அது எனக்கு பயங்கரமாக இருக்கும். ஸ்திரீகளை அவர்கள் மனம் புண்படும்படியாக பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் என்னுள் ஏதோ ஒன்று அதைச் செய்யச் செய்கிறது. பாருங்கள். ஒரு கேடான ஸ்திரீயைக் கண்டால், ஓ என்னே! என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில் எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, தவறானவைகளுக்கு எதிராக என்னை பேச வைக்கிறது. அதுதான் பரிசுத்த ஆவி. 98நான் இங்கே வார்த்தையில் உற்று நோக்கி, எனக்குள்ளாக சிந்தித்து, “கர்த்தாவே, நான் தவறாக இருந்தால், அதை எனக்குக் காண்பியும். நான் அவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டே போகவிடாதேயும். நான் மக்களை நேசிக்கிறேன். நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் ஜனங்களை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். நான் யார் மனதையும் புண்படுத்த என்னை விடாதே யும். நான் வேண்டு மென்றே அவ்வாறு செய்திட விரும்ப மாட்டேன் என்பதை நீர் அறிவீர்'' என்று நான் ஜெபிக்கிறேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் எழுந்து நின்று, 'அந்த வார்த்தையில் நில், அங்கே நிலைத்திரு, சரியாக வார்த்தையில் நிலைத்திரு'' என்று கூறுகிறார். அதற்கு நான், 'ஆம் கர்த்தாவே, நீர் என்னுடைய சிறந்த சிநேகிதர், எனக்கு நீர் ஒருவர்தான் உண்டு. நீர் என்னுடைய உண்மையான நண்பர், நீர் ஒருவர்தான், இந்த வாழ்க்கை மங்கிப்போகையில், எனக்கு உதவி செய்கிறவராக இருக்கிறீர். எனவே நான் அப்பொழுது, உம்மோடுகூட நிற்பேன், கர்த்தாவே'' என்று கூறுகிறேன். இதோ வருகிறேன். நான் யாவரையும் மனம் புண்படச் செய்ய நோக்கங்கொண்டிருக்கவில்லை. ஸ்தாபனங்களையும் அவற்றின் காரியங்களையும் குறித்து நான் கண்டனம் பண்ணி கடிந்து கொள்கையில், என்னைத் தவறாக நினைத்திடாதிருங்கள். இதைக் குறித்து நான் எதையும் அறியும் காலத்திற்கு முன்னரே, என் வாழ்நாள் முழுவதும் நான் அதைக் குறித்து கடிந்து கொண்டுள்ளேன். ஸ்தாபனங்களை நான் விசுவாசித்ததேயில்லை. எனவேதான் நான் அவைகளோடு என்னை பிணைத்துக்கொண்ட தில்லை. ஆம். நல்லது, அவற்றிலிருந்து என்னை விலக்கிக் காத்ததற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். இதோதங்களை ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்று கூறியும் அப்படியில்லாதவர்களான பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை... உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்துகொள்ளும்படி செய்வேன்... 99நித்திரை செய்த கன்னிகைள் எப்பொழுது நித்திரையை விட்டு எழும்பினார்கள் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? அவள் என்னவென்று அழைக்கப்பட்டாள்? அவர்கள் பத்து பேர்களானவர்கள் மணவாளனை சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அது சரிதானே? அவர்களில் ஐந்து பேர்கள் புத்தியுள்ளவர்களாயிருந்தனர், தங்கள் விளக்கில் (தமிழ் வேதாகமத்தில் 'விளக்கு' என்பதற்குப் பதிலாக 'தீவட்டி' என்று கூறப்பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்) எண்ணெயைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர். வேதாகமத்தில் எண் ணெயானது எதைக் குறிக்கிறது என்பதைப்பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறித்தும். அந்தப் பத்துக் கன்னியரைக் குறித்து எவராவது, அவர்கள் பரிசுத்தமாக்கப்படவில்லை என்று கூறிட முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்தமாக்கப்பட்டேயிருந்தனர். அவர்கள் அனைவரும் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் ஐவர் வெளிப்படுத்துதலின் ஞானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஆவியினால் நிரப்பப்பட்டு, வாசலைப் போய் அடைய, பாருங்கள், போதுமாமன அளவு ஞானமுள்ளவர்களாக இருந்தனர். இவர்கள் ஐவரும் தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தனர். மற்றவர்களுக்கோ எண்ணெய் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் நித்திரை தெளிந்து எழுந்தபோது, அவர்கள் இவர்களிடம் வந்து, “ஓ! ஓ! உங்களிலுள்ள பரிசுத்த ஆவியை எனக்குக் கொஞ்சம் கொடுங்கள். எனக்குக் கொஞ்சம் கொடுங்கள்' என்று கெஞ்சினார்கள். ஆம். ''மன்னிக்கவும் சகோதரி, எனக்குப் போதுமான அளவுதான் என்னிடம் உள்ளது. உங்களுக்கு கொடுப்பதற்கு உபரியாக என்னிடம் இல்லை'' என்று இவர்கள் கூறினார்கள். 100எனவே, அப்பொழுது, அவர் கூறினார், “போய் ஜெபித்துக் கேளுங்கள்'' என்று. அவ்வாறு அவர்கள் போய் கொஞ்சம் எண்ணெயைப் பெற்றுக்கொள்ளப் போயிருக்கையில், மண வாளன் வந்துவிட்டார். உடனே, புத்தியுள்ள கன்னியர் கலியாண விருந்துக்காக உள்ளே பிரவேசித்துவிட்டனர், கதவு அடைக்கப் பட்டது, அப்பொழுது புத்தியில்லாதவர்கள் கைவிடப்பட்டு, மகா உபத்திரவக் காலத்திற்குள் போகின்றனர். இன்னும் கொஞ்சம் கவனித்து, மேற்கொண்டு வரும் இரு வசனங்களில் படித்தால், அவர்கள் நேராக மகா உபத்திரவ காலத்திற்குள் போய்விடுவதை நீங்கள் காண்பீர்கள். பாருங்கள்? இப்பொழுது, இந்த நித்திரை செய்யும்... நாம் நாளைக் காலையில் அதைத் தொடர்ந்து பார்ப்போம். நேரமானது இன்னும் கொஞ்சம் தான் இருப்பதை முன்னிட்டு, இங்கே இப்பொழுது நாம் முடிக்க வேண்டியிருப்பதால், இந்தச் செய்திக்காக சற்று காத்திருப்பது நலமாயிருக்கும் என்று நம்புகிறேன். இப்பொழுது நாம் காண்போம் : இதோ, நான்.... அவர்கள் அவர்களிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்றும் அவர்கள் பொய்யரென்றும் கண்டறிந்தார்கள். நாம் இங்கு கூடியிருக்கையில் ஒரு சிறிய காரியத்தை தயவு செய்து பார்ப்போம். நான் நேற்றிரவு கூறியபடி யூதாஸ்காரியோத்து கேட்டின் மகனாக இருந்தான். ''அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான்'' என்று வேதாகமம் கூறுகிறது. அப்பொழுது அவன்,... இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாகப் பிறந்தார். தேவன், அப்பொழுது, கிறிஸ்துவிலே வாசம் பண்ணினார். அது சரி யல்லவா? சாத்தான் யூதாஸில் வாசம் பண்ணினான். இயேசு தேவனுடைய குமாரனேயானால், தேவனுடைய குமாரனாக பிறந் திருந்தால், மாம்சத்தில் பிறந்த தேவனுடைய குமாரனேயானால், அப்பொழுது சாத்தானானவன் கேட்டின் மகனாகப் பிறந்திருந்தான். கேட்டின் மகனாக பிசாசாகிய சாத்தான் அவதாரம் எடுத்திருந்தான். 101அவனும், இயேசுவோடு தன்னை இணைத்துக்கொண்டு, அவருடைய கூட்டத்தாரில் ஒருவனாக ஆகினான் என்பதை நீங்கள் கவனித்தீர்களானால் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறு அவன் செய்யக்காரணம் என்னவெனில், இந்த நாளுக்குள் சபையில் அவன் மீண்டும் நுழைந்து, அதே வஞ்சத்தை உள்ளே நுழைத்து விட அவன் விரும்பியதே காரணமாகும். இயேசு, “அந்த சபைகள் சாத்தானுடையதாக இருக்கிறது'' என்று கூறினார். ஓ! என்னே ! அது மனதில் பதிந்ததா? அவர்கள், சாத்தானுடைய கூட்டத்தாரா யிருக்கின்றனர். அது கிறிஸ்தவனாக நடிக்கும் யூதாஸாக இருக்கிறான். யூதாஸின் முக்கியமான காரியமாக இருந்தது எது? அது பணமாக இருந்தது. இன்றைக்குள்ள அநேகமானவற்றின் மிகப்பெரிய இழுப்பெல்லாம் பணமாகத்தான் இருக்கிறது. அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையின் கட்டிடத்தைப் பாருங்கள். அதை 60 இலட்சம் டாலர் செலவில் கட்டி முடித்திருக்கிறார்கள். “கர்த்தருடைய வருகை சீக்கிரமாய் இருக்கிறது. ஓ குண்டுகள் யாவரையும் அழிக்க ஆயத்தமாக தலைக்குமேல் தொங்கிக்கொண்டு இருக்கின்றன'' என்றெல்லாம் போதித்துக்கொண்டே, அவர்கள் 60 இலட்சம் டாலர்கள் செலவில் அக்கட்டிடத்தை கட்டியிருக் கிறார்கள். ஓ, என்னே ! இவர்கள் ஐசுவரியவான்களாகவும், ஒன்றும் குறைவுபடாதவர்களாகவும் இருக்கின்றனர். கர்த்தருக்குச் சித்த மானால் நாளை இரவு அதைப் பற்றிப் பார்ப்போம். இங்கே கவனித்துப் பாருங்கள். ஓ, சபைக் கட்டிடங்களை எவ்வளவு பெரிதாக இந்த ஸ்தாபனங்கள் கட்டியெழுப்பியுள்ளன என்பதைப் பாருங்கள். அவர்கள் தங்கள் பணத்தையெல்லாம் ஒரு பொது நிதியாக சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஓ, இரக்கம்! அவர்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள். அவர்கள் நிதியுதவி செய்யும், கடன் வழங்கும் சங்கங்களைக்கூட தங்களுக்குள் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். சபைகள் கடன் வழங்குவதைக் கூட செய்து வருகின்றனர். சகோதரரே, அது அப்போஸ்தல ஊழியம்போல் எனக்கு தோன்றவில்லை. 102பேதுரு, ''என்னிடத்தில் வெள்ளியும் பொன்னுமில்லை. ஆனால் என்னிடத்தில் உள்ளதை நான் உனக்கு தருகிறேன்'' என்றான்... உனது பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு அதை எனக்கு தந்துவிடு... ''வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்...'' என்னிடத்திலுள்ளது என்று அவன் கூறியது, அந்த நாமம்தான். அதைப்பற்றிய வெளிப்படுத்துதல் தான் அது. '... உனக்குத் தருகிறேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எழுந்து நட'' என்றான். நல்லது, இங்கே நாம், அவர்கள் யாவரும் “சாத்தானுடைய கூட்டத்தார்'' என்று கண்டுகொண்டோம். அவர்கள் எவ்வாறு அப்படி இருக்கமுடியும்? யூதாஸானவன் வந்தபொழுது.... இப்பொழுது பாருங்கள்! இயேசு காட்சியில் தோன்றி அதே சமயத்தில்தான் யூதாஸும் தோன்றினான். அதை நீங்கள் கவனித்தீர்களா? இயேசு காட்சியை விட்டு மறைந்த அதே வேளையில்தான், யூதாஸும் காட்சியை விட்டு மறைகிறான். பரிசுத்த ஆவி திரும்ப காட்சியில் தோன்றிய அதே சமயத்தில்தான், அந்தி கிறிஸ்துவின் ஆவியாகிய யூதாஸும் மீண்டும் காட்சியில் தோன்றி, கிரியை செய்ய வந்தான். கீழ்ப்படியாமையின் பிள்ளை களும் அப்பொழுது தோன்றினார்கள். அவர்கள் வேதத்தை மதியா மலும், ஸ்தாபனத்தைப் பற்றி மதிக்கிறவர்களாக மட்டும் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இயேசு அதைக் குறித்து, ''அது சாத்தானுடைய சபையாக இருக்கிறது'' என்றே கூறுகிறார். அது எங்கே வருகிறது? சரியாக இங்கே இந்த சபைக்காலத்திற்குள் அது வருகிறது. இங்கே அது எவ்வாறு ஆரம்பித்தது? ஒரு ஸ்தாபனத்தின் மூலமாக. அதே காரியம்தான் இங்கேயும் அது செய்தது. ''சாத்தானுடைய சங்கம் அல்லது சபை'. நீங்கள் அதை அறிந்துகொண்டீர்களா? 103“சாத்தானுடைய சபை' (Synagogue of Satan). அவர்கள் ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளுகிறார்கள். அவர்களால் எவ்வாறு கூறிக்கொள்ள முடிகிறது? யூதாஸ் இப்பூமியில் இருந்தபொழுது, இயேசுவை அவன் சந்திக்க நேர்ந்தபோது, தான் இயேசுவில் விசுவாசம் கொண்டுள்ள வன் என்ற ஒரு அறிக்கையை அவன் செய்து, அவருடைய கூட்டத்தில் ஒரு பொக்கிஷதாரியாக ஆகி, பணத்தையெல்லாம் கட்டி சேர்த்து வைத்திருந்தான். அப்படித்தானே அவன் செய்தான்? நீங்கள் யாவரும் அதை அறிவீர்கள். அவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்திருந்தானென்றால், அவன் (போலியாக) நீதிமானாக்கப் படுதலை ஏற்றுக்கொண்டான். அப்படித்தானே? ரோமர் 5:1ல், “...விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்...'' சரி. இப்பொழுது இன்னொரு காரியம். யோவான் 17:17ல் இயேசு அவர்களை சத்தியத்தினால் பரிசுத்தமாக்கினார். “உமது வசனமே (வார்த்தையே) சத்தியம்'' என்று அவர் கூறினார். அவரே வார்த்தையாக இருந்தார். அவர் சீஷர்களுக்கு அசுத்த ஆவிகளின் மேல் அதிகாரம் கொடுத்தார். பிணியாளிகளை சொஸ்தமாக்கும் ஆராதனைகளை நடத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், எல்லாவிதமான அற்புதங்களைச் செய்யவும் அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் ஊழியம் செய்துவிட்டு இயேசுவிடம் திரும்பி வந்தபொழுது, யூதாஸும் அவர்களுக்குள் ஒருவனாக காணப்பட்டான். நசரேய சபைக்காரர்களே, வெஸ்லியன் மெதோடிஸ்டுகளே, இப்பொழுது கவனியுங்கள். சீஷர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு தேவனைத் துதித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். ஏனெனில், பிசாசுகளும் அவர்களுக்கு அடங்கின. அப்பொழுது இயேசு, “பிசாசுகள் உங்களுக்கு கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டதற்காக மகிழ்ந்து களிகூருங்கள்'' என்றார். 104அந்த சீஷர் கூட்டத்தில் யூதாஸும் ஒருவனாக இருந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! சபையை அவனால் அது வரைக்கிலும் வஞ்சிக்க முடியும் என்பதைப் பாருங்கள். அவர்களோடு ஒன்றாக நின்றுகொண்டே, அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் பெந்தெகொஸ்தே நாள் வந்தபொழுது, அவன் தனது நிறத்தை காட்டிவிட்டான். அதே காரியத்தைத்தான், அவன் மெதோடிஸ்ட்டு சபையிலும், லூத்தரன் சபையிலும், நசரேய சபையிலும் செய்தான். தேவனுடைய சபைகளுக்குள்ளும் அவன் அதையே செய்தான். அவர்கள் பரிசுத்தமாகுதல் வரைக்கிலும் வந்து, அதன்பிறகு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் வந்தபொழுது, அந்நிய பாஷைகளில் பேசி, அற்புத அடையாளங்களைச் செய்தலை அவர்கள் கண்டனம் செய்தனர். உங்களுக்காக அவர்கள் தெய்வீக சுகமளித்தல் வரைக்கிலும் செல்வார்கள். நிச்சயமாக, அப்படித்தான் யூதாஸும் செய்தான். பார்த்தீர்களா? ஆனால் அப்பொழுது... தெய்வீக சுகமளித்தல் ஊழியம் செய்பவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் இன்று காலையில் இருக்கிறார்கள், சகோதரனே! அவர்கள் இரண்டு மணி நேரம் நின்றிருந்து, ''ஒரு இரவுக்கு தலா 60 டாலர்கள் கொடுக்கா விடில், உங்களுடைய பயிர்கள் எரிந்துபோகும்'' என்று கூறு கின்றனர். அவ்விதமான அநேக காரியங்கள் உள்ளன. அவைகளெல்லாம் பிசாசினால் உண்டானவையாக இருக்கின்றன. நிச்சயமாக அவைகள் அப்படித்தான். என் முழு இருதயத்தோடும் சுகமளித்தலை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அவ்விதமான காரியம் பிசாசினால் உண்டானதாக இருக்கிறது. அது பிசாசினால் உண்டானதாகும். நீங்கள் எவ்வளவு செய்ய முடியும் என்பதோ, அல்லது இன்னும் கூடுதலாக எவ்வளவு செய்ய முடியுமோ என்பதைப் பற்றி அக்கறையில்லை. ஏனெனில், யூதாஸும் பிசாசுகளைத் துரத்தினான். 105''அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்'' என்று இயேசு கூறினார். “நீங்கள் அதைச் செய்திருந்தால், அதைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்'' என்றார் (மத். 7:23). ஓ சகோதரனே, “வாசல் நீர் வழிப்பாதையாயிருக்கிறது (வாசல் இடுக்கமும் - தமிழ் வேதாகமம் - மொழிபெயர்ப்பாளர்) வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்'' (மத். 7:14). நாம் இந்த ''சிலரை'ப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் இருக்கிற இந்த கடைசி காலத்தில் அது மிகவும் கொஞ்சப் பேராகத்தான் இருக்கப்போகிறது. தயவு செய்து, என்னுடைய சகோதரர்களே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நானாக இருந்தால் என்னைப் பொறுத்தமட்டில், நான் என்னோடு ஒத்துப்போய்விடுவேன். அதாவது, ''அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் அல்லது இன்னொரு இயக்கத்தை நாம் சேர்ந்து கொள்வோம், அவர்களோடு ஒத்துப்போய்விடுவோம்'' என்று சொல்லுவேன். ஆனால் நான் அப்படிச் செய்தால் எனக்கு ஐயோ! எனக்கு ஐயோ! அதைவிட மேலாக நான் அறிந்திருக்கிறேன். அவ்விதமானதொரு காரியத்தை நான் செய்தால், தேவன் என்னை நரகத்திற்குத்தான் அனுப்புவார். ஆம், ஐயா, நான் என்னுடைய சாட்சியை என் ஜீவனைக்கொண்டு முத்திரையிட வேண்டுமெனில், நான் அவ்வாறு முத்திரையிட்டாக வேண்டும். அவ்வளவுதான், ஏனெனில் என்னிலுள்ள ஏதோ ஒன்றின் நிமித்தமாக அக்காரியத்தை நான் செய்ய முடியாது. 106இது சத்தியமாயிருக்கிறது. சத்தியமானது எதுவோ , அதன் பக்கத்தில் நான் நின்றாக வேண்டும். வேதமும் அதையே ஆதரித்து நிற்கிறது. மதஸ்தாபனங்கள் எனக்கெதிராக உள்ளன; ஆனால் வேதமோ நான் கூறுவது சரியாயிருக்கிறது என்று கூறுகிறது. “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன்...'' அதுவே சத்தியமாயிருக்கிறது, அதோடு நிலைத் திருங்கள். ...“சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை... உன் பாதங்களுக்கு முன்பாக வந்து... நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படி செய்வேன்.” வெளி.3:9 “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால் ... சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.” வெளி.3:10 107இங்கே மெதோடிஸ்ட்டின் காலத்தைக் குறித்துப் பேசவில்லை என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். இப்பொழுது கவனியுங்கள். ஆயினும் இது இரண்டு சபைக் காலங்களுக்கும் இடையில் உள்ள இடைப்பட்ட ஒரு காலமாகும் என்பதைப் பாருங்கள். அதைப்பற்றிக் கேட்க நீங்கள் ஒவ்வொரு வரும் ஆயத்தமா? மிகவும் கவனமாகக் கேளுங்கள் இப்பொழுது. என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால்,... சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னை (அந்த சிறு மீதியாயிருக்கிற கூட்டம் அது) காப்பேன். வெளி.3:10 சபையானது நீங்கள் இந்த ஸ்தாபன அமைப்புக்குள் பிரவேசிக்கப்போகும் அந்த இடத்திற்கு வரப்போகிறது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள், சகோதரனே. அப்படித் தான். நீங்கள் ஸ்தாபனத்தை அமைத்துக்கொண்டு, மிருகத்தின் முத்திரையை எடுத்துக்கொண்டாக வேண்டும் என்ற நிலை வருகிறது. ஒன்று நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை அமைத்துக்கொண் டாக வேண்டும் என்ற நிலையோ, அல்லது ஸ்தாபனத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற நிலை வருகிறது. அதுதான் மிருகத் தின் முத்திரையைக் கொண்டு வரப்போகிறது. இதைச் செய்யா விட்டால், அது ஒரு பகிஷ்கரிப்பாக ஆகிவிடும். பாருங்கள்? “பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக் கரத்தின் மேலெங்கும் வரப்போகிற... ”இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு.'' வெளி. 3:10-11 108இப்பொழுது இந்த பெரிய சோதனையானது'', பூமி முழுவதின் மேலும் சோதிக்கும்படியான வரப்போகிற அந்த சோதனைக்காலமானது, உபத்திரவ காலத்திற்குள் செல்லுகிறது. சில நிமிடங்களுக்குள் அதைப்பற்றிப் பார்ப்போம். இது சோதனைக் காலத்திற்குள் செல்லுகிறது. வெஸ்லியின் காலத்தில் இந்த உபத்திரவமானது வரவில்லை. எனவே, எந்தக் காலத்தில் நாம் இருக்கிறோம்? வைக்கப்பட்ட இந்த 'வாசலானது'' என்னவா யிருக்கிறது? வெஸ்லியின் காலத்திற்கும் அதற்கடுத்த காலத் திற்கும் இடைப்பட்ட காலமாக இருக்கிறது. அங்கே சபையானது ஏற்கனவே லவோதிக்கேயா சபைக்காலத்திற்குள் முன்னோக்கிச் சென்றுவிட்டது. இடைப்பட்டதாக இருக்கிற இந்த சிறிய காலத்தில், கடந்த 35, 40 ஆண்டுக்காலத்தில், உள்ளே பிரவேசிக் கிறதற்காக மக்கள் முன்பாக, மக்களுக்கென ''திறந்த வாசலானது“ வைக்கப்பட்டுள்ளது; தேவன் மீதியாயிருக்கிற அச்சிறு கூட்டத்தை எடுத்து முத்தரித்து விடுகிறார். மற்றவர்களோ அனலுமின்றி குளிருமின்றி வெதுவெதுப்பாகப் போய்விடுகிறார்கள். தேவன் அவர்களை தன் வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போட்டுவிடுவார் கிரியையானது காலத்திற்கு முன்பாகவே விரைந்து செய்து முடிக்கப்பட்டு, சபையானது மேலே எடுக்கப்படும், அழிவுக்காக அந்திகிறிஸ்து வருகிறான். இது மிகவும் பரிபூரணமாக இருந்து, முழு வேதத்தோடும் சுற்றிலும் நன்கு பொருத்தமாக அமைந் துள்ளது. சரி, இப்பொழுது. 109அப்பொழுது, நித்திரை செய்யும் கன்னியர் தோன்றுவதும் கூட ஏற்படுகிறது. சபைக்காலங்களின் இறுதிக்கட்டமானது, பெந்தெகொஸ்தேயின் முதல் பாகத்திற்கு நகர்ந்து செல்லுகிறது. ஏனெனில் அவர்கள் மகா உபத்திரவத்திற்குள் செல்வார்கள். அது வெஸ்லியின் காலத்தில் வரவில்லை. 11ம் வசனம், அங்கே 11ம் வசனத்தில் 'ஜீவ கிரீடம்'' “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்... (என்ன? இக்காலத் திற்குப் பின்னால்)... ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு.'' வெளி.3:11 கிரீடம் என்னப்படுவது என்ன? கிரீடமானது என்ன? கிரீடம் என்றால், ஒரு நாட்டின்மேல் ஆட்சியை நீங்கள் பெற்றிருப்பதாக அர்த்தம். நீங்கள் கிரீடம் சூட்டப்பட்டீர்களென்றால், நீங்கள் ஒரு இராஜாவாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பாருங்கள்? நித்திய ஜீவனால் நாம் முடி சூட்டப்படுகையில், நாம் தேவனுடைய புத்திர ராயிருக்கிறோம். அப்பொழுது நம்முடைய ஆட்சியதிகாரத்திற்குட்பட்ட பிரதேசம் இப்பூமியாகும். “தேவனுக்கு முன்பாக உங்களை ஆசாரியர்களும், இராஜாக்களும் ஆக்கினார்.'' அது சரிதானே? 110புதிய எருசலேமில், எவ்வாறு பூமியின் இராஜாக்கள் அந்நகரத்தினுள் தங்களுடைய மகிமையைக் கொண்டு வந் தார்கள்? ஓ, அது அற்புதமாயிருக்கிறது. அதை நீங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினால்... நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கும் கிரீடங்கள் என்பதைப் பாருங்கள். தானியேல் 12:3 அதைப்பற்றிய பெரிய விவரணத்தைக் கொடுக்கிறதாயிருக்கிறது. நீங்கள் விரும்பினால் குறித்துக்கொள்ளுங்கள். நமக்கு இன்னும் சில நிமிடங்கள் மாத்திரம் உள்ளது. எனவே இதைப் பெற்றுக்கொள் வோம். தானியேல் 12ம் அதிகாரத்தில் அவன் என்ன கூறுகிறான் என்பதைப் பார்ப்போம். 12ம் அதிகாரம் 1ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல்... (இவர் யார் என்று நீங்கள் அறிவீர்களா?)... அக்காலத் திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம் வரும்..... (இது என்ன? இக்காலத்திற்குப் பிறகு வரும் உபத்திரவகாலமாகும்).... அக்காலத் திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும்... (கிரீடம்)... சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானி.12:1-3 111ஓ, சகோதரனே, அங்கேதான் உங்களுடைய ''கிரீடம்'' காணப்படுகிறது. அதுதான் நித்திய ஜீவனின் மகிமையான கிரீடமாகும். நித்திய ஜீவனின் கிரீடம். 12ம் வசனம், நாம் விரைவாகப் பார்ப்போம்... அதற்கு பிறகு நாம் போய்விடலாம் என்று எண்ணுகிறேன். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்... வெளி. 3:12 நாம் இதை விரைவாக பார்க்கப் போகிறோம். ஏனெனில் நான் ஏற்கனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் போய்விட்டேன். காலையில் கொஞ்சம் கூடுதலாக நீங்கள் உறங்கிக் கொள்ளலாம், இயலாதா? அம்மா, அப்பாவை கொஞ்சம் உறங்க விட்டுவிடுங்கள். நீங்கள் எழுந்து விடுகிறீர்கள், ஆனால் அப்பாவுக்கு எழும்ப சற்று கடினமாயுள்ளது. ஆனால் நீங்கள் அவரை சற்று கூடுதலாக உறங்கும்படி விட்டுவிடுங்கள். மெதுவாக நழுவிச் சென்று அவருக்கு காப்பி பானம் அல்லது அவர் பருகும் வேறெதாவது பானத்தை தயார் செய்துவிடுங்கள். அப்பொழுது அவர் சற்று மகிழ்ச்சியாக இருப்பார். “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்...” வெளி.3:12 ஒரு நிமிடம் இவ்வசனத்தை வார்த்தைக்கு வார்த்தையாக எடுத்துக்கொண்டு பார்ப்போம். இன்னும் சற்று நேரம் என்னைப் பொறுத்துக்கொள்வீர்களா? வெப்பமாக இருக்கிறதை நான் அறிகிறேன், இங்கும்கூட உஷ்ணமாக இருக்கிறதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதை பார்ப்போம். 112“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்...” வெளி.3:12 ''தூண்'' - ஒரு தூண் அல்லது ஒரு 'அஸ்திபாரம்'' தேவ னுடைய வீட்டின் ஆலயத்திலே அஸ்திபாரம். “ஆலயத்திலே'' அல்லது ”என் தேவனுடைய வீட்டிலே'. அது ஒரு தூணாக, அஸ்தி பாரமாக இருக்கிறது. இந்த மக்கள்தான், தாங்கள் கேட்ட வசனத்தை ஏற்றுக்கொண்டு (8ம் வசனம்) அஸ்திபாரத்திற்குத் திரும்பிச் சென்றவர்கள். எபேசுவின் சபைக்காலத்திலுள்ள எபேசியருக்கு எழுதின நிருபம் 2:19-ஐ நாம் இப்பொழுது எடுத்துக்கொள்வோம். நீங்கள் எபேசுவுக்கு திரும்பிப் போயாக வேண்டும், ஏனெனில், அது துவக்கமாயிருக்கிறது. அது சரிதானே? சரி, நாம் எபேசுவுக்கு திரும்பிச் செல்லுவோம். அது பவுல் நிறுவின சபையாகும். நாம் எங்கேயிருக்கிறோம் என்பதைப் பார்ப்போம். எபேசுவிலுள்ள சபை. நாம் இப்பொழுது திரும்பிச் சென்று, அங்கே அஸ்திபாரமானது என்னவென்றும், முதலாம் சபைக்காலத்தில் அஸ்தி பாரத்தைக் குறித்து பவுல் என்ன கூறியுள்ளான் என்பதையும் பார்ப்போம். பவுல் இப்பொழுது இங்கே எபேசுவிலுள்ள சபை யாரோடு பேசுகிறான்: “ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளு மாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, ... அஸ்திரபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக் கிறீர்கள்.... (லூத்தரன், பாப்டிஸ்ட்டுகளே... இப்பொழுது, பொறுத்துக் கொள்ளுங்கள். நான் வேறு வசனத்தை எடுத்துக்கொண்டு விட்டேனோ?) அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்தி பாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.'' எபே. 2:19-20 113உள்ளே பிரவேசித்தவை யாவும் இயேசுவாகிய வாசலால் தான் பிரவேசித்தன. “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ, அவனை... தூணாக்குவேன்''. அதாவது, அஸ்திபாரத்தின் பாகமாக்குவேன். ”நான் அவனுக்கு எண்ணத்தைக் கொடுப்பேன்? ஆதி முதற் கொண்டு இருந்து வந்த அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளின் உபதேசத்தில் அவனை நிலைநாட்டுவேன், அவனுக்கு வெளிப் படுத்துதலைக் கொடுப்பேன்''. அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் என்ன சொல்லுவார்கள்? அவர் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, என்று இவ்வித மாகத்தான் தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் அவரைக் குறித்து கூறினர். “இந்த சாத்தானுடைய சபைகள் அனைத்தையும் வென்று, தன்னை சுயாதீனமாக வைத்துக்கொண்டு, நேராக வாசலை உற்று நோக்குகிறவன் எவனோ, அவனை நான் தூணாக்குவேன். என் தேவனுடைய வீட்டில், எனது வார்த்தையின் அஸ்திபாரத்திலே மீண்டும் அவனை நிலை நாட்டுவேன்''. ஓ, என்னே! ”நான் அவனை அந்த தூணிலே வைப்பேன். வார்த்தையோடு சரியாக நிற்கும் அந்த அஸ்திபாரத்தில் அவனை வைப்பேன்'' என்கிறார். ஆமென். நான் அதை விரும்புகிறேன், சகோதரனே. அது நல்லதா யிருக்கிறது. நான் விசித்திரமாக நடந்து கொள்வது போல் தோன்றலாம். நான்... எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. சரி. .... அவனை ஆக்குவேன்... ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.... (அது என்னவாயிருக்கிறது? அவன் தூணாக இருப்பானெனில், இனி அவன் அகன்றுவிடமாட்டான். அவன் மணவாட்டியாயிருக்கிறான்! அது சரிதான்). வெளி. 3:12 எபேசுவின் காலத்தில் இருந்ததைப்போல்... அப்போஸ் தலர் நடபடிகளில் பவுல் போதித்தது போல.... இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். மணவாட்டியைப் பற்றிப் பார்க்கப் போகுமுன்னர், இன்னொரு வேதவாக்கியத்தைப் பற்றி உங்க ளுக்குக் குறிப்பிட நான் விரும்புகிறேன். நீங்கள் ஒரு தூணாக இருக்கப்போகிறீர்களென்றால், நீங்கள் எபேசுவுக்கு திரும்பிச் செல்லப்போகிறீர்கள். பவுல் இருந்த காலத்திற்குள் நீங்கள் திரும்பிச் செல்லப்போகிறீர்கள். பவுல் எபேசு சபைக்காலத் திற்குரிய தூதனாயிருந்தான். அது சபையின் ஆரம்பமாகும். அஸ்திபாரமானதொன்றாகும். அவன் எபேசியருக்கு போதித்த தென்னவெனில்: எவராவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தவிர வேறு எவ்விதத்திலும் ஞானஸ்நானம் பெற்றிருந்தால், மீண்டும் சரியானபடி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றாக வேண்டும் என்றான். அதுதான் சரியானமுறை. அப்போஸ் தலர் 19:5. கலாத்தியர் 1:8ல் அவன், ''ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனா யிருக்கக்கடவன்'' என்றான். 114ஆலயத்தில் இருந்த அவர்கள், மணவாட்டியாகவும் இருக்கிறார்கள். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 7ம் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, அவர்கள் மணவாட்டியா இல்லையா என்பதைப் பார்ப்போம். இவ்வதிகாரத்தில் நாம் இஸ்ரவேலில் மீதியான இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாம் அதைச்சற்று விட்டு விலகிச்சென்று, 12ம் வசனத்தில் உள்ளதைப்பற்றிப் பார்ப்போம். அது ஒரு பெந்தெகொஸ்தே கூட்டம் போல் இருக்கிறது. இந்த ஜனங்கள்தான்... நல்லது, நாம் 9ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். ஏனெனில் முதலில் உள்ளது இஸ்ரவேலருக்கு சம்மந்தமுள்ளதாகும். நாளைக்கு நாம் அதைப்பற்றி பார்க்கப்போகிறோம். இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல... ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... நிற்கக் கண்டேன்...'' வெளி. 7:9 இவ்வதிகாரத்தில் 4 முதல் 8 முடிய உள்ள வசனங்கள் இஸ்ரவேலரைப் பற்றியது, அவர்கள் ஆலயத்தைக் காக்கிற அண்ணகர்களாவர். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை காலை நாம் இதைப் பற்றிப் பார்ப்போம். அவர்கள் 12 கோத்திரத்தார்களாவர் என்பதைப் பாருங்கள். யூதா கோத்திரம், அவர் பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். ரூபன் கோத்திரத்தார், பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். காத் கோத்திரத்தார், அவர் பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். மேலும் லேவி, செபுலோன் மற்றும் பென்யமீன் - ஒவ்வொரு கோத்திரத்திலும் தலா பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். இஸ்ரவேலில் எத்தனை கோத்திரங்கள் உண்டு? (சபையார் பன்னிரண்டு என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). எனவே, பன்னீராயிரத்தை பன்னிரண்டால் பெருக்கினால் எவ்வளவு வருகிறது? இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள். அவர்கள்தான் இஸ்ரவேல் புத்திரராவார். அவர்கள் ஒவ்வொரு வரும் யூதர்கள் என்பதை யோவான் அறிந்திருந்தான். இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல... ஜாதிகளிலும், கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலு மிருந்து வந்ததும், ..... (புறஜாதிகள்தான் இவர்கள்) .... ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து,...'' வெளி.7:9 115அந்தக் கூட்டமான ஜனங்கள்தான், அக்காலங்களில் பரிசுத்த ஆவி சுவிசேஷத்திற்காக நின்ற பொழுது, சிங்கங்களினாலும் மற்றும் காரியங்களினாலும் பட்சிக்கப்பட்டு தங்கள் இரத்தத்தை சிந்தினவர்களாக இருந்த எளிமையான சிருஷ்டிகள் ஆவர். ஆயிரமாயிரமான சிறு குழந்தைகள் தெருக்களில் தங்கள் மண்டைகள் உடைக்கப்பட்டு உயிர் நீத்தனர். ஆயினும் அவர்கள் நிலை நின்றனர். அவர்கள் வெண்ணங்கி தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய் நின்றிருந்தனர். ஓ, என்னே! “அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித் தார்கள். “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குடியானவருக்கும் உண்டாவதாக...'' தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பவர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு; வெளி.7:10-11 கவனியுங்கள், இது ஒரு பெந்தெகொஸ்தே கூட்டம்தானா இல்லையா என்பதைப் பாருங்கள். “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (வ்யூ! இங்கே எனக்கு ஒரு காம்ப் கூட்டம் உண்டாயிருக்கிறது, அல்லவா?) அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். (“யோவா னே, நீ ஒரு யூதன், உனக்கு அந்த அனைத்து பன்னிரண்டு கோத்திரத்தாரையும் தெரிந்திருக்கிறது. இப்பொழுது இந்த ஜனங்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அவர்கள் வெண்ணங்கி தரித்தவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள்? இவர்கள் பென்யமின் கோத்திரத்தாரோ, அல்லது மற்றவர்களோ அல்ல, இவர்கள் யார்? என்று கேட்கிறான்) வெளி.7:12-13 116யோவான் அதைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்: அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கு தெரியும் என் றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்தி லிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக் குடியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்த வர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்கா சனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். (வீட்டின் உள்ளே ). (இவர்கள் சற்று பசியடைந்திருப்பார்கள் போலும், இல்லையா?) இவர்கள் இனி பசியடைவதுமில்லை, (மகிமை!) இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்று களண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். (அதோ அவர் இருக்கிறார், அதோ மண வாட்டியிருக்கிறாள். ஓ, என் னே! எவ்வளவு அழகாயிருக் கிறது! அது மணவாட்டி). வெளி.7:14-17 12ம் வசனத்தை இப்பொழுது நாம் பார்ப்போம். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதைப்பற்றி பார்த்து, அதை விட்டுவிடாதிருப்போம். “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை (மணவாட்டி அங்கே மணவாளனுடன் நின்று கொண்டிருக்கிறாள்). வெளி.3:12 ஆ, ஓ, அதைக்குறித்து பார்க்கும்படி நமக்கு சமயம் உண்டா யிருந்தால் அது எப்படியாயிருக்கும்! அதை நான் புத்தகத்தில் வெளியிட வைத்திருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் “பூமியின் இராஜாக்கள் யாவரும் தங்களுடைய கனத்தை அதற்குள் கொண்டு வந்தார்கள்'' என்று கூறுகிறது. இக்காரியம், கோத்திரத் தாருக்கு மற்றவர்களெல்லாம் தசம பாகங்களைக் கொண்டு வந்த தைப்போல் உள்ளது. ஒரு பௌர்ணமியிலிருந்து இன்னொன்று வரையிலும், ஒரு ஓய்வு நாளிலிருந்து மற்றது வரையிலும், அவர் கள் தொழுது கொள்ளும்படி போனார்கள். அது எப்படியான நாளாயிருக்கும்! “...அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை...'' என்பதைப் பார்ப்போம். “என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்... என் தேவனுடயை நாமத்தையும்... அவன் மேல் எழுதுவேன்.” வெளி.3:12 தேவனுடைய நாமமானது என்ன? அது 'இயேசு'வாகும். இதை நீங்கள் குறிப்பெடுத்துக்கொள்ள விரும்பினால் (கொஞ்ச நேரம் கழித்து நாம் அதை பார்க்கப் போகிறோம்) “இயேசு''! எபேசியர் 3:15ல், பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ளவை களெல்லாம் இயேசு என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். அது சரிதான். அது சரிதான். “...என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்.... (ஓ! நீங்கள் காண்பீர்களானால், அவையாவும் அதே நாமத்தைத்தான் உடையனவாய் உள்ளன என்பதை நீங்கள் ஏற்கனவே கண்டு பிடித்திருக்கலாம்).... அவன் மேல் எழுதுவேன்.” வெளி.3:12 117'நகரம்''-அவர் தொடர்ந்து , ''அது புதிய எருசலேம்'' என்கிறார். அது புதிய எருசலேம் என்பதைப் பாருங்கள். “நான் அவன்மேல் புதிய எருசலேமின் நாமத்தையும் எழுதுவேன்'' என்கிறார். மணவாட்டி, அல்லது சபைதான் புதிய எருசலேமாகும். எத்தனை பேர்கள் அதை அறிவீர்கள்? சபைதான் புதிய எருசலே மாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் அதை நிரூபிப்போமாக. வெளிப்படுத்தின விசேஷம் 21:21ம் அதிகாரம் என்று எண்ணுகிறேன். அவ்வதிகாரத்தை நாம் எடுத்துப்பார்த்து, அதுதான் அது என்பதை நாம் உங்களுக்கு காண்பிப்போம். ''எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்'' என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரம். ஓ, இதற்கு செவிகொடுங்கள். (தேவனுடைய நாமத்தையுடைய) அவருடைய புதிய நகரமானது என்ன வென்று காண விரும்பினால், இதற்கு கவனமாக செவி கொடுங்கள். பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.“ வெளி.21:1-2 இந்த புதிய - புதிய சபையானது புறஜாதி சபையாகிய மணவாட்டியாகும். மணவாட்டியானவள் புறஜாதியிலிருந்து வந்தவள். புறஜாதியாருக்கு அவரது நாமம் உள்ளது. அவர் தமது நாமத்திற்காக புறஜாதியிலிருந்து ஒரு ஜனத்தை பிரித்தெடுத்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசியாவிடில், அப்போஸ்தலர் 15:14க்கு திருப்பி அங்கே பாருங்கள். ஒரு வினாடி நீங்கள் அப்.15:14-ஐ எடுத்துக் கொள்வீர்களானால், அங்கே நாம் அதைக் குறித்துப் பார்த்துவிட்டு, முடித்துக் கொள்வோம். “அவர்கள் பேசி முடித்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல் முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தை சிமியோன் விவரித்துச் சொன்னாரே.“ (நல்லது, அதோ அங்கே அவள் இருக்கிறாள் ஓ!). அப். 15:13-14 இப்பொழுது இது முடிவானதற்கு மிக அருகில் வந்து விட்டது என்று நான் எண்ணுகிறேன். அது அவர்தான் என்று கூறுவதோடு இதை நாம் முடித்துக்கொள்வோம். “...என் தேவனுடைய நாமத்தையும்... என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்... அவன்மேல் எழுதுவேன்.” (இதன் நாம மெல்லாம், இயேசு, இயேசு, இயேசுதான். மணவாட்டி இயேசுவை விவாகம் செய்து கொண்டு விட்டபடியால், அவள் திருமதி இயேசு என்று ஆகிவிடுகிறாள். பாருங்கள்). வெளி.3:12 இன்றிரவில் இக்கட்டிடத்தில், அருமையான உயர் மதிப்பிற்குரிய ஸ்திரீகள் வீற்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள், எனக்குச் சொந்தமான ஒரேயொருத்திதான் இருக்கிறாள், அவளே என் நாமத்தைத் தரித்தவளாயிருக்கிறாள், நான் சொல்லுவதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன். அவள் மட்டுமே என் பெயரைத் தரித்தவளாயிருக்கிறது போல், அவ ருடைய மணவாட்டியும் அவருடைய நாமத்தை தரித்தவளாயிருக்கிறாள். “...என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் எழுதுவேன்.” வெளி.3:12 118அத்தோடு அதை விட்டுவிடுகிறேன். அங்கே 'அவன்'' என்று ஒருமையில் கூறப்பட்டுள்ளதை கவனியுங்கள். நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 2:17ஐ ஒரு நிமிடம் பார்த்தீர்களானால்; அதை ஒரு வினாடி மறுபடியும் கவனித்துப் பாருங்கள். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளு கிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக் கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவ னேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.” வெளி.2:17 நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? அவர் அற்புதமானவரா யில்லையா? நான் நேசிக்கிறேன், அவரை நேசிக்கிறேன் அவர் முந்தி என்னில் நேசம் கொண்டு கல்வாரி சிலுவையில் என் இரட்சிப்பை கிரயத்திற்குக் கொண்டதால். கடிந்து கொள்ளுதல் மற்றும் உள்ளவைகள் உள்ள ஒரு கூட்டத்திற்குப் பிறகு, நான் எப்பொழுதும் ஆவியில் பாடிட விருப்பங்கொண்டுள்ளேன். உங்களுக்கும் அவ்வாறுதானே? ஓ, அப்பொழுது எவ்வளவாய் நான் ஆவியில் பிரவேசிக்க விரும்பு கிறேன்! வார்த்தை! பாருங்கள், வார்த்தையானது இப்பொழுது விழுந்திருக்கிறது, இப்பொழுது, அதற்குத் தேவையானதெல்லாம் கொஞ்சம் ஈரப்பசைதான். பாருங்கள், கொஞ்சம் துதி செலுத்துதல், ஸ்தோத்திரங்கள் செய்யவேண்டும், அப்பொழுதுதான் அது முளைத்து வளர ஆரம்பிக்கும். நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? நமது கைகளை உயர்த்தி அப்பாடலைப் பாடுவோம்: என்னில் அவர் முந்தி நேசம் கொண்டும், என் இரட்சண்யத்தை, கல்வாரி சிலுவையில் கிரயத்திற்கு கொண்டதால், நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஓ, நாம் நம் தலைகளை வணங்கி, இவ்வாறு கூறுவோம்: “பிதாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நாங்கள் உம்மை நேசிக்கிறோம். ஓ, நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம்! கர்த்தாவே, நாங்கள் உமக்கு வெகுவாக நன்றி செலுத்துகிறோம். எங்களது எளிய மானிட இதயங்களால், உம்முடைய சொந்த இரத்தத்தால் எங்களை எவ்வாறு கழுவினீர் என்பதைப் பற்றி, எங்களுக்குள்ளாக நாங்கள் எவ்வாறு உணருகிறோம் என்பதைப் பற்றி, விவரிக்க இயலாதபடி இருக்கிறது. நாங்கள் அன்னியரா யிருந்தோம், கர்த்தாவே. நாங்கள் இவ்வுலகின் காரியங்களை நேசித்து, உலகத்தின் காரியங்களால் முற்றிலும் கலந்துபோனவர்களாக காணப்பட்டோம்; அப்பொழுது நீர் இறங்கி வந்து, உம்முடைய கிருபையினால், உம்முடைய பரிசுத்த விலையேறப் பெற்ற கரங்களால், பாவச்சேற்றில் மூழ்க்கிக்கிடந்த எங்களை தூக்கியெடுத்து, எங்களைத் தெரிந்துகொண்டு, எங்களை கழுவி சுத்திகரித்து, எங்களில் புதிய ஆவியை வைத்து, உன்னதத்தின் காரியங்களின்மேல் நாங்கள் பாசம் கொள்ளும்படி செய்தீர். ஆகவே நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம், கர்த்தாவே! இந்த காலமானது வஞ்சிக்கப்பட்ட நிலையில் உள்ளது, எனவே இவ்வுலகில் எங்களுக்கு எதுவும் வைத்து வைக்கப் படவில்லை, கர்த்தாவே, உலகத்திற்கு இனிமேல் ஒன்றும் இல்லை, அது அதன் முடிவுக் காலத்தில் உள்ளது. வேதாகமத்தின் வாயிலாக, ஒவ்வொரு காலமும் கடந்து போய்விட்டதை நாங்கள் காண்கிறோம். நாங்கள் இப்பொழுது முடிவான வேளையில் இருக்கிறோம். நேரமானது விரைவாகப் போய்க்கொண்டிருக் கிறது. இயேசு வரப்போவது இன்னும் அதிக தூரத்தில் இல்லை. ஓ தேவனே, எங்கள் இதயங்களை கொழுந்துவிட்டு எரியச் செய்யும், நாங்கள் அசையாமல் அமர்ந்திருக்கவேண்டாம். மகத்தான பரிசுத்தவானாகிய பவுல் இன்றிரவில் இங்கே இருந்தானெனில், இப்பொழுது இருக்கிற காரியங்களை அதின் போக்கில் பார்த்தால், அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கிறேன். விடியற்கால வெளுப்பு வரும் முன்னர் அம்மனிதனை அவர்கள் சிறையில் அடைத்து வைத்திருக்கக்கூடும். அவன் வெளியே வந்து, கர்த்தருடைய வருகைக்காக ஆயத்தமாக இருக்கும்படி மக்களுக்குச் சொல்லிக்கொண்டு இருந்திருப்பான். இந்த சமயத்தில், கர்த்தாவே, அநேகர் வியாதிப்பட்டவர் களாக இருக்கின்றனர். ஏனெனில், இங்கே ஜெபக்கைக் குட்டைகளும், ஜெப வேண்டுகோள்களும் வைக்கப்பட்டுள்ளன. பிதாவே, அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கவேண்டுமென நான் ஜெபிக்கிறேன். அது உம்முடைய ஊழியத்தின் ஒரு பாகமாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ''விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும்'' என்ற சத்தியத்தை, பிசகில்லாத - வழுவாத சத்தியம்தான் என்று நீர் உம்முடைய ஊழியத்தின் மூலம் நிருபித்தீர். அவைகளை வியாதிப்பட்டவர் களுக்கு அனுப்பி, அசுத்த ஆவியுள்ளவர்கள் அவர்களை விட்டு வெளியேறி, அவர்கள் குணமடைந்தனர். ஏனெனில் மக்கள் ஜீவனுள்ள தேவன் பேரில் விசுவாசம் கொண்டிருந்தனர். பிதாவே, அவர்களை கர்த்தாவே, உம்மிடம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒப்படைக்கிறேன். இன்றிரவில் அதை அனுக்கிரகித்தருளும். இப்பொழுதும், கர்த்தாவே, நீர் எங்களுடைய ஆத்து மாக்களை உம்முடைய கரத்தில் எடுத்து, எங்களை கழுவி, எங்களை பெலப்படுத்தியருளும் என்று ஜெபிக்கிறேன்; ஏனெனில், கறை திரையற்ற ஒரு சபைக்காகத்தான் வருகிறீர் என்று வார்த்தையானது கூறியிருக்கிறது. பரிசுத்த ஆவியாகிய இஸ்திரிப்பெட்டி, எங்களை நன்கு அழுத்தி, எங்களிலிருக்கிற சுருக்கங்களையெல்லாம் நீக்கி விடட்டும், அப்பொழுது, நாங்கள் மனுஷகுமாரனுடைய வருகைக்கு ஆயத்தமானவர்களாக இருப்போம். இப்பொழுதும், பிதாவே, எங்கள் மேல் உமது ஆசீர்வாதங்கள் தங்கியிருக்கவேண்டுமென ஜெபிக்கிறோம். நாங்கள் இன்றிர வில் நின்றிருந்து உமக்கு எங்களது இதயங்களை அளிக்கிறோம். நாங்கள்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி).